மேஷம்:
இந்த புத்தாண்டு உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக அமையப்போகிறது. நீங்கள் நினைத்த காரியத்தை செயல்படுத்த இந்த வருடம் முழுவதும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். வெற்றியை அடையாமல் ஓய மாட்டீர்கள். திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் உங்கள் வீட்டில் நடை பெற்று மகிழ்ச்சியான சூழ்நிலையும் நிலவப்போகிறது. மொத்தத்தில் இந்த வருடம் யோகத்தை அள்ளி தரப் போகிறது.
உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
மேஷ ராசி 2020 புத்தாண்டு பலன்கள்
ரிஷபம்:
உங்கள் ராசிக்கு இதுவரை நடந்து கொண்டிருந்த அஷ்டமசனியானது இந்த வருடம் விலகப் போகிறது. இதனால் உங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்தில், இந்த வருடம் எந்த தடையும் இருக்காது. கடந்த வருடங்களாக நீங்கள் அடைந்த கஷ்டத்துக்கு எல்லாம் ஒரு விடிவு காலத்தை இந்த வருடம் கொடுக்கப் போகிறது. உங்களுக்கு இருக்கும் கடன்களை எல்லாம் தீர்த்து விட்டு நிம்மதியாக வாழக்கூடிய வருடமாக தான் இது அமையும்.
உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
ரிஷப ராசி 2020 புத்தாண்டு பலன்கள்
மிதுனம்:
இந்த வருடம் உங்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களை கூட தைரியமாக எதிர்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக உண்டான தடைகள் எல்லாம் நீங்கிவிடும். முன்னேற்றத்திற்கான ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்பு சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அவசரப்பட்டு எந்த வார்த்தையும் பேசிவிட வேண்டாம்.
உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
2020 புத்தாண்டு பலன்கள் – மிதுனம்
கடகம்:
இந்த வருடம் உங்களுக்கு பல நன்மைகளை தரப் போவதாக இருந்தாலும் சில சங்கடங்களும் ஏற்படும். ஆனால் உங்களின் விடா முயற்சியால் அந்த சங்கடங்களை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டு வெற்றி அடையப் போகிறீர்கள். உங்கள் உடல் நலனில் மட்டும் அதிக அக்கறை கொள்ள வேண்டும். உங்கள் தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம்.
உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
2020 புத்தாண்டு பலன்கள் – கடகம்
சிம்மம்:
வெற்றிப் படிகளை ஏற கூடிய வருடமாக தான் இது உங்களுக்கு அமையப் போகிறது. வெற்றி வாய்ப்புகள் தானாகவே உங்களை தேடி வரும். கடந்த வருடங்களில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இந்த வருடம் தீரப்போகிறது. கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க இந்த வருடம் வாய்ப்புகள் உள்ளது.
உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
2020 புத்தாண்டு பலன்கள் – சிம்மம்
கன்னி:
இந்த வருடம் உங்களுக்கு அஷ்டம சனி விலகப் போகிறது. இதுநாள்வரை தடைப்பட்டிருந்த நல்ல காரியங்கள் இந்த வருடத்தில் நடந்து முடியும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் விடிவு காலம் பிறக்க போகிறது. உங்கள் தேவைக்கு அதிகமாகவே பணவரவு வரப்போகிறது. வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
2020 புத்தாண்டு பலன்கள் – கன்னி
துலாம்:
இந்த வருடம் உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி. சொந்த வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கான யோகம் உள்ளது. அர்த்தாஷ்டம சனி உங்களுக்கு இருந்தாலும் பிரச்சனைகள் உங்களை அதிகமாக தாக்காது. விடா முயற்சியின் மூலம் செயல்படுவதுடன் நல்ல முன்னேற்றமான வாழ்க்கையை அடையலாம்.
உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
2020 புத்தாண்டு பலன்கள் – துலாம்
விருச்சிகம்:
இதுநாள் வரை உங்களை சங்கடப்படுத்திய சனிபகவான் உங்களை விட்டு இந்த வருடம் விலகப் போகிறார். பெருமூச்சுவிட்டு அமரப்போகும் வருடமாக அமையும். உங்களுக்கு இருந்த துன்பங்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை தரப்போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. வெற்றி நிச்சயம்.
உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
விருச்சிக ராசி 2020 புத்தாண்டு பலன்கள்
தனுசு:
உங்களின் ஜென்ம சனி உங்களை விட்டு இந்த வருடம் விலகப் போகிறது. உங்களுக்கு இருந்தப் பிரச்சினைகளெல்லாம் இந்த வருடம் தீரப்போகிறது. எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற மனோதைரியம் உங்களுக்கு இருப்பதால், எந்த சங்கடங்களும் வராது. மன கஷ்டமும் இருக்காது.
உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
2020 புத்தாண்டு பலன்கள் – தனுசு
மகரம்:
இந்த வருடம் நீங்கள் எந்த முடிவினை எடுத்தாலும் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நன்மையை தரும். அவசரப்பட்டு எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். வருமானம் அதிகமாக இருந்தாலும் அதற்கான செலவுகளும் அதிகமாக தான் இருக்கும். நிதானமாக செயல்பட வேண்டிய காலம்தான் இந்த வருடம்.
உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
2020 புத்தாண்டு பலன்கள் – மகரம்
கும்பம்:
இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்க போகிறது. பயப்பட வேண்டாம். எதிலும் நிதானமாகவும், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அவசரப்பட்டு எதிலும் அதிக முதலீடு செய்துவிட வேண்டாம். நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே செய்து வந்தால் எந்த பிரச்சனையும் வராது. வீண் வார்த்தைகளை பேச வேண்டாம்.
உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
2020 புத்தாண்டு பலன்கள் – கும்பம்
மீனம்:
இந்த ஆண்டு உங்களுக்கு அதிக லாபத்தை அள்ளித் தரப் போகிறது. உங்களின் பேச்சுக்கு அதிகமான மதிப்பு கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத அளவிற்கு உங்களது சம்பள உயர்வு இருக்கும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபமானது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வரும். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் கூடும்.
உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்:
2020 புத்தாண்டு பலன்கள் – மீனம்
English Overview:
2020 New year Rasi Palan:
Here he have 2020 New year Rasi Palan in Tamil or new year rasi palangal in Tamil. It is also called as 2020 puthandu palangal in Tamil or 2020 puthandu rasi palangal. Here we have 2020 Rasi Palan for all Rasi in Tamil language.