2021 போகி பண்டிகை அன்று எரியும் நெருப்பில் தவறியும் இதை போட்டு விடாதீர்கள்! போகியில் கட்டாயம் போட வேண்டிய பொருட்கள் என்னென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

bogi-vinayagar

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’, என்கிற பழமொழி போகி பண்டிகைக்கு கூறப்படும் பொதுவான கருத்தாகும். அந்த காலத்தில் நம் முன்னோர்களுக்கு தை மாதம் ஒன்றாம் நாள் புத்தாண்டாக இருந்து வந்துள்ளது. எனவே போகி பண்டிகை அன்று ஆண்டின் இறுதியாக கருதப்பட்டது. ஆண்டின் இறுதியில் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை கழித்து விடுதலும், புதிய பொருள்களை புகுத்துதலும் செய்யப்பட்டது. இந்த பருவத்தில் வரக்கூடிய நோய்கள், திருஷ்டிகள், தீய சக்திகள் தாக்காமல் இருக்க காப்பாக வீட்டு வாசலில் வேப்பிலை, சிறுபீளை, தும்பை இலை, கருந்துளசி, ஆவாரம்பூ ஆகியவற்றை கொத்தாக கட்டப்படும்.

போகியில் பொருட்கள் மட்டுமல்லாமல், மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பழைய விஷயங்களை நீக்கியும், புதிதாக பிறந்தது போல் புதிய ஆண்டை வரவேற்க புதிய எண்ணங்களுடன் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகவும் பார்க்கப்பட்டது. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து அந்த பண்டிகை மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது நல்ல விஷயமாகும். 2021இல் இந்த போகி பண்டிகையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

போகி பண்டிகையின் பொழுது அதிகாலையில் எழுவது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். மற்ற நாட்களை விட போகி பண்டிகையின் பொழுது, பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நெருப்பு மூட்டி பழைய பொருட்களை கொளுத்தி, அதனை கொண்டாடும் விதமாக மேளம் அடித்து, ஆட்டம் பாட்டத்துடன் குடும்பமாக பங்கு கொள்வார்கள். போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளே எந்தெந்த பொருட்களை நெருப்பில் போட வேண்டும் என்பதையும் எடுத்து வைத்து விட வேண்டும்.

காலையில் 5.45 மணிக்குள் இதை செய்வது தான் முறையாகும். இப்போது உலகையே அச்சுறுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் போகி பண்டிகையில் அழிக்கப்பட்டுவிடும். இதனுடைய புகையை சுவாசிப்பவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு ஏற்கனவே சுவாச பிரச்சினைகள் இருந்தால், போகிப் பண்டிகையில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். வீட்டில் இருந்து நீங்கள் எரிக்கும் பொருட்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தப்பித் தவறியும் போட்டு விடாதீர்கள். பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் வரும் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்படும் அபாயம் உண்டு.

- Advertisement -

அது போல் கட்டாயம் எரிக்க வேண்டிய சில பொருட்களும் உண்டு. வீட்டில் பழைய ஆண்டின் காலண்டர்கள் வைத்திருப்போம். பழைய செருப்புகள், உபயோகப்படுத்த முடியாத துடைப்பங்கள், முறம், பாய், கிழிந்த போர்வைகள் என்று தரித்திரத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த பொருட்களை கட்டாயம் போகியன்று எரித்து விட வேண்டும். வீட்டில் குப்பைகளை, எப்போதாவது தேவைப்படும் என்று சேர்த்து வைத்துக் கொண்டே இருக்காதீர்கள். அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை, வீட்டில் தரித்திரம் தான் ஏற்படும். எனவே சற்றும் யோசிக்காமல் இந்த பொருட்களை எல்லாம் தீயில் போட்டு எரித்து விடுங்கள்.

bogi

நீங்கள் பயன்படுத்திய கிழிந்த உடைகளை கட்டாயம் போகியில் போட்டு எரியுங்கள். கிழிந்த உடைகளை ஒருபோதும் வீட்டில் வைத்திருக்காதீர்கள், இதனால் மேலும் மேலும் கஷ்டம் தான் வரும். அதனை தூக்கி எரியவும் மனம் வராது, நீங்கள் உடுத்தவும் மாட்டீர்கள். மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கும் பொழுது கிழிந்த உடைகளை கொடுக்கக்கூடாது. கிழிந்த உடை, பழைய உடைகள் தானம் கொடுக்கும் பொழுது நம்மிடம் இருந்த தோஷங்கள், கர்மாக்கள் அவர்களையும் சாரும். இந்த பாவத்தை ஒரு போதும் நீங்கள் செய்துவிட வேண்டாம்.

vasthira-dhanam

பழைய கிழிந்த துணிகளை தானம் செய்வதற்கு புதிய ஆடையை வாங்கிக் கொடுத்தால் இன்னும் நல்லது தானே. தானத்தில் வஸ்திர தானம் பெரும் புண்ணியத்தை சேர்க்கும். அது புதியதாக இருப்பது தான் நல்லது. சரி நல்ல உடை தான், ஆனால் எனக்கு அளவு சரியாக இல்லை என்று வைத்திருக்கிறேன் என்றால் அதனை தானம் செய்யலாம். நீங்கள் ஒரு முறை போட்ட உடையை அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கும் பொழுது, உங்களுடைய தோஷம் அவர்களை தாக்காமல் இருப்பதற்கு, உப்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அலசி காய வைத்து அதன்பின் அதனை தானமாக மற்றவர்களுக்கு கொடுக்கலாம். உப்பு தண்ணீரில் வஸ்திர தோஷம் நீங்குவதாக ஐதீகம் உள்ளது.

இதையும் படிக்கலாமே
பெருமாள் அருள் பெற்ற இந்த 3 பொருட்களை வீட்டு வாசலில் கட்டுவதால் செல்வ வளம் பெருகுமாம்! நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.