பெருமாள் அருள் பெற்ற இந்த 3 பொருட்களை வீட்டு வாசலில் கட்டுவதால் செல்வ வளம் பெருகுமாம்! நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

perumal-pachai-karpooram

பெருமாள் பக்தர்கள் அடிக்கடி திருப்பதி செல்வது வழக்கமாக வைத்திருப்பார்கள். திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பது ஐதீகம். அடிக்கடி திருப்பதி சென்று வந்தால் மனதில் ஒருவிதமான நிம்மதி பிறப்பதை நம்மால் உணர முடிந்துள்ளது. திருப்பதியில் பண மழை பொழிய பல காரணங்கள் கூறப்பட்டாலும், திருப்பதி வடக்கு திசையில் இருப்பதால் தான் அங்கு செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது என்கிற கூற்றும் ஒருபுறம் நிலவுகிறது.

thirupathi

வடக்கு என்பது குபேரனின் திசையாக இருப்பதால் வடக்கிலிருக்கும் திருப்பதியில் குபேர சம்பத்து உள்ளது. இத்தகைய பெருமை பெற்ற திருப்பதிக்கு நீங்கள் செல்லும் பொழுது, இதனை செய்து விட மறந்து விடாதீர்கள்! நீங்கள் இப்படி செய்வதால் உங்கள் வீட்டிலும் செல்வ மழை பொழியும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நாம் திருப்பதிக்கு செல்லும் பொழுது வீட்டில் பெருமாளை பூஜை செய்து விட்டு தான் புறப்படுவோம் அல்லவா? திருப்பதி செல்லும் முன் வீட்டில் பெருமாளுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்வது மிகவும் முக்கியம். அந்த பூஜையின் பொழுது மஞ்சள் துணியில் இரண்டு ஏலக்காய், இரண்டு பட்டை, மற்றும் இரண்டு துண்டு பச்சைக் கற்பூரம் வைத்து முடிந்து கொள்ள வேண்டும். இந்த முடிப்பை பூஜையில் வைத்து செல்வம் சேர வேண்டும் என்கிற பிரார்த்தனையை பெருமாளிடம் வைத்து வழிபட வேண்டும்.

pachai karpooram

பின்னர் நீங்கள் திருப்பதி செல்லும் பொழுது அந்த முடிப்பையும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதனை வேறு எங்கும் வைத்து விடாமல், உங்களுடனேயே வைத்திருந்து பெருமாளை தரிசனம் செய்யும் வரை பாதுகாக்க வேண்டும். பின்னர் பெருமாள் தரிசனம் முடிந்த பிறகு, வீட்டிற்கு அதனை கொண்டு வந்து விட வேண்டும். வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக நாம் செய்ய வேண்டியது அந்த முடிப்பை பூஜை அறையில் வைத்து பெருமாளை மீண்டும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த முடிப்பை எடுத்து நம்முடைய வீட்டு நிலை வாசலில் கட்டி விட வேண்டும்.

- Advertisement -

அடுத்த முறை திருப்பதி செல்லும் வரை அந்த முடிப்பை அப்படியே விட்டு வைக்க வேண்டும். அதில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி பெற்றுள்ளது. இந்த பொருட்கள் திருப்பதிக்கு சென்று பெருமாளுடைய அருளைப் பெற்று வந்திருப்பதால், நம் வீட்டை காக்கும் அரணாகவும், கடன்கள் நீங்கி, வருமானம் பெருகி, செல்வ வளம் அதிகரிக்கவும் செய்யும். எனவே அடுத்த முறை திருப்பதி செல்லும் முன் இதனை செய்ய மறந்து விடாதீர்கள்.

manjal-mudichu

திருப்பதியில் இருக்கும் வேங்கடவனை நினைத்த நேரத்தில் நம்மால் தரிசனம் செய்ய முடியாது. அவர் அழைக்கும் பொழுது தான் நாம் செல்ல முடியும். அப்படி திருப்பதி செல்லும் பொழுது நாம் இதனை செய்வதால் அதிர்ஷ்டத்தை நம் பக்கம் வரவழைக்க முடியும். குறைந்தது 3 மாதம் ஒரு முறையாவது திருப்பதி சென்று வருவது மிகவும் நல்ல பலன்களை நமக்கு கொடுக்கும் என்பார்கள்.

thirupathi

ஒருமுறை சென்று வர நினைத்தால் அதனை உடனடியாக செய்து விட வேண்டும். கொஞ்சம் தள்ளிப் போட்டால் கூட உங்களால் அதன் பிறகு செல்ல முடியாமலேயே போய் விட வாய்ப்புகள் உண்டாகும். திருப்பதியில் கொடுக்கப்படும் பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை செய்து அனைவருக்கும் கொடுத்து விட்டு, நீங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
இன்று மாலை இந்த 2 பொருட்களையும், பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால், உங்கள் வீட்டில் பண கஷ்டம் உடனடியாக தீரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.