நாளை 31/12/2021 வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமை! உங்களை பிடித்த பீடை, தரித்திரம் ஒழிய இந்த 3 விஷயங்களை செய்யுங்கள்.

vasal-lakshmi-lemon
- Advertisement -

இந்த வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் திகதி வெள்ளிக் கிழமையில் நிறைவடைய இருக்கிறது. வெள்ளிக் கிழமையில் நிறைவடையும் இந்த நல்ல நாளில் இவ்வாண்டு முழுவதும் நம்மை பிடித்த தரித்திரங்களும், பீடைகளும் ஒழிய செய்ய வேண்டிய முக்கிய மூன்று விஷயங்களைப் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

வருடம் முழுவதும் நமக்கு நன்மைகளும், தீமைகளும் கலந்து தான் இருக்கின்றன. எனினும் வருடக் கடைசியில் நமக்கு ஒரு உற்சாகம் பிறப்பது இயல்பாக நடைபெறுகிறது. இனி வரும் இந்த புதிய வருடத்தில் நாம் நன்றாக இருப்போம் என்கிற நேர்மறை சிந்தனைகள் பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ள இந்த வருடத்தின் கடைசி நாளில் இப்படி செய்வதன் மூலம் நமக்கு இன்னும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

- Advertisement -

ஆன்மீக ரீதியாக வருடத்தின் கடைசி நாளில் இவ்வாறு செய்ய குடும்பத்தில் இருந்து வந்த திருஷ்டிகள் கழியும். எதிர்மறை சக்திகள் நம்மை விட்டு நீங்கி நேர்மறை சக்திகள் பெருக துவங்கும். இதனால் வரவிருக்கும் 2022ஆம் ஆண்டின் துவக்கம் நமக்கு நன்றாக அமையும். அன்று வெள்ளிக்கிழமை அன்று பூஜைகள் கட்டாயம் செய்ய மறக்காதீர்கள். பூஜையில் ஒரு பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீருடன் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள்.

அரை டீஸ்பூன் கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை நன்கு கரையவிட்டு பூஜையில் வைத்து விடுங்கள். அதே போல வெள்ளிக்கிழமையில் கல் உப்பு வாங்கினால் செல்வம் சேரும் என்கிற ஐதீகம் உண்டு. எனவே வீட்டில் செல்வ மழை பொழிய உங்களிடம் உப்பு இருந்தாலும், கல் உப்பை அன்றைய நாளில் வாங்கி ஜாடியை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். குபேரருக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் வாங்குவதும் செல்வச் செழிப்பை அதிகரிக்க செய்யும். உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு ஊறுகாயை வாங்கி ஜாடியில் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அன்றைய நாளில் சூரிய உதயத்திற்கு முன்பாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து முடித்து பூஜைகளை துவங்குவதற்கு முன்பு நிலை வாசலை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். மேலும் நிலை வாசலுக்கு இருபுறமும் எலுமிச்சையை இரண்டாக வெட்டி மஞ்சள் மற்றும் குங்குமம் தடவி வைத்துக் கொள்ளுங்கள். மாலையில் நீங்கள் பூஜை நிறைவு செய்த பின்பு அதனை திருஷ்டி கழித்து போடலாம்.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் அந்தந்த இடங்களில் பூஜைகள் செய்து ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை நிரப்பி புத்தம் புதிய எலுமிச்சை பழத்தை போட்டு வைக்கலாம். இது உங்கள் வாடிக்கையாளர்கள் கடை மீது வைக்கும் திருஷ்டிகள் கழிய உதவும். மாலையில் பூஜைகள் நிறைவு செய்த பின்பு பூஜையில் நீங்கள் வைத்த மஞ்சள் தண்ணீரை வீடு முழுவதும் மாவிலை கொண்டு தெளித்து விடுங்கள். பிறகு வீட்டில் இருக்கும் அனைவரையும் ஓரிடத்தில் கிழக்கு பார்த்து அமர வைத்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் மூத்தவர்களின் கைகளால் கொஞ்சம் கல் உப்பு, கொஞ்சம் கடுகு, கொஞ்சம் மிளகாய் வற்றல் ஆகியவற்றை வைத்துக் கொண்டு மும்முறை வலது புறமும், மும்முறை இடது புறமும் திருஷ்டி கழித்து வீட்டிற்கு வெளியே வைத்து கற்பூரம் போட்டு கொளுத்தி விட வேண்டும் இதனால் குடும்பத்தின் மீது இருந்து வந்த கெட்ட திருஷ்டிகள், பொறாமை பார்வைகள் அனைத்தும் கழியும். மேலும் நிலை வாசலில் வைத்த எலுமிச்சை பழங்களை கொண்டு வீட்டை சுற்றி இதே போல திருஷ்டி கழித்து வலது புறம் ஒரு துண்டையும், இடதுபுறம் ஒரு துண்டையும் தூக்கி விசிறி அடித்துவிட வேண்டும். அன்றைய நாள் கட்டாயம் சாம்பிராணி தூபம் போட வேண்டும், அதில் வெண்கடுகு போட்டு போடலாம். இவ்வாறு செய்ய வருடத்திய கடைசி வெள்ளிக்கிழமையில் நம்மை பிடித்த தரித்திர, பீடைகள் அனைத்தும் அகன்று புதிய ஆண்டை இனிமையாக வரவேற்கலாம்.

- Advertisement -