2021 புத்தம் புதிய ஆண்டில் நீங்களும் பெரும் அதிர்ஷ்டசாலியாக இந்த 5 விஷயங்களை கடைபிடிக்கலாமே! தூங்கியது போதும் விழுத்துக் கொள்ளுங்கள்!

2021-resolution-mobile
- Advertisement -

ஒவ்வொரு புதிய ஆண்டும் புதிய புதிய தீர்மானங்களை ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வார்கள். ஆனால் அது அந்த ஒரு நாள் மட்டுமே கடைப்பிடிப்பார்கள் என்பது வேறு விஷயம். எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், உங்களால் முடிந்த நேரங்களில் அவற்றை கடைபிடிக்க கொஞ்சம் கொஞ்சமாக முயற்சியாவது செய்யலாம். அந்த வகையில் இந்த 5 விஷயங்களை புதிதாக கடைபிடித்தால் நீங்களும் பெரும் அதிர்ஷ்டசாலியாக மாறிவிடலாம். அப்படி என்ன விஷயங்களை இந்த வருடம் புதிதாக கடைபிடிக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

2021

பிறக்க இருக்கும் புத்தம் புதிய ஆண்டாவது உங்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக மாற பிரார்த்திக்கிறோம். நீங்கள் எடுக்க இருக்கும் ஒவ்வொரு முடிவுகளும் வெற்றியா? தோல்வியா? என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விடாதீர்கள். முதலில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். உங்களால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை தான் வெற்றிக்கான முதல் பாதை.

- Advertisement -

ஒவ்வொரு புதிய ஆண்டும் உங்களுக்கு எப்படி இருந்தது? என்பதை பல ஆண்டுகள் கழித்தும், நீங்கள் அசைபோட்டு பார்க்க உதவுவது தான் டைரி. டைரி எழுதும் பழக்கம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். அவர்கள் ஐந்து வருடத்திற்கு முன்பு என்ன செய்தார்கள்? என்பதைக்கூட இப்போது உட்கார்ந்து படித்து பார்த்து இனிமையாக நினைத்துப் பார்க்கலாம். மனிதனின் மூளையை விட, அவன் எழுதிய எழுத்துக்கள் கூடுதலாக காலம் முழுவதும் வரலாற்றைப் படைக்கும்.

dairy

நம்முடைய முன்னோர்கள், மூதாதையர்கள் எல்லாம் எப்படி வாழ்ந்தார்கள்? என்கிற கல்வெட்டுகள் இல்லை என்றால் நமக்கு அவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா? என்று தயங்காதீர்கள். உங்களைப் பொறுத்த வரைக்கும் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தான் ஹீரோ அல்லது ஹீரோயின்.

- Advertisement -

இந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு புது டைரியை வாங்கி முதல் நாளிலிருந்து, டிசம்பர் 31 வரை தினம்தோறும் தவறாமல் உங்களுடைய அன்றாட நடவடிக்கையை எழுதி வாருங்கள். அப்படி தொடர்ந்து நீங்கள் எழுதும் பொழுது, அடுத்த வருடம் நீங்கள் அதனை புரட்டிப் பார்க்கும் பொழுது உங்களுடைய சுய மதிப்பீடு உங்களுக்கே புரிய ஆரம்பிக்கும். நீங்கள் எந்த அளவிற்கு உங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்கி விட்டீர்கள்? அல்லது எந்த அளவிற்கு வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தீர்கள்? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

refrigerator-cleaning1

பெண்கள் தான் வீட்டை பராமரிக்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் கூறவில்லை. உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது மாதம் ஒருமுறை அல்லது இருமுறை வீட்டை சுத்தம் செய்வதென உறுதி கொள்ளலாம். இதனால் வீடும் சுத்தமாகும். உங்களைப் பற்றிய மதிப்பும் வீட்டில் அதிகரிக்கும். அதுபோல் வாரம் ஒரு முறை, ஒரு வேளையாவது சமையல் செய்து கொடுக்கலாம்.

- Advertisement -

cooking'

பெண்களாக இருந்தால் வாரம் ஒரு புது சமையலை தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம். உங்களுக்கு தெரியாத எவ்வளவோ விஷயங்கள் இவ்வுலகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. டெய்லி இட்லி, உப்புமா என்று செய்து கொடுத்தது போதும். வாரம் ஒரு முறையாவது புதிய சமையல் செய்ய உறுதி கொள்ளுங்கள். இப்படி செய்தால் தான் அட்லீஸ்ட் மாதம் ஒரு முறையாவது புதிதாக சமைக்க முடியும்.

fight2

நாம் இந்த வருடத்தில் எவ்வளவோ பேரிடம், எவ்வளவோ சண்டைகளை போட்டு இருப்போம். இனி அப்படிப்பட்ட உறவே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருப்போம். உண்மையில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. யாரும் வேண்டுமென்றே எதையும் செய்வதில்லை. அந்தந்த சூழ்நிலையில் அவர்கள் இருக்கும் பொழுது மட்டுமே அதன் நியாயத்தை புரிந்து கொள்ள முடியும். எதிரில் இருப்பவராக இல்லாமல், அவர்களுடைய இடத்தில் இருந்து கொண்டு சிந்தித்துப் பார்த்து, மீண்டும் புதிய முடிவை எடுக்கலாம்.

baby-mobile

ஊர், பெயர் தெரியாத யாரோ ஒருவரிடம் அக்கறையாக பேசிக் கொண்டிருக்கும் இந்த உலகம் ஈன்றெடுத்த பெற்றோரிடம் மட்டும் விலகி நிற்பது ஏன்? என்று தெரியவில்லை. இது கூட பரவாயில்லை. இதைவிட கொடுமையான ஒரு விஷயம் உண்டு. பெற்றெடுத்த பிள்ளையை கூட சரியாக கவனிக்க முடியாமல், சதா வேலை, வேலை என்று பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களை என்ன தான் சொல்வது? வாட்ஸ் அப்பிலும் மற்ற அப்ளிகேஷன்களிலும் சாப்பிட்டியா? என்று தினமும் கேட்பவர்கள் சற்று திரும்பி உங்கள் வீட்டில் இருக்கும் நபர்களையும் பாருங்கள். உங்களுடன் கடைசி வரை வரப் போகிறவர்கள் யார்? என்பதை ஒருமுறை சிந்தித்துப் பார்த்தால் கூட உங்களை விட ஒரு அதிர்ஷ்டசாலி இருக்க முடியுமா?

இதையும் படிக்கலாமே
சூப்பரான 5 சமையலறை டிப்ஸ். உங்க நேரத்தை மிச்சப்படுத்த, வேலையை சுலபமாக்க! மிஸ் பண்ணாம நீங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -