புதுவருட காலண்டர் மாட்டும் திசை

calender
- Advertisement -

புத்தாண்டு பிறந்த முதல் நாளில் மட்டும் நாம் சந்தோஷமாக இருந்தால் போதுமா. ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கனும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நம்முடைய மனது எவ்வளவு உற்சாகமாக இருக்கிறதோ, ஒவ்வொரு நாளும் அதை உற்சாகத்தை பெற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நாள்காட்டியிலிருந்து தேதியை கிழிக்கும் போதும், நமக்கு சந்தோஷம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், நாளைய தினம் புத்தாண்டு பிறக்கும்போது வீட்டில் புது காலண்டரை மாட்டும் போது அதை எந்த திசையில் மாட்ட வேண்டும். எந்த திசையில் காலண்டரை மாட்டக்கூடாது, எந்த இடத்தில் காலண்டரை வைக்கக்கூடாது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

காலண்டர் மட்டும் திசை

முதலில் பழைய காலண்டர் அட்டைகள், பழைய காலண்டர் பேப்பர்களை எல்லாம் வீட்டில் இருந்து அகற்றி விடுங்கள். புதுசாக வாங்கி வந்த கேலண்டரை உங்கள் வீட்டு வடக்கு திசை நோக்கி மாட்டலாம். அல்லது கிழக்கு திசை நோக்கி மாட்டலாம். இந்த இரண்டு திசைகளில் நாள்காட்டியை மாட்டுவது ஒரு வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை தரும்.

கூடுமானவரை உங்களுடைய வீட்டில் நாள்காட்டியை தெற்கு திசை நோக்கி மாட்டக் கூடாது. தினம் தினம் நமக்கு தேதியை காட்டக்கூடிய காலண்டர் தெற்கு திசையில் நோக்கி இருந்தால் தினம் தினம் நமக்கு பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. ஆகவே அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

- Advertisement -

சரி பழைய காலண்டர்களை என்ன செய்வது. சுவாமி படங்கள் எல்லாம் காலண்டரில் இருந்தால் அந்த காலண்டரை அப்புறப்படுத்துவது எப்படி. பழைய காலண்டர் அட்டைகள் சுவாமி படத்தோடு இருந்தாலும், வருடம் முடிந்த பிறகு அதை நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்வது நெகட்டிவ் எனர்ஜியை தான் கொடுக்கும்.

காலண்டர் அட்டைக்கு மேலே ஒட்டி இருக்கும் அந்த காகிதத்தை மட்டும் பிரித்து எடுத்து மடித்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக கால் படாத இடத்தில் போட்டு விடலாம். இல்லையென்றால் அந்த பேப்பரை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து மண்பாங்கான இடத்தில் ஊற்றி விடுங்கள். சுவாமி படங்கள் போட்ட காலண்டராகவே இருந்தாலும் அதை பூஜை அறையில் வைத்து சாமி கும்பிடக் கூடாது.

- Advertisement -

காலண்டரை மாட்டக்கூடாத இடம் பூஜை அறை. வீட்டில் மற்ற பகுதிகளில் நீங்கள் சுவாமி படம் போட்ட காலண்டரை மாட்டிக் கொள்ளலாம். ஏனென்றால் பூஜை அறையில் வைத்து பூஜை செய்த, அந்த சுவாமி படத்தை எடுத்து நம்மால் வெளியே போட முடியாது. தினமும் பூஜை அறையில் வைத்து சுவாமி படம் போட்ட காலண்டரை பூஜை செய்தால், அந்த சுவாமி படத்திற்கும் உயிரோட்டம் கிடைத்துவிடும்.

ஆகவே இனிமேல் பூஜை அறையில் சாமி காலண்டரை வைக்காதீங்க. இதையம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போதெல்லாம் மாடலாக காலண்டர் மாட்ட வேண்டும் என்று, பார்க்கவே பயப்படும் படி, அகோரமான படங்கள், குழப்பத்தை தரும்படி இருக்கக்கூடிய படங்கள் எல்லாம் காலண்டர் ஆக மாட்ட கூடாது.

இதையும் படிக்கலாமே: சனி பகவானின் தாக்கம் குறைய தானம்

அப்படியே வாங்கினாலும் எல்லோர் கண்களுக்கும் படும்படி வரவேற்புரையில் மாட்டக்கூடாது. படுக்கையறையில் நீங்கள் மட்டும் பார்க்கும் படியும், அப்படிப்பட்ட காலண்டர் அட்டைகளை மாட்டாதிங்க. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -