2024-ல் சிறப்பாக இருக்க செல்ல வேண்டிய கோவில்கள்

rasi kovil
- Advertisement -

ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்பதை நம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்கிறோம். என்னதான் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டாலும் கோவில்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நமக்கு பல நேர்மறை ஆற்றல்கள் பெருகும் என்பதுதான் உண்மை. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக விளங்கவும் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழவும் ஒவ்வொரு ராசிக்காரர்களும் செல்ல வேண்டிய கோவில்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்று போட்டதும் ஜனவரி ஒன்றாம் தேதி கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைக்க வேண்டாம். டிசம்பர் இறுதியில் இருந்து ஜனவரி மாதம் முடிவதற்குள் ஏதாவது ஒரு நாள் அதுவும் சிறப்புகள் இல்லாத ஒரு நாளாக பார்த்து சென்றால்தான் ஆலயத்தில் இருக்கும் அனைத்து தெய்வங்களையும் பொறுமையாகவும் நிதானத்துடனும் வழிபட்டு வர முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மேஷ ராசிக்காரர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு ஏதாவது ஒரு இடத்தில் இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அனைத்து தெய்வங்களையும் பொறுமையுடனும் நிதானத்துடனும் வழிபட்டுவிட்டு கொற்றாமரைக் குளம் இருக்கும் இடத்தில் வந்து அமைதியாக அமர்ந்து குறைந்தது பத்து நிமிடமாவது நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து அவை அனைத்தும் சரியாகிவிட வேண்டும் என்று மனதார வேண்ட வேண்டும்.

ரிஷப ராசிக்காரர்கள் திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை வணங்க வேண்டும். பொறுமையுடன் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு கோவிலுக்கு வெளியே வந்து குறைந்தது ஐந்து நபர்களுக்காகவது வெண் பொங்கலை தானமாக வழங்க வேண்டும்.

- Advertisement -

மிதுன ராசிக்காரர்கள் பழனி முருகரை மாலை நேரத்தில் ராஜ அலங்கார தரிசனம் செய்ய வேண்டும். மேலும் வீட்டில் ராஜ அலங்கார படத்தை வைத்து தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும். கடக ராசிக்காரர்கள் திருச்செந்தூர் முருகனை சென்று தரிசனம் செய்ய வேண்டும். முடிந்தால் காலையில் கிடைக்கும் இலை விபூதியை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் சண்முகர் படம் அதாவது பச்சை நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் சண்முகர் படத்தை வைத்து தினமும் விளக்கேற்றி வழிபட்டு வர வேண்டும்.

சிம்ம ராசிக்காரர்கள் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவானின் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அங்கு நல்லெண்ணெய் வாங்கி தர வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் திருக்குல்லிகாடு பொங்கு சனி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அங்கு 1/2 லிட்டர் நல்லெண்ணெய், 1/2 லிட்டர் நெய், 1/4 கிலோ விபூதி, 1/4 கிலோ குங்குமம் வாங்கி கொடுத்து பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

துலாம் ராசிக்காரர்கள் மந்த்ராலயம் சென்று விடியற்காலை தரிசனம் செய்ய வேண்டும். ராமர் அபிஷேகத்தை காண வேண்டும். அங்கு கொடுக்கக்கூடிய துளசி மண்ணை வாங்கி வந்து வெள்ளி அல்லது செம்பு கிண்ணத்தில் பூஜை அறையில் வைத்து தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் வைத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அங்கு இருக்கக்கூடிய முத்துக்குமார சுவாமியை வழிபடுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் தீரும். மேலும் கிருத்திகை பூஜையை காண வேண்டும். அங்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

தனுசு ராசிக்காரர்கள் திருவனந்தபுரம் அனந்தபத்மசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும். அங்கு அன்னதானத்திற்காக தங்களால் இயன்ற அளவு கைங்கரியத்தை செய்ய வேண்டும். மகர ராசிக்காரர்கள் குருவாயூர் சென்று வழிபட வேண்டும். அங்கு துலாபாரம் தர வேண்டும். துலாபாரம் தந்ததற்கு ரசீது தருவார்கள். அந்த ரசீதை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும் மேலும் அங்கு தரக்கூடிய சந்தனத்தை பூஜை செய்வதன் மூலம் சிறப்புகள் உண்டாகும்.

கும்ப ராசிக்காரர்கள் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட வேண்டும். அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடித்த பிறகு கோவிலுக்கு வெளியே வந்து 11 நபர்களுக்கு நல்ல சாப்பாடு வாங்கி தர வேண்டும். அதுவும் மிகவும் கஷ்டப்படக்கூடிய 11 நபர்களாக பார்த்து வழங்க வேண்டும். மீன ராசிக்காரர்கள் பஞ்சவடி அனுமான் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அங்கு அன்னதானத்திற்காக அரிசி, பருப்பு வாங்கி தர வேண்டும். மேலும் அந்த கோவிலில் கிடைக்கும் அனுமன் ரட்ச்சையை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து வழிபட வேண்டும். கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கடனை கழிக்கும் கற்றாழை பரிகாரம்

தெய்வ வழிபாட்டில் முழு நம்பிக்கை இருப்பவர்கள் இந்த ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் கடன் அற்ற நோய்கள் அற்ற நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -