- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval25-4-2025 வானில் தோன்றும் அதிசய நிலா

25-4-2025 வானில் தோன்றும் அதிசய நிலா

- Advertisement -

நாளைய தினம் அதிகாலை வேளையில், இரண்டு கிரகங்களோடு சேர்ந்து வரப்போகும் அதிசய நிலவை நம்முடைய வெறும் கண்களிலேயே, வானத்தில் பார்க்கப் போகின்றோம். இந்த நிலவை, சிரித்த நிலா என்று சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் இதற்கு ஸ்மைலி மூன்(smiley moon) என்ற பெயரும் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலவில் அப்படி என்ன அதிசய நிகழ்வு வரவிருக்கிறது. எந்தெந்த கிரகங்கள் ஒன்று சேர்ந்து இந்த காட்சியை நமக்கு தரப் போகிறது. இதன் மூலம் நமக்கு என்ன நன்மை உண்டாகும். ஆன்மீகம் சார்ந்த ஒரு சில தகவல்களை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இது தேய்பிறை காலம். இப்போது வானில் உதயமாகும் நிலவை தேய்பிறை நிலவு என்று சொல்லுவோம். ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாளைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு இந்த தேய்பிறை நிலவு வானத்தில் எப்போதும் போல இருக்கும். இந்த தேய்பிறை நிலாவுக்கு வலது பக்கத்தில் சுக்கிர நட்சத்திரமும், இடது பக்கத்தில் சனிபகவானும், நமக்கு காட்சி தரப் போகிறார்கள். இரண்டுமே நட்சத்திர வடிவில் தான் நம்முடைய கண்களுக்கு தெரியும்.

இரண்டு நட்சத்திரங்களுக்கு நடுவே நிலவு இருக்கும். இது பார்ப்பதற்கு அப்படியே சிரித்த முகம் போலவே ஒரு காட்சியை நமக்கு கொடுக்கும். இந்த சிரித்த நிலவைப் பார்த்து இந்த பிரபஞ்சத்திடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் அப்படியே பலிக்கும் என்பது சில ஜோதிடர்களின் கருத்து. ஏனென்றால் சுக்கிர பகவான், சந்திர பகவான், சனி பகவான் மூன்று பெரும் கிரகங்கள் நமக்கு ஒன்றாக காட்சி தரப் போகின்றது.

- Advertisement -

வானில் நிகழ்விருக்கும் இந்த அதிசய காட்சியை பார்ப்பதற்கே இரண்டு கண்கள் போதாது. இந்த சந்தோஷமான நேரத்தில் பிரபஞ்சத்தில் இந்த பூமியில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். அந்த சமயத்தில் நீங்கள் இந்த சிரித்த நிலவைப் பார்த்து, சிரித்த முகத்துடன் உங்களுக்கு வேண்டிய செல்வ வளங்களை வரமாக கேட்கலாம். எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் கேட்கலாம். தவறு கிடையாது. என்ன வரம் வேண்டும் என்றாலும் கேட்கலாம் தவறு கிடையாது. ஆனால் அந்த வேண்டுதல் நம்முடைய தகுதிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.  தகுதிக்கு மீறி கேட்டால் எதுவுமே நடக்காது. அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைத்து நிறைய பணம் சம்பளமாக கிடைக்க வேண்டும். திருமணமாகாதவர்கள் திருமணம் நடக்க வேண்டுதல் வைக்கலாம். கடன் சுமையை தலை மேல் பாரமாக வைத்திருப்பவர்கள், அந்த பாரம் இறங்க வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கலாம். இதுபோல உங்களுக்கு தேவையான பிரார்த்தனையை அந்த நிலவை பார்க்கும் நேரத்தில் இந்த பிரபஞ்சத்திடம் மனதிற்குள் சொன்னாலும் சரி, வாய் விட்டு சொன்னாலும் சரி, நிச்சயம் நீங்கள் கேட்டது உடனடியாக பலிக்கும்.

- Advertisement -

இப்போது உங்களுக்கு நிறைய பணம் தேவை பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுடைய வாழ்க்கையில், சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதற்கான ஒரு சுவிட்ச் வேர்டையும் இன்றைக்கு நாம் பார்க்கப் போகின்றோம். நாளைய தினம் வானில் உதயமாகும் அந்த நிலவை பார்த்து இந்த மந்திர வார்த்தைகளை 33 முறை சொல்லுங்கள். நிச்சயமாக உங்களுடைய பணதேவை கூடிய விரைவில் பூர்த்தியாக நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

பண தேவையை பூர்த்தி செய்யும் சுவிட்ச் வேர்ட்

CIRCULATE CIRCULATE CIRCULATE
GIVE GIVE GIVE
COUNT COUNT COUNT

இந்த வார்த்தைகள் மேலே மூன்று முறை எப்படி கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதேபோல நீங்கள் அந்த நிலவை பார்க்கும் போது, மூன்று கிரகங்களையும் பார்க்கும் போது, இந்த மூன்று வார்த்தைகளை படிக்க வேண்டும். இந்த மூன்று வரிகளையும், மூன்று வரிகளையும் ஒருமுறை படித்தால், ஒரு முறை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். (இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த மந்திர வார்த்தைகளை, அப்படியே ஒரு முறை படித்தால் ஒரு முறை கணக்கு புரிந்ததா).

இதே போல 33 முறை இந்த மந்திர வார்த்தைகளை நாளை அதிகாலை வேலை 5:30 மணிக்கு சிரித்த நிலவை தரிசனம் செய்யும் போது, சிரித்த முகத்துடன் இந்த வார்த்தைகளை சொல்லிப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெரிய அளவில் மாற்றத்தை காண்பீர்கள். பணம் உங்களை தேடி வருவதற்கான வாய்ப்புகளை இந்த பிரபஞ்சம் கொண்டு வந்து உங்கள் கையிலே கொடுக்கும். இந்த நாளை தவிர விடாதிங்க.

இதையும் படிக்கலாமே: நாளை 25-04-2025 வெள்ளிக்கிழமை பிரதோஷம்

இந்த நேரத்தை தவற விடாதீங்க. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த விஷயத்தை நீங்கள் பகிரும் போது, நிச்சயமாக மேலும் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்