- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval21-10-2024 தேய்பிறை சஷ்டி திதி வழிபாடு

21-10-2024 தேய்பிறை சஷ்டி திதி வழிபாடு

- Advertisement -

நமக்கு வரக்கூடிய எல்லா பிரச்சனைகளையும், நம்முடைய அறிவு திறமையை வைத்து சமாளித்து விட முடியாது. நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சில பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய சக்தி, இறைவனுக்குத்தான் இருக்கிறது. இறை சக்தி என்ற ஒன்று இருப்பதால் மட்டும்தான் இந்த பூமி இயங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக சொல்லப்படும் முருகப்பெருமானின் வழிபாட்டை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளை செவ்வாய்க்கிழமை. முருகப்பெருமானுக்கு உரிய தினம். இந்த நாளில் தேய்பிறை சஷ்டிதிதியும் வந்திருக்கிறது.

- Advertisement -

நாளைய தினம் முருகப்பெருமானை நினைத்து பின் சொல்ல கூடிய முறைப்படி வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுடைய கஷ்டங்கள் உடனடியாக தீரும் என்பது நம்பிக்கை. குறிப்பாக தலைமுறை தலைமுறையாக நம்மை பின் தொடரும் அத்தனை கஷ்டங்களும் நம்மை விட்டு விடுபடும். முருகப்பெருமானை நினைத்து நாளை செய்ய வேண்டிய அந்த எளிமையான வழிபாடு என்ன பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

தேய்பிறை சஷ்டி திதி வழிபாடு

உங்களுடைய வீட்டில் வேல் இருந்தால் அந்த வேலைக்கு உரிய அபிஷேக ஆராதனையை சரியாக செய்து முடித்துவிட்டு இந்த பரிகாரத்தை துவங்குங்கள். உங்களால் முடிந்த நெய்வேத்தியம் வைத்து விடுங்கள். ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். மனதிற்குள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று மனதார நினையுங்கள். ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து அதற்கு ஒரு மஞ்சள் பொட்டு வைத்து முதலில் பிள்ளையார் சுழி போடுங்கள்.

- Advertisement -

பிறகு ‘ஓம்’ என்ற வார்த்தையை எழுதிக் கொள்ளுங்கள். அதன் பிறகு பின் சொல்லக்கூடிய இந்த 6 வரி மந்திரத்தை 6 முறை எழுதி விடுங்கள். இதுதான் சக்தி வாய்ந்த முருகரின் மந்திரம். இந்த மந்திரத்தை முதல் வரியை படித்தாலும் சரணபணபவ என்று வரும். ஒவ்வொரு வரி துவங்கக்கூடிய எழுத்துக்களை சேர்த்து படித்தாலும் சரவணபவ என்ற வார்த்தை நமக்கு கிடைக்கும்.

முருகன் மந்திரம்

ஓம்
சரவணபவ
ரவணபவச
வணபவசர
ணபவசரவ
பவசரவண
வசரவணப

- Advertisement -

இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை அதே பேப்பரில் ஆறு முறை எழுதுங்கள். எழுதிவிட்டு இந்த பேப்பரை மடித்து முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து விட்டு, உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இவ்வளவுதான் வழிபாடு. மந்திரத்தை எழுதி முடித்துவிட்டு இந்த பேப்பரை எடுத்து ஒரு புத்தகத்தில் வைத்து பூஜை அறையிலேயே வைக்கலாம்.

அல்லது வேறு ஏதாவது இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். ரொம்பவும் பேப்பர் கிழியுகின்ற நிலைமைக்கு வரும்போது அதை எடுத்து மண்பாங்கான இடத்தில் செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடுங்கள். தவறு ஒன்றும் கிடையாது.

இந்த பேப்பரில் மந்திரத்தை எழுதும்போது வீட்டில் உங்களுக்கான முருகனின் இறையாற்றல் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக நாளைய தினம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த சஷ்டி திதியில் வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் நாளை மாலை இந்த வழிபாட்டை செய்து விடுங்கள். நீங்கள் ஒருவேளை வீட்டில் இருக்கக்கூடிய பெண்களாக இருந்தால், ஆண்களாக இருந்தால் நாளைய தினம் காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணி வரை செவ்வாய் ஹோரை வரும். அந்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் வாராஹி மந்திரம்

மதியம் 1:00 மணியிலிருந்து 2:00 மணி வரை செவ்வாய் ஹோரை வரும். அந்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்வதும் சிறப்பு. அதையும் தவறவிட்டவர்கள் மாலை 8 மணியில் இருந்து 9 மணி வரை செவ்வாய் ஹோரை வரும். அந்த நேரத்திலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த மூன்று நேரத்திலும் வழிபாடு செய்ய முடியாது என்பவர்கள் மாலை 6 மணியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிலும் ஒன்றும் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு நிச்சயம் 100% பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்