- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை 23-06-2025 அதிசக்தி வாய்ந்த பிரதோஷ வழிபாடு

நாளை 23-06-2025 அதிசக்தி வாய்ந்த பிரதோஷ வழிபாடு

- Advertisement -

நாளை அப்படி என்ன அதிசக்தி வாய்ந்த பிரதோஷம். திங்கட்கிழமை, சோமவார நாளில், மாத சிவராத்திரியும், பிரதோஷமும் சேர்ந்து வந்திருக்கிறது. சோமவாரம் சிவனுக்கு உகந்த நாள். சிவராத்திரி சிவபெருமானுக்கு உகந்தது. பிரதோஷமும் சிவபெருமானுக்கு உகந்தது. அது மட்டுமா. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த, முருகப்பெருமானுக்கு உரிய கிருத்திகை நட்சத்திரமும் இன்று இருக்கிறது.

ஆக இந்த 4 அதிசக்தி வாய்ந்த விசேஷங்களும் ஒன்று சேர்ந்து, வந்திருக்கும் இந்த நாளில், பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்ய தவறலாமா. இப்படி ஒரு நாள் மீண்டும் எப்போது வரும் என்று நமக்கு தெரியாது. எண்ணிய காரியங்கள் எல்லாம் நல்லபடியாக ஈடேற, நாளைய தினம் எளிமையான முறையில் அந்த ஈசனை எப்படி வழிபாடு செய்வது? ஆன்மீகம் சார்ந்த சில எளிய தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

பிரதோஷ வழிபாடு

நாளை 23.6.2025 திங்கட்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். சிவனுக்கு உகந்த வில்வ இலைகளை வாங்கி அதில் இருக்கும் முல்லை எல்லாம் நீக்கிவிட்டு, உங்கள் கையாலேயே மாலையாக கட்டி சிவபெருமானுக்கு கொடுப்பது, அதி சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும்.

அந்த மாலையில் இருக்கும் ஒரு சில இலைகளில் சிவ சிவ நாமத்தை உங்கள் கையால் எழுதிக் கொடுத்தால், இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். வேண்டுதல் அதிவிரைவாக பலிக்கும். அடுத்தபடியாக நாளைய தினம் சிவபெருமானுக்கு மிளகு சீரகம் முந்திரி போட்டு வெண்பொங்கல் சமைத்து எடுத்துச் செல்லுங்கள்.

- Advertisement -

நாளைய தினம் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு இந்த மிளகு வெண் பொங்கலை, நெய்வேத்தியமாக வைத்து கோவிலுக்கு வரும் நாலு பக்தர்களுக்கு உங்கள் கையால் அன்னதானம் செய்தால், செய்த பாவங்கள் விலகி நன்மை நடக்கும். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய உங்கள் கையால் கரும்புச் சாறு நாளைய தினம் வாங்கிக் கொடுப்பது அது சிறப்பு.

சுத்தமான கரும்புச்சாராக இருக்க வேண்டும். அதில் எலுமிச்சம் பழச்சாறு, இஞ்சி, எல்லாம் சேர்க்காமல் ஐஸ் கட்டி போடாமல் கடையிலிருந்து சொல்லி உங்களால் முடிந்த கருப்பு சாரை வாங்கி சிவன் கோவிலுக்கு அபிஷேகம் செய்ய கொடுங்கள்.

- Advertisement -

அதிசக்தி வாய்ந்த இந்த பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு செல்ல முடியும் என்பவர்கள் செல்லலாம். வீட்டில் இருந்தே சிவபெருமானை வழிபாடு செய்ய முடியும் என்பவர்களும் வீட்டிலேயே ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லி ஈசனை வழிபடலாம். வீட்டில் விளக்கு கூட ஏற்ற முடியாத சூழ்நிலை சில பெண்களுக்கு இருக்கும். இருந்தாலும் தவறு கிடையாது.

பிரதோஷ நேரத்தில் அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். பூஜை அறையை தவிர்த்து விடுங்கள். மனதிற்குள் சிவபெருமானை நினைப்பதற்கு நேரம் காலம், தீட்டு, நல்லது கெட்டது எதுமே கிடையாது. இந்த பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை மனதார நினைத்து உண்மையான பக்தியோடு, மனதில் எந்த ஒரு கெட்ட எண்ணமும் இல்லாமல், அடுத்தவர்கள் மீது பொறாமை குணம் இல்லாமல், சுயநலம் இல்லாமல் ஈசனை மட்டும் மனதில் நிறுத்தி உங்கள் நன்மைக்காக என்ன வேண்டினாலும் அது நிச்சயம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: ஆனி மாத தேய்பிறை கிருத்திகை மந்திரம்

நாளை வரவிருக்கும் அதிசக்தி வாய்ந்த இந்த பிரதோஷ நாளில் ஒரு முறையேனும் “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லுங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்