இன்று தங்கம் விற்கக்கூடிய விலைக்கு ஒரு குண்டுமணி தங்கம் வாங்குவது என்றாலும் அது மிகப்பெரிய விஷயம். ஸ்வர்ணலட்சுமியான தங்கத்தை நீங்கள் அடமானத்தில் வைத்திருந்தால், அதை மீட்டெடுக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தால், நாளைய தினம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நாளை ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வேண்டி வழிபாடு செய்பவர்களுக்கு, அடமானத்தில் இருக்கும் தங்கம் மீண்டும் வீடு திரும்பும்.
புதுசாக தங்கம் வாங்கி ஆக வேண்டும் என்ற கட்டாயம் சில பேருக்கு இருக்கும். பெண்ணிற்கு திருமணம் வைத்திருப்பார்கள், குழந்தைகளுக்கு காது குத்து வைத்திருப்பார்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் தங்கம் வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தால், புது தங்கம் வாங்கும் யோகத்தை பெறவும், நாளைய தினம் ஸ்வர்ணாகர்ஷண பைரவரை நீங்கள் வழிபாடு செய்யலாம்.
நாளை பைரவா அஷ்டமி. பைரவர் அவதரித்த நாள். நாளைய தினம் சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால் இந்த நாளுக்கு இரட்டிப்பு பலன். உங்கள் வீட்டு பக்கத்தில் சொர்ணாகர்ஷன பைரவர் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில் இருந்தால், கட்டாயம் அந்த கோவிலுக்கு சென்று சொர்ணாகர்ஷண பைரவருக்கு தேவையான அபிஷேக பொருட்களை வாங்கி கொடுங்கள்.
குறிப்பாக பால், தயிர், தேன், பன்னீர், வாசனை நிறைந்த சந்தனம் இப்படிப்பட்ட பொருட்களை வாங்கி கொடுத்து ஸ்வர்ணாகாசன பைரவர் மனதை குளிர வைத்து வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட கஷ்டம், நகை சம்பந்தப்பட்ட கஷ்டங்கள் உடனே தீரும்.
சொர்ணாகாசன பைரவர் முன்பாக அமர்ந்து உங்களுக்கு இருக்கும் கோரிக்கையை வையுங்கள். தங்கம் வாங்க வேண்டுமா? அடமானத்தில் இருக்கும் தங்க நகைகளை மீட்க வேண்டுமா? அல்லது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமா? உங்களுக்கு நிதி சார்பான என்ன பிரச்சனை இருக்கிறதோ அதை பைரவரிடம் சொல்லி முறையாக வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த கோவிலிலேயே அமர்ந்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
சொர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்
‘ஓம் நமோ பகவதே சொர்ணாகர்சண
பைரவாய தன தான்ய விரித்திகராய
சீக்கிரம் வசியம் குருகுரு ஸ்வாகா!’
பைரவர் முன்பு அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி நீங்கள் என்ன பிராத்தனை வைத்தாலும் அது கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும் அடமானத்தில் இருக்கும் தங்க நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு எடுக்கக் கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும் பணம் நகை சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு தீர்வுகாண நெய் தீபம் ஏற்றினால் நிச்சயம் நல்லது நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
நாளைய தினம் கோவிலுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை அமையவில்லை. உங்கள் வீட்டு பக்கத்தில் சொர்ணாகர்ஷண பைரவர் சன்னிதானம் கோவில் இல்லை என்றால், கால பைரவர் கோவிலிலேயே அமர்ந்தும் இந்த மந்திரத்தை சொல்லலாம். எதற்குமே வாய்ப்பு இல்லை நீங்கள் கோவிலுக்கு செல்லவில்லை என்றாலும் சரி, பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அந்த விளக்குக்கு முன்பாக அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரை மனதார நினைத்து பூஜித்து இந்த மந்திரத்தை சொன்னாலும் நிச்சயம் நல்லது நடக்கும்.
இதையும் படிக்கலாமே: பைரவ அஷ்டமி 2024
பணம் நகை சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கி இருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நாளைய தினம் ஒரு வரப் பிரசாதம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.