- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval23-11-2024 பைரவ அஷ்டமி குளிக்கும் முறை

23-11-2024 பைரவ அஷ்டமி குளிக்கும் முறை

- Advertisement -

நாளைய தினம் சனிக்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை அஷ்டமி திதி வரவிருக்கிறது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் தான், சிவபெருமான், பைரவராக அவதரித்த தினம் என்று சொல்லப்பட்டுள்ளது. சாதாரண தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடை தவற விடுபவர்கள் கூட, நாளைய தினம் வரவிருக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டை தவறவிடக்கூடாது. பௌர்ணமி முடிந்து. எட்டாவது திதி அஷ்டமி திதி.

அமாவாசை முடிந்து வரும் எட்டாவது திதி, அஷ்டமி திதி. அஷ்டமி என்றால் 8 என்ற எண்ணைக் குறிக்கக் கூடியது. இது கார்த்திகை மாதம் 8ஆம் தேதியே வந்திருப்பது இன்னும் அற்புதமான பலனை நமக்கு தரும். நாளைய தினம் நம்முடைய கஷ்டங்கள் நம்மை விட்டு விலக வேண்டும் என்றால், நாம் குளிக்கின்ற தண்ணீரில் பைரவரை நினைத்து என்னென்ன பொருட்களை சேர்ப்பது, ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பைரவாஷ்டமி குளிக்கும் முறை

பைரவருக்கு உகந்த பொருள் மிளகு. கடன் தீர வேண்டும் என்றாலும், கஷ்டங்கள் தீர வேண்டும் என்றாலும், தேய்பிறை அஷ்டமி திதியில் மிளகு தீபம் ஏற்றுவது நம்முடைய வழக்கம். நாளைய தினம் நாம் குளிக்கின்ற தண்ணீரில் மிளகு, எள்ளு இந்த 2 பொருட்களையும் போட வேண்டும்.

கருப்பு எள்ளு எதற்காக குளிக்கின்ற தண்ணீரில் போட வேண்டும். காலத்தால் நமக்கு தாங்க முடியாத கஷ்டத்தை கொடுக்கக் கூடிய கிரகம் சனிபகவான். சனி பகவானின், குருவாக திகழ்பவர் இந்த காலபைரவர். உங்களுக்கு சனி பகவானால் ஜாதக கட்டத்தில் பிரச்சனை. சனி தோஷம் இருக்கிறது. சனி திசை நடக்கிறது என்றாலும், நாளைய தினம் நீங்கள் கட்டாயம் கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். சனிபகவானுக்கு உரிய பொருள் எள்ளு. இதனால்தான் கருப்பு எள்ளு நாளைய தினம் குளிக்கின்ற தண்ணீரில் போட போகின்றோம்.

- Advertisement -

நாளை காலை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து கொள்ளுங்கள். உள்ளங்கைகளில் 8 மிளகு, 8 கருப்பு எள்ளு, 8 கல்லுப்பு, எடுத்துக் கொள்ளுங்கள். கல் உப்பில் கொஞ்சம் பெரிய பெரிய உப்பு இருக்கும் அல்லவா. அதிலிருந்து எட்டு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த 3 பொருட்களையும் உள்ளங்கைகளில் வைத்து கிழக்கு பார்த்து நின்று, ‘கால பைரவா, காலத்தால் கொடுக்கும் எந்த கஷ்டமும் என்னுடைய வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்து விடக்கூடாது.

என்னுடைய வாழ்க்கைக்கு துணையாக நீ தான் காவல் தெய்வமாக நிற்க வேண்டும்’. என்று சொல்லி இந்த மூன்று பொருட்களையும் குளிக்கின்ற தண்ணீரில் போட்டு, அந்த குளிக்கின்ற தண்ணீரில் உங்கள் வலது கை ஆள்காட்டி விரலால் ‘ஓம்’ என்ற வார்த்தையை எழுதி அந்த தண்ணீரில் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு இந்த பரிகாரம் செய்ய வேண்டாம். நாளைய தினம் இந்த தண்ணீரில் தலைக்கு குளிப்பது மிக மிக சிறப்பான பலனை கொடுக்கும். முடியாதவர்கள் தலைக்கு குளித்தால் பிரச்சனை என்பவர்கள், உடம்பு மட்டும் குளிக்க இந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

குளிக்கும்போது ‘பைரவாய நம’ என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே குளிக்க வேண்டும். இந்த எளிமையான குளியல் முறை நாளை உங்களுடைய கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலத்தை பிறக்க வைக்கும். உடம்பை பிடித்த எதிர்மறை ஆற்றல் விலகுவும். கண் திருஷ்டி விலகவும், நீண்ட நாள் நம்மை பிடித்த பீடை கஷ்டங்கள் அனைத்தும் விலக இந்த குளியல் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை சூரிய உதயத்திற்கு முன்பு இந்த குளியலை மேற்கொள்ளுங்கள். அதில் இரட்டிப்பு பல நிச்சயம் கிடைக்கும். சூரிய உதயம் ஆகிவிட்டது இருந்தாலும் இந்த தண்ணீரில் குளிக்கலாமா என்று கேட்டால் குளிக்கலாம் அதில் ஒன்றும் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: நைவேத்திய படையல் வைக்கும் நேரம்

நாளைய தினம் இந்த குளியலை முடித்துவிட்டு அன்றாட வேலையை எப்போதும் போல துவங்குங்கள் விரதம் இருக்க முடியும் என்பவர்கள் விரதம் இருந்து அஷ்டமி திதியில் மாலை நேரத்தில் வீட்டு அருகில் இருக்கும் கால பைரவர் சன்னிதானத்திற்கு விளக்கு போட்டு வேண்டுதல் வைத்தால் உங்களை பிடித்த கஷ்டம் தேய்பிறை நிலவு போல தேய்ந்து கண்ணுக்கு தெரியாமல் காணாமலே போய்விடும் என்பது நம்பிக்கை. வாய்ப்பு உள்ளவர்கள் நாளைய தினம் பைரவர் வழிபாட்டை தவற விடாதீர்கள்.

சற்று முன்