செவ்வாய்க்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளை, ருண விமோசன பிரதோஷம் என்று சொல்லுவார்கள். இதை நோய் தீர்க்கும் பிரதோஷம் என்றும் வைத்துக் கொள்ளலாம். கடன் தீர்க்கும் பிரதோஷம் என்றும் வைத்துக் கொள்ளலாம். இந்த நாளில் கொடிய நோய்கள் நீங்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கொடிய நோயாக நம்மைத் தொற்றிக் கொண்டு இருக்கும் கடன் சுமை விலகவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பரிகாரத்தை செய்வதற்கு முன்பு நாளைய தினம் இருக்க கூடிய சிறப்புகளை பற்றி முதலில் பார்த்து விடுவோம்.
செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு உரிய நாள். சக்தி தேவைக்கு உரிய நாள். ஆகவே இந்த பரிகாரத்தை நாம் ராகு கால நேரத்தில் செய்யப் போகின்றோம். அதுமட்டுமில்லாமல் திருவோண நட்சத்திரத்தோடு சேர்ந்து இந்த பிரதோஷ நாள் வந்திருப்பது இரட்டிப்பு பலனை கொடுக்கும். இன்னும் ஒரு சிறப்பும் இந்த நாளுக்கு இருக்கிறது. மகா சிவராத்திரிக்கு முந்தைய நாள் வந்திருக்கும் பிரதோஷம் இது. சரி இத்தனை சிறப்புகள் அடங்கிய பிரதோஷ நாளில் நாம் செய்ய வேண்டிய அந்த எளிய பரிசாரம் என்ன என்பதை இப்போது பார்த்து விடுவோமா.
25-2-25 தேதியில் பார்த்தால் இரண்டு 25 வருகிறது. இதுவும் இன்னொரு சிறப்பு. செவ்வாய்க்கிழமையில் வந்திருக்கும் இந்த பிரதோஷ நாளில் ராகு கால நேரத்தில் நாம் பரிகாரத்தை செய்ய வேண்டும். நாளை மாலை 3:00 மணியிலிருந்து 4:30 மணி வரை ராகு கால நேரம் இருக்கிறது. இந்த நேரத்தில் வீட்டில் இருந்தபடியே இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனையை எழுதுங்கள். 5 கடன் பிரச்சனை இருந்தால், 5 பிரியாணி இலையில் ஒரு வரியில் அந்த கடன் பிரச்சினையை எழுதி விடுங்கள்.
எந்த வங்கியில் கடன் இருக்கிறது. அந்த வங்கியின் பெயர், அந்த கடன் தொகை. எந்த நபரிடம் ஆவது கடன் வாங்கி இருந்தால், அந்த நபரின் பெயர், அந்த கடன் தொகை. திருப்பி சீக்கிரம் அடக்க வேண்டும் என்று எழுதிவிட்டு, அந்த பிரியாணியிலேயே நெருப்பில் போட்டு பொங்கி விட வேண்டும். ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி அந்த நெருப்பில் இந்த பிரியாணி இலையை பொசக்கலாம். நல்லெண்ணெய் அகல் விளக்கு தீபத்திலும் இந்த பிரியாணி இலையை பொசுக்கலாம்.
பரிகாரத்தை செய்யும் போது குலதெய்வத்தையும் துர்க்கை அம்மன் ஈசனையும், பெருமாளையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இதே போல தான் தீராத நோய் நொடி தீர வேண்டும் என்றால் அந்த நோயைப் பற்றிய விவரத்தை பிரியாணி இலையில் எழுதி பொசுக்கி விடலாம்.
செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் பிரதோஷ நாளில் இந்த பரிகாரத்தை செய்வது அதிக அற்புதமான பலனை உங்களுக்கு கொடுக்கும். இந்த நேரத்தை தவறவிட்டவர்கள் மற்ற நேரத்தில் பரிகாரத்தை செய்யும் போது முழு பலனை நம்மால் பெற முடியாது. நீங்கள் வேலையில் இருக்கும் பட்சத்தில் இந்த ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மன் மனதார நினைத்து கடன் சுமை வேண்டும் என்று மனதிலேயே வேண்டுதலை வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: வெற்றி தரும் சிவ மந்திரம்
இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு பிறகு பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் கோவிலுக்கு சென்று மூன்று மிளகையும் உள்ளங்கைகளில் எடுத்துக்கொண்டு, உங்கள் தலையை சுற்றி அந்த மிளகை கோவிலுக்கு வெளியில் கொண்டுவந்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். உங்களை பிடித்த தரித்திரம் விலகி கடன் சுமை முழுமையாக நீங்கும் என்பது நம்பிக்கை. ஆன்மீகம் சொல்லும் இது ஒரு எளிய தாந்த்ரீக பரிகாரம் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.