ஒரு சில நாட்களில் பிரபஞ்சத்திலிருந்து, பூமிக்கு வரக்கூடிய பேராற்றல் அதிகமாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் பார்த்தால் பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு சிவராத்திரி. இந்த நாள் இந்த பிரபஞ்சம் முழுவதும் சிவசக்தி நிறைந்து இருக்கும். கண்விழித்து இந்த ஆற்றலை முழுமையாக பெறுபவர்கள் சாதனையாளர்களாக மாறலாம். இது நாம் எல்லோருக்கும் தெரியும். நாளைய தினம் பிப்ரவரி 27ஆம் தேதி வியாழக்கிழமை மாசி மாத அமாவாசை.
இந்த நாளிலும் இந்த பிரபஞ்சத்தில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். இந்த நாளிலும் நாம் வைக்கக்கூடிய வேண்டுதலானது பலிக்கும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் இந்த நாளில் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும் முக்கியமாக குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். மகா சிவராத்திரி முடிந்து வரும் அமாவாசை நாள் மிக மிக சக்தி வாய்ந்த நாள் இதுவும் நாம் எல்லோருக்கும் தெரியும்.
28ஆம் தேதி அப்படி என்ன சிறப்பு இருக்கிறது அதைப் பற்றிய ஒரு சில ஜோதிடம், அறிவியல் சார்ந்த ஆன்மீகம் சார்ந்த தகவலை இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பு ஒரு சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த 3 நாட்களிலும் யார் ஒருவர் உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் சொல்லி, அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்கிறீர்களோ அந்த வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.
நீங்கள் எந்த விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த விஷயத்தை சாதித்துக் கொள்ளலாம். (manifestation செய்வதற்கு இந்த மூன்று நாள் நமக்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம்). நான் பிரபஞ்சத்திடம் வைக்கக் கூடிய வேண்டுதலை தான் ஆங்கிலத்தில் manifest என்று சொல்லுவார்கள். உங்களுக்கும் கடவுளுக்கும் இருக்கக்கூடிய நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ள உங்களுக்கு விருப்பமான முறையில் பிரார்த்தனை செய்யுங்கள்.
பிப்ரவரி 28, 7 கிரக சேர்க்கை சிறப்பு
மனிதர்களுடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது நவகிரகங்களை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் பிப்ரவரி 28ஆம் தேதி 7 கிரகங்களும் வானத்தில் ஒரே நேர்கோட்டில் வரப்போகிறது. கிரகங்கள் எல்லாம் எப்போதுமே ஒரே நேர் கோட்டில் இருக்காது. ஆனால் இந்த பிப்ரவரி 28ஆம் தேதி இந்த ஏழு கிரக சேர்க்கை மிகவும் அரியவகை நிகழ்வாக சொல்லப்படுகிறது.
இதுபோல ஒரு சேர்க்கையை நம் மீண்டும் காண வேண்டும் என்றால் 2040 வரை காத்திருக்க வேண்டும் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. அதனால் பிப்ரவரி 28ஆம் தேதியும் பிரபஞ்சத்தில் நல்ல ஆற்றலானது அதிகமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை நடக்கவிருக்கும் இந்த கிரக சேர்க்கையில் ஒரே வரிசையில் நிற்கக்கூடிய அந்த ஏழு கிரகங்கள் என்னென்ன. இதன் மூலம் 12 ராசிக்காரர்கள் வாழ்வில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் என்னென்ன ஜோதிடம் சார்ந்த சில தகவல்களும் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், மற்றும் நெப்டியூன் இந்த ஏழு கிரகங்களுடைய சேர்க்கை தான் வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கிறது. மேஷம், சிம்மம், தனுசு இந்த மூன்று ராசிக்காரர்களும் நெருப்பு ராசிக்காரர்கள் என்று சொல்லுவார்கள். இந்த மூன்று ராசிக்காரர்களும் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையும்.
உங்களுடைய திறமை மேலோங்கும். வாழ்க்கையில் குறிக்கோளை இலக்கை அடைவதற்கு தேவையான அத்தனை நன்மைகளும் உங்களை தேடி வரும். உங்கள் வாழ்க்கை முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்ல நல்ல காலம் பிறந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்.
ரிஷபம், கன்னி, மகரம் இந்த மூன்று ராசிகளும் பூமி ராசிக்காரர்கள் என்று சொல்லுவார்கள். உங்களுடைய வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். இடம் மாற்றம் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது.
நல்லது என்று நீங்கள் எடுத்த முடிவுகள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் இருக்கிறது. கெட்டது என்று நீங்கள் ஒதுக்கி வைத்த விஷயங்கள் உங்களுக்கு நல்லது செய்யவும் வாய்ப்புகள் இருக்கிறது கவனமாக இருக்கவும்.
மிதுனம், துலாம், கும்பம் இந்த மூன்று ராசிகளும் காற்று ராசிகளாக சொல்லப்பட்டுள்ளது. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய நல்லது கெட்டது அதிகமாக அடுத்தவர்களால் பேசப்படும். குறிப்பாக சமூக வலைதளங்களில் அதிகமாக இருப்பவர்கள், அடுத்த மூன்று மாதங்களுக்கு கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பொதுப் பணியில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள், சினிமா துறையில் இருப்பவர்களுக்கும் சில ஏற்ற இறக்கங்கள் உண்டாகும்
கடகம், விருச்சிகம், மீனம் இந்த மூன்று ராசிக்காரர்களும் நீர் ராசிகளாக சொல்லப்பட்டுள்ளது. இவர்களுக்கு மனதளவில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் சில முக்கியமான கட்டத்தில் என்ன முடிவு எடுப்பது என்பதில் தடுமாற்றம் இருக்கும். சில குழப்பமான மந்தமான சூழ்நிலையும் நிலவும். கூடுமானவரை இறைவழிபாட்டில் ஈடுபடுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. அடுத்த மூன்று மாதங்களுக்கு கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது.
இதையும் படிக்கலாமே: சிவராத்திரி ஸ்பெஷல் தம்பிட்டு ரெசிபி
மேலே சொன்ன ஜோதிடம் சார்ந்த தகவல்கள் அனைத்தும் பொதுப்படையாக சொன்னவை தான். இவை அனைத்தும் எல்லோருக்கும் 100% வேலை செய்யும் என்று சொல்ல முடியாது. அவர்களுடைய பிறப்பு ஜாதகத்தை பொறுத்து ஒரு சில விஷயங்கள் மாறும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.