உங்கள் நட்சத்திரப்படி எந்தெந்த சின்னங்களை நீங்கள் வேலை மற்றும் தொழில் செய்யும் இடங்களில் வைத்தால் அதிஷ்டம் உங்களை தானாக தேடி வரும் தெரியுமா.

astro-pendant-soolam
- Advertisement -

தற்காலத்தில் பலரும் தங்கள் வாழ்க்கையிலும், தாங்கள் ஈடுபடுகின்ற எத்தகைய காரியங்களிலும் வெற்றியை பெற பிறந்த தேதி, ராசி, நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் பெயரை மாற்றிக்கொள்வதையும், ராசிக்கல் மோதிரம் அணிந்து கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் ஒருவர் தங்களது நட்சத்திரத்திற்கு ஏற்ற சின்னங்களை தங்கள் உடைகளில் அலங்காரமாக தைத்துகொண்டோ அல்லது தாங்கள் தொழில் ரீதியாக பயன்படுத்தும் பொருட்களில் ஸ்டிக்கர் போன்று ஒட்டிக்கொள்வதாலோ வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரக்கூடிய சின்னங்கள் இதோ.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் குதிரைத் தலை அல்லது குதிரை உருவத்தை சின்னமாக பயன்படுத்தலாம். பரணி நட்சத்திரக்காரர்கள் மண் பாத்திரம், அடுப்பு, முக்கோண வடிவத்தை சின்னங்களாக பயன்படுத்தலாம். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கத்தி, வாள், அக்னி குண்ட தீ ஜுவாலை போன்றவற்றை தங்களுக்குரிய சின்னங்களாக பயன்படுத்தலாம்.

- Advertisement -

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தேர், வண்டி, கோவில், ஆலமரம், சக்கரம் ஆகியவற்றை வெற்றிக்குரிய சின்னங்களாக பயன்படுத்தலாம். மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் மான் தலை மற்றும் தேங்காய் கண் ஆகியவற்றை அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி போன்றவற்றை அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வில் மற்றும் அம்புக்கூடு சின்னத்தை பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பூசம் நட்சத்திரக்காரர்கள் தாமரை, புடலங்காய் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி போன்றவைகளை தங்களுக்குரிய வெற்றிச் சின்னங்களாக பயன்படுத்தலாம். ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சர்ப்பம் மற்றும் அம்மிக்கல் சிறந்த அதிர்ஷ்ட சின்னங்களாகும்.

- Advertisement -

வீடு, பள்ளக்கு மற்றும் நுகம்(எருதுகளை வண்டியில் பூட்டும் கட்டை) மகம் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட சின்னங்களாகும். கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை சின்னங்கள் பூரம் நட்சத்திரத்திற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். கட்டில் கால்கள் மற்றும் மெத்தை சின்னங்கள் உத்திரம் நட்சத்திரத்துக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

அஸ்தம் நட்சத்திரத்திற்கு கைகள் மற்றும் உள்ளங்கைகள் போன்றவற்றை அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம். முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள் சின்னங்களை சித்திரை நட்சத்திரக்காரர்கள் பயன்படுத்தலாம். புல்லின் நுனி மற்றும் காற்றில் அசைகின்ற தீபச்சுடர் போன்றவற்றை அதிர்ஷ்ட சின்னங்களாக சுவாதி நட்சத்திரக்காரர்கள் பயன்படுத்தலாம்.

- Advertisement -

விசாகம் நட்சத்திரக்காரர்கள் முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரத்தை சின்னங்களாக பயன்படுத்தலாம். குடை, மலரும் தாமரை, வில் வளைவு போன்றவற்றை அனுஷம் நட்சத்திரக்காரர்கள் அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம். குடை, குண்டலம் மற்றும் ஈட்டி போன்றவற்றை கேட்டை நட்சத்திரக்காரர்கள் அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம்.

மூலம் நட்சத்திரக்காரர்கள் அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானையின் தும்பிக்கையை அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம். விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்களை பூராடம் நட்சத்திரக்காரர்கள் அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம். யானைத்தந்தம் மெத்தை விரிப்பு கட்டில் கால்கள் போன்றவை உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட சின்னங்களாகும்.

மனித காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு போன்றவற்றை திருவோணம் நட்சத்திரக்காரர்கள் அதிர்ஷ்ட சின்னமாக பயன்படுத்தலாம். மிருதங்கம் மற்றும் உடுக்கை இசைக்கருவிகளை அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கான அதிர்ஷ்ட சின்னங்களாக பயன்படுத்தலாம். பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம் சதயம் நட்சத்திரக்காரர்களுக்குரிய அதிர்ஷ்ட சின்னங்களாகும்.

கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள் பூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட சின்னங்களாகும். கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள் சின்னங்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரியவை. மீன் மற்றும் மத்தளம் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய அதிர்ஷ்ட சின்னங்களாகும்.

நட்சத்திர சின்னங்களை வேலை செய்யும் இடங்களிலோ அல்லது தொழில் செய்யும் இடங்களிலோ வைத்துக்கொள்வதால் என்ன பெரிதாக மாறுதல் வந்துவிட போகிறது என்று சிலர் எண்ணலாம். இதற்க்கு நாம் சில யுகங்களுக்கு முன்பு நடந்த சிலவற்றை உதாரணமாக காணலாம்.

துவாபர யுகத்தில் நிகழ்த்த மகாபாரதத்தை பற்றி நம்மில் பலரும் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம். பாரதப்போரில் அர்ஜுனுக்கு தேரோட்டியாக இருந்து அவரை முழுக்க முழுக்க வழி நடத்தியவர் பகவான் கிருஷ்ணர். அப்படிப்பட்ட பகவான் கிருஷ்ணருடைய நட்சத்திரமாக இருப்பது ரோகிணி. ரோகிணி நட்சத்த்திரத்திற்கு உரிய சின்னமாக தேர் இருப்பதை நாம் காணலாம். பகவான் தேரோட்டியாக இருந்து மிகப்பெரிய போரை பாண்டவர்களின் வசம் ஜெயமாக செய்தார்.

அடுத்ததாக திருமாலின் மற்றொரு அவதாரமான ராமபிரானை எடுத்துக்கொள்வோம். திரேதா யுகத்தில் தான் ராமபிரான் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ராமபிரானுக்கு உரிய நட்சத்திரமாக இருப்பது புனர்பூசம். ‘வில்’ புனர்பூசம் நட்சத்திரத்தின் சின்னமாக கருதப்படுகிறது. ராமபிரானின் வில்லை பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. அப்போது நடந்த மிகப்பெரிய யுத்தத்தில் அவர் வெற்றிபெற்றதற்கு மிக முக்கிய ஒரு அங்கமாக இருந்தது வில்.

அடுத்ததாக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து வெளிப்பட்ட விடத்தை உண்டு இன்று நீலகண்டராய் மூவுலகையும் காத்து ரட்சிக்கும் அந்த பரமேஸ்வரனின் நட்சத்திரமாக இருப்பது திருவாதிரை. இந்த திருவாதிரை நட்சத்திரத்தின் சின்னக்கிளில் ஒன்றாக மனித தலை உள்ளது. சிவன் தன் கரத்தில் கபாலத்தை ஏந்துவதை நாம் புராண கதைகள் பலவற்றில் கேட்டிருப்போம். இப்படி இன்னும் எத்தனையோ உதாரணங்களை நாம் கூறிக்கொண்டே போகலாம்.

- Advertisement -