உங்கள் நட்சத்திரத்திற்கு நீங்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்லது நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

muruga-astro

27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் ஒவ்வொரு தானத்தை செய்து வந்தால் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த நல்லனவற்றை விரைவில் அடையலாம் என்பது ஒரு சாஸ்திர நியதி. எல்லா தானமும் சிறந்ததாக இருந்தாலும் நம்முடைய நட்சத்திரத்திற்கு எந்த மாதிரியான தானத்தை நாம் செய்தால் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை இருந்த கஷ்டங்கள் நீங்கி நாம் எதிர்பார்த்த படி நம் வாழ்க்கை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப மாறும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

27-stars

அஸ்வினி:
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் மருந்து சம்பந்தப்பட்ட தானங்களை செய்யலாம் அதாவது இயலாதவர்களுக்கு மருந்து, மாத்திரை போன்றவற்றை வாங்க உதவி செய்யலாம்.

பரணி:
பரணி நட்சத்திரக்காரர்கள் அடிக்கடி உங்களால் முடியும் பொழுது அன்னதானம் செய்து வந்தால் நிறைய நன்மைகள் உங்கள் வாழ்வில் உண்டாகும்.

annadhanam 1

கிருத்திகை:
கிருத்திகை நட்சத்திரகாரர்கள் இரும்பு பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக வழங்குவதால் நன்மைகள் உண்டாகும். இல்லையேல் பணத்திற்கு கஷ்டப்படும் யாராவது ஒருவருக்கு பண உதவி செய்யலாம்.

- Advertisement -

ரோகினி:
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் உடல் ஊனமுற்றவர்களுக்கு வண்டி, வாகனம் போன்றவை வாங்கிக் கொடுத்தால் மிகவும் நல்லது.

handicap-vehicle

மிருகசீரிஷம்:
மிருகசீரிஷம் நட்சத்திரத்தைப் பொறுத்தவரை அவர்கள் தானம் செய்யவில்லை என்றாலும் மற்றவர்களுடைய மனக்கவலைகளை நீக்கி அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை அளித்தாலே வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்.

திருவாதிரை:
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் சிவன் கோவிலில் ஒருவேளை அன்னதானம் பக்தர்களுக்கு செய்து வந்தால் நிறைய மாற்றங்கள் வாழ்க்கையில் சந்திக்கலாம்.

sivan-temple

புனர்பூசம்:
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் அவசரமாக உதவி கேட்பவர்களுக்கு அதாவது விபத்து அல்லது முதலுதவி போன்ற விஷயங்களுக்கு ஓடிப்போய் உதவி செய்தால் வாழ்க்கையில் மாற்றங்கள் நிச்சயம் நடக்கும்.

பூசம்:
பூச நட்சத்திரக்காரர்கள் நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய தானமாக கோதானம் உள்ளது. பசுவை தானமாக கோவில்களுக்கு கொடுக்கலாம். முடியாதவர்கள் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது பசுவிற்கு தேவையான உணவை தானமாக வழங்கலாம்.

agathi-keerai-dhanam

ஆயில்யம்:
ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் கோவில்களில் மரம் நடுவது, புற்று கோவில்களுக்கு அபிஷேகம் செய்வது போன்றவற்றை செய்து வந்தால் நல்லது நடக்கும்.

மகம்:
மகம் நட்சத்திரக்காரர்கள் இல்லாத ஏழை குழந்தைகளுக்கு துணிமணி வாங்கி கொடுத்தால் சகல யோகங்களும் வந்து சேரும்.

vasthira-dhanam

பூரம்:
பூரம் நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய தானமாக சிவலிங்கம் உள்ளது. அதாவது கோவில்களுக்கு சிவலிங்கத்தை தானமாக அளித்தால் பெறற்கரிய பேறு கிட்டும்.

உத்திரம்:
உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வயதானவர்களுக்கு தேவையானவற்றை உங்களால் முடிந்தவரை வாங்கி கொடுத்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.

old people

அஸ்தம்:
அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் திருமண வைபவங்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம். ஏழை திருமணத்திற்கு உதவி செய்தால் நல்லது நடக்கும்.

சித்திரை:
சித்திரை நட்சத்திரக்காரர்கள் தந்தை இல்லாத அல்லது தாய் இல்லாத ஏழை குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தால் நிச்சயம் நிறைய மாற்றங்கள் வாழ்வில் உருவாகத் துவங்கும்.

marraige-couple

சுவாதி:
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பிரச்சனை இருப்பவர்களுக்கு உதவி செய்தால் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் உருவாகும்.

விசாகம்:
விசாக நட்சத்திரக்காரர்கள் கோவிலுக்கு விக்ரகம் தானம் அளித்தல் அல்லது கோவில் புனரமைப்பு தொடர்பான விஷயத்தில் உதவி செய்தல் போன்றவை நல்ல பலனை தரும்.

vikragam1

அனுஷம்:
அனுஷ நட்சத்திரக்காரர்கள் யாருக்கு எந்த உதவி செய்யவில்லை என்றாலும் உற்ற நண்பர்களுக்கு ஓடோடி உதவி செய்து வந்தாலே எல்லா மாற்றங்களும் விரைவாக நடக்கும்.

கேட்டை:
கேட்டை நட்சத்திரக்காரர்கள் வேத காரியங்களுக்கும், வேத விற்பன்னர், அர்ச்சகர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தால் நிறைய நல்லது நடக்கும்.

homam

மூலம்:
மூல நட்சத்திரக்காரர்கள் கோவில்களுக்கு தேவையான சிறிய சிறிய பொருளுதவி செய்து வந்தாலே போதும் நிறைய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழும். அது போல் விருட்சம் கோவில்களுக்கு தானமாக வழங்கலாம்.

பூராடம்:
பூராட நட்சத்திரக்காரர்கள் குடை, நிழற்குடை போன்றவற்றை தானமாக வழங்கலாம். அல்லது வீடு, குடிசை கோவில்களுக்கு தேவையான கட்டிட உதவி போன்றவை இயலாதவர்களுக்கு உதவி செய்யலாம்.

black-umbrella

உத்திராடம்:
உத்திராட நட்சத்திரக்காரர்கள் யானை வைத்திருக்கும் கோவில்களுக்கு சென்று யானைக்கு செய்யும் உணவு செலவுகளில் உங்களால் முடிந்தவரை தானமாக ஏற்றுக் கொள்வது நிறைய நன்மைகளை வழங்கும்.

திருவோணம்:
திருவோண நட்சத்திரக்காரர்கள் காது கேட்காதவர்களுக்கு தேவையான பொருள் உதவி செய்து வந்தால் யோகம் உண்டாகும்.

அவிட்டம்:
அவிட்ட நட்சத்திரக்காரர்கள் இல்லாத ஏழை குழந்தைகளுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த உதவி செய்து வந்தாலும் நிறைய நன்மைகள் உண்டாகும்.

சதயம்:
சதய நட்சத்திரக்காரர்களை பொருத்தவரை கோவிலுக்கு அபிஷேகம் போன்றவற்றை செய்து வந்தால் நிறைய நன்மைகள் வாழ்வில் நடக்கும்.

abishegam

பூரட்டாதி:
பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் ஏழைகள் திருமண உதவி, திருமணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொருள் உதவி செய்து வந்தால் நிறைய நன்மைகள் நடக்கும்.

உத்திரட்டாதி:
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை அல்லது அவர்களுக்கு தேவையான ஏதாவது ஒரு உதவி செய்து வந்தால் நிச்சயம் நிறைய நன்மைகள் நடக்கும்.

medicine

ரேவதி:
ரேவதி நட்சத்திரக்காரர்கள் கோவில்களுக்கு உதவி செய்வதும், மங்கள வாத்தியம் வாசிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

melam-nadaswaram

இது போல் ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் தங்களால் முடிந்த தானங்களை செய்து இதுவரை இருந்து வந்த உங்களது கஷ்ட நிலை நீங்கி உங்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைய பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
மாங்கல்ய தோஷம், இரு தார தோஷம் இருப்பவர்கள் உண்மையில் எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.