மாங்கல்ய தோஷம், இரு தார தோஷம் இருப்பவர்கள் உண்மையில் எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்?

mangalyam

ஒருவருடைய ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் அல்லது இரு தார தோஷம் இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு பரிகாரம், தோஷ பரிகாரம் செய்ய சொல்வார்கள். இன்று இருக்கும் பல ஜோதிடர்கள் முறையாக இதனை சொல்லிக் கொடுப்பதில்லை. ஏனோ தானோவென்று கற்றுக் கொண்டு வந்துவிட்டு தோஷ பரிகாரம் என்ற பெயரில் எதையாவது சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அந்த ஜாதகர்கள் தான். மாங்கல்ய தோஷம், இரு தார தோஷம் உள்ளவர்கள் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

marraige-couple

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் நம் பண்பாடாக இருந்து வருகிறது. அதில் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு சிலருக்கு மட்டும் இரண்டு வாழ்க்கை என்று அமைந்து விடுகிறது. இது அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் தோஷம் செய்யும் வேலை தான். இரு தார தோஷம் என்பது மூன்று வகையாகப் பிரிக்கலாம். துணை இறந்த பின் இன்னொருவரை மணம் புரிவது, விவாகரத்து பெற்று வேறொருவரை மணம் புரிவது, அல்லது ரகசிய உறவு வைத்துக் கொள்வது இந்த மூன்றுமே இரு தார தோஷம் தான் என்கிறது ஜோதிடம்.

வரன் பார்க்க அல்லது பெண் பார்க்க ஜோதிடரை நாடி ஜாதகத்தை எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள். அவர்கள் இரு தார தோஷம் இருக்கிறது என்றால் வாழை மரத்திற்கு தாலி கட்டி வெட்ட சொல்வார்கள். இதை முறையாக எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? ஒரு சிலர் வாழை மரத்தை வெட்டிக் கொண்டு வந்து நிறுத்தச் செய்து, தோஷம் உள்ள நபரை தாலி கட்ட வைத்து, அந்த மரத்தை வெட்டுவார்கள். இது சரியா? என்று கேட்டால் நிச்சயம் சரியல்ல. மிக மிக தவறான ஒரு பரிகாரம். வெட்டிய வாழை மரத்திற்கு உயிர் இருக்காது. அப்படி இருக்கும் பொழுது தோஷம் எப்படி நிவர்த்தி ஆகும்?

vazhai-maram

வாழைமர தோட்டத்தில் சென்று குலை தள்ளாத கன்னி மரமாக பார்த்து பரிகாரம் செய்வது தான் சரியான முறையாகும். இதை இப்போது இருக்கும் ஜோதிடர்கள் பெண்களுக்கு கூட பரிந்துரைக்கிறார்கள் என்பது தான் வியப்பின் உச்சம். கன்னி மரத்திற்கு தாலி கட்டுவது என்பது ஆண்கள் செய்யும் பரிகாரம் மட்டுமே. அதை பெண்களுக்கு செய்ய சொல்வது எந்த வகையிலும் தோஷ நிவர்த்தி செய்யாது. ஜோதிடம் எதிர்காலத்தை நமக்கு காட்டும் விசித்திர பிம்பமே தவிர எதையும் அதனால் மாற்றிவிட முடியாது என்பதை அனைவரும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

எனில் மாங்கல்ய தோஷத்திற்கு என்ன செய்யலாம் என்று கேட்டால், அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த சிவ சக்தி ஸ்வரூபமான அந்த திருத்தலத்தில் வருடம் ஒருமுறை சென்று வந்தால் தோஷம் நீங்கும். அர்த்தநாரீஸ்வரர் படத்தையும், ராமருக்கு பட்டாபிஷேகம் செய்த திருவுருவப் படத்தையும் வீட்டில் வைத்து வழிபடுவதால் மாங்கல்ய தோஷம் நிவர்த்தி ஆகும். வருடம் தவறாமல் திருப்பதி சென்று வந்தால் இரு தார தோஷம் நிவர்த்தி ஆகும்.

எந்த தோஷ நிவர்த்திக்கும் பரிகாரம் செய்வதானால், ஒருமுறை மட்டுமே செய்தால் போதுமானது அல்ல என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஒருமுறை ஆலயம் சென்று வந்து விட்டாலே தோஷம் சரியாகி விட்டது என்பது தவறாகும். சர்ப்ப சாந்தி செய்வதற்கு காலஹஸ்தி சென்றுவர சொன்னால் ஒரு முறை சென்று வந்தால் போதாது. வருடா வருடம் சென்று வழிபட்டு வந்தால் தான் உங்களுடைய தோஷம் உங்களை விட்டு நீங்கும்.

rahu

நாக சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு பரிகாரம் செய்யச் சொன்னால் அந்த பரிகாரத்தை மட்டும் செய்து விட்டால் போதாது. அருகில் இருக்கும் புற்று கோவில்களுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவதால் உங்களுடைய பிரச்சினைகள் விரைவாக தீரும். நம்முடைய ஜாதகத்தில் ஒரு தோஷம் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டால், அதற்குரிய பரிகாரத்தைச் உங்களால் முடிந்தவரை முறையாக செய்துவிட்டு பின்னால் அதற்குரிய தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். அப்படியே விட்டுவிடாதீர்கள். அதுவே உண்மையான பரிகாரம் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
டிசம்பரில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா? நினைத்துக்கூட பார்க்கவில்லை. நம்ப முடியாது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.