- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval28.9.2024 புரட்டாசி 2வது சனிக்கிழமை

28.9.2024 புரட்டாசி 2வது சனிக்கிழமை

- Advertisement -

நிறைய பேருக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள். சில பேருக்கு முன்னேற்றம் இருக்காது. செய்யும் வேலையை அப்படியே செய்து கொண்டிருப்பார்கள். அந்த வேலையிலிருந்து கொஞ்சம் முன்னேறி செல்லலாம் கொஞ்சம் ப்ரோமோஷன் கிடைக்க வேண்டும் கொஞ்சம் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டாலும், அதில் தோல்வியை தழுவுவார்கள்.

பிள்ளைகள் படிப்பில் கொஞ்சம் கூட முன்னேற்றம் பாதைக்குச் செல்லாமல் அதேபோல இருப்பார்கள். ஆவரேஜ் ஸ்டூடண்டா இருப்பாங்க. ஆனா அவர்களுக்கு முதல் மதிப்பெண் எடுக்கணும்னு ஆசை இருக்கும். உங்களுடைய பிள்ளைகள் அதிபுத்திசாலியாக மாற வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம்.

- Advertisement -

பொருளாதாரத்தில் நடு நிலைமையில் இருக்கிறோம். இன்னும் கொஞ்சம் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் சறுக்கல் மட்டும்தான் வாழ்க்கையில் இருக்கிறது என்பவர்களும் நாளைய தினம் இந்த பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளை ஏகாதசி திதியோடு புரட்டாசி மாதம் 2வது சனிக்கிழமை வருகிறது. இந்த சனிக்கிழமையில் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவது என்பது ரொம்ப ரொம்ப சிறப்பு.

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு

சனிக்கிழமை காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு உங்களுடைய விரதத்தை துவங்கலாம். துளசி தீர்த்தம் எவ்வளவு வேண்டுமென்றாலும் குடித்து விரதத்தை மேற்கொள்ளலாம். முடியாது என்பவர்கள் ஏதாவது பலகாரங்கள் சாப்பிட்டு பெருமாளுக்கு தளிகை போடலாம்.

- Advertisement -

புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை, மாவிளக்கு தளிகை. பச்சரிசி மாவை நன்றாக தண்ணீரில் கழுவி சிறிது நேரம் ஊற வைத்து நன்றாக ஒரு வெள்ளை துணியில் பரப்பி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை எல்லாம் வெள்ளிக்கிழமை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சனிக்கிழமை இந்த மாவில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து நிறைய தண்ணீர் ஊற்றி விடக்கூடாது, சொட்டு சொட்டாக தண்ணீர் விட்டு பிசைந்து, மாவிளக்காக தயார் செய்து கொள்ளுங்கள்.

இதில் கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து, அந்த மாவிளக்கை தயார் செய்து கொள்ள வேண்டும். இரண்டு மாவிளக்கு போடுவது சிறப்பு. ஒரு மாவிளக்ககல் சுத்தமான நெய், இன்னொரு விளக்ககல் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு ஒரு தாம்பூல தட்டில் வைத்து பெருமாள் முன்பாக இந்த விளக்கை ஏற்றி வையுங்கள்.

- Advertisement -

கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தை எழுப்பி இந்த மாவிளக்கை ஏற்றி, பெருமாளை நாளைய தினம் வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான அடுத்த கட்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு

பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு பெருமாளுக்கு துளசி இலை மாலை வாங்கி போடுங்கள். அனுமனுக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுங்கள். கருடருக்கு நெய் தீபம் ஏற்றங்கள் மகாலட்சுமிக்கு மல்லிகை பூ அல்லது தாமரை பூ வாங்கி கொடுங்கள். வாழ்வில் இருக்கும் இன்னல்கள் அனைத்தும் தீரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்