- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை 29-05-2025 ரம்பா திருதியை

நாளை 29-05-2025 ரம்பா திருதியை

- Advertisement -

நாளை 29-5-2025 வியாழக்கிழமை யோடு சேர்ந்து இந்த ரம்பா திருதியை வந்திருக்கிறது. வைகாசி மாத வளர்பிறை திருதியை, அன்று இந்த ரம்பா திருதியை பண்டிகை கொண்டாடப்படும். அக்ஷய திருதியை நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த ரம்பா திருதியை என்பது பெரும்பாலும் நம்மில் பல பேருக்கு தெரியாத ஒரு வழிபாடு. இந்த ரம்பா திருதியை எதற்கு கொண்டாடப்படுகிறது.

பெண்கள் இந்த வழிபாட்டை வீட்டில் இருந்தபடி எப்படி மேற்கொள்ள வேண்டும். இந்த நாளில் பெண்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன. இந்த ரம்பா திருதியை விரதத்தை மேற்கொண்டால் கிடைக்கக்கூடிய பலன் என்ன இதைப்பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இன்று நாம் இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ரம்பா திருதியை உருவான கதை

ரம்பா, மேனகை, ஊர்வசி, திலோத்தமை இப்படி ஆயிரம் கணக்கானவர்கள் தேவலோகத்தில் இருக்கக்கூடிய அழகிகள். இப்படி மொத்தமாக 66,000 அழகிகள் தேவலோகத்தில் இருப்பதாக ஒரு கணக்கு.

இத்தனை அழகிகளுக்கும் தலைவி ரம்பா. ரம்பை தன்னுடைய அழகையும் நளினத்தையும் கடைசி வரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், தேவலோகத்தில் ரம்பை நிரந்தரமாக தலைமை பதவி வகுக்க வேண்டும் என்பதற்காகவும், கௌரி தாயை நினைத்து விரதம் இருந்து, வரத்தைப் பெற்ற நாள் தான் இந்த ரம்பா திருதியை. ரம்பை நிரந்தரமாக தேவலோகத்தின் தலைமை பதவியில் இருக்க, பராசக்தி கௌரி தேவி, ரம்பைக்கு வரத்தை கொடுத்த நாள் தான், இந்த ரம்பா திருதியை.

- Advertisement -

பெண்கள் விரதம் இருக்க வேண்டிய காரணம்

இந்த நாளில் ரம்பையை மனதில் நினைத்துக் கொண்டு, அம்பாளை யார் வழிபாடு செய்து என்ன வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும். அதாவது இளமையாக இருக்கக்கூடிய பெண்கள், தங்களை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முக வசீகரத்தோடு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த விரதத்தை மேற்கொண்டால் பெண்களின் முகம் ராசியான முகமாகிவிடும்.

அழகு என்பது வெறும் தோற்றத்திற்காக செல்லக்கூடிய வார்த்தை அல்ல. தெய்வீக கலை பெண்களுக்கு கிடைக்க இந்த ரம்பா திருதியை அன்று அம்பாளை வழிபடலாம். உங்களை பார்த்துவிட்டு எந்த ஒரு காரியத்தை வீட்டில் இருப்பவர்கள் துவங்கினாலும், அது அவர்களுக்கு முதல் முறையிலேயே வெற்றியை கொடுக்கும். நீங்க மகாலட்சுமியின் மறுசுருவாக திகழ்வீர்கள். நீங்களும் தேவலோகத்து பெண்கள் வரிசையில் வந்து விடுவீர்கள். அந்த அளவுக்கு அழகும் ஆசீர்வாதமும் பொலிவும் உங்களுக்கு கிடைக்கும். நாளைய தினம் அம்பாளை பின் சொல்லக் கூடிய முறையில் வழிபாடு செய்தால்.

- Advertisement -

திருமணம் ஆகி குழந்தை இல்லாத பெண்கள், நாளைய தினம் அம்பிகையை மனதார நினைத்து பூஜை செய்தால் கூடிய விரைவில் அவர்களுக்கான குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணமாகாத கன்னிப்பெண்கள் நாளை தினம் அம்பிகையே வழிபட்டால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

ரம்பா திருதியை வழிபாடு

நாளைய தினம் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது. நாளை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணி வரை இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்கு வழிபாட்டை மேற்கொள்ளலாம். உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் படத்திற்கு முன்பாக விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். அம்பாளுக்கு 2 வாழைப்பழங்கள் நெய்வேதியம் ஆக வைத்து, வாசம் நிறைந்த ஊதுபத்தி ஏற்றி வைத்து பின் சொல்லக் கூடிய இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும். வாழை மரத்திற்கு ரம்பா என்ற ஒரு பெயர் இருக்கிறது. இதனால் தான் வாழைப்பழத்தை நாளைய தினம் நெய்வேதியமாக வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

மந்திரம்

ஓம் சாவித்ரி சரஸ்வதி பத்னீம் தேஹி
புத்ரம் தேஹி க்ரஹேம் நமோஸ்துதே!

இதையும் படிக்கலாமே: மூன்றாம் பிறை பண வசிய மந்திரம்

மந்திரத்தை உச்சரித்துவிட்டு அம்பாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து விட்டு உங்களுடைய வேண்டுதலை சொல்லி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக வைத்த அந்த வாழைப்பழத்தை எடுத்து, பூஜை செய்த பெண் பிரசாதமாக சாப்பிட்டு விட வேண்டும். நாளைய தினம் பெண்கள் அம்பாளை வேண்டி விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொண்டால் என்ன வரம் கேட்டாலும் அது அப்படியே கிடைக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த எளிமையான வழிபாடு உங்களுக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்