நாளைய தினம் கார்த்திகை மாதம் வந்திருக்கும் இரண்டாவது வெள்ளிக்கிழமை. நாளைய தினத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எவர் ஒருவர் இந்த பரிகாரத்தை செய்கிறீர்களோ, அவர்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டங்கள் கூடிய விரைவில் தீருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஒரே ஒரு ஏலக்காயை வாயில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்லி உங்களுக்கு தேவையான பணத்தை இந்த பிரபஞ்சத்திடம் கேட்டால், பிரபஞ்சம் அந்த பணத்தை சீக்கிரம் கொண்டு வந்து உங்கள் கையில் சேர்க்கும்.
பிரம்ப முகூர்த்த நேரத்தில் இந்த பூமியில் அதிக சத்தம் இருக்காது. மனிதர்களுடைய எண்ண ஓட்டங்கள் அதிகமாக இருக்காது. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கக் கூடிய நேரம். அந்த நேரத்தில் நாம் கண்விழித்து வைக்கக்கூடிய பிரார்த்தனை சீக்கிரம் பலிக்கும். அதுதான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மறைந்திருக்கும் சூட்சம ரகசியம்.
சரி, நாளை என்ன செய்வது. நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பான பலனை தரும். குளிர், குளிக்க முடியல அப்படின்னு சாக்கு போக்கு சொல்லாதீங்க. சுடுதண்ணி போட்டு காலையில் 4 மணிக்கே எழுந்து குளித்து விடுங்கள். வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரே ஒரு ஏலக்காயை வாயில் போட்டுக் கொள்ளுங்கள். வாயில் பக்கவாட்டில் ஏலக்காயை அடக்கிக் கொண்டு மகாலட்சுமியின் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி விடுங்கள்.
மகாலட்சுமி வசிய மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் மகாலட்சுமி வசி வசி ஸ்வாஹா !
அதன் பிறகு உங்களுக்கு எவ்வளவு கடன் சுமை இருக்கிறது, உங்களுடைய பிரச்சனையை தீர்ப்பதற்கு எவ்வளவு பணம் வேண்டுமோ, அதை இந்த பிரபஞ்சத்திடம் கேளுங்கள். உதாரணத்திற்கு எனக்கு 1 லட்சம் ரூபாய் பணம் சீக்கிரம் தேவை, சீக்கிரம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சம்பாதிக்க வழி காட்டு மகாலட்சுமி தாயே, என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரார்த்தனையை வைப்பதற்கு முன்பு நம்முடைய தகுதி என்ன என்பதையும் நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
25 ஆயிரம் ரூபாய் மாதம் வருமானம் வாங்குபவருக்கு, ஒரு லட்ச ரூபாய் தேவை என்றால் நியாயம். வெறும் 25 ரூபாய் மாத வருமானத்திலிருந்து, சராசரி நடுத்தர வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு, ஒரு கோடி தேவை என்று பிரார்த்தனை வைக்கக்கூடாது. அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். நியாயமான கோரிக்கை, நியாயமான பண தேவை அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய பரிகார முறை இது. நாளைய தினத்தை தவிர விடாதீர்கள்.
உங்களால் பூஜை அறையில் விளக்கு ஏற்ற முடியும் என்றால் விளக்கு ஏற்றி பூஜையறையில் அமர்ந்தும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். விளக்கு ஏற்ற முடியாது என்பவர்கள் விளக்கேற்றாமல் வழிபாட்டை செய்தாலும் நிச்சயம் 100% பலன் கிடைக்கும். இந்த வழிபாடு உங்களுடைய கடன் சுமையை பணக்கஷ்டத்தை உடனடியாக போக்கும். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு. மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு ஏலக்காயை வெளியில் துப்பி விடலாம். தவறு கிடையாது.
ஏலக்காயை வாயில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல இயலாதவர்கள், ஏலக்காயை வாயில் போட்டு மென்று விழுங்கி, பின்பு மந்திரத்தை உச்சரித்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஏலக்காய் வாசம் உங்கள் வாயில் இருக்கும் போது மந்திரத்தை உச்சரிக்கும் போது வசிய தன்மை பல மடங்கு அதிகரிக்கும் என்பதற்காகத்தான் அந்த மந்திரத்தை சொல்லும்போது, ஏலக்காயை வாயில் போட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: மீண்டும் பிறவாமை தரும் முக்தி ஸ்தலம்
ஆக ஏலக்காய் போடாமல் மந்திரத்தை உச்சரிக்கும் போது வசிய தன்மை என்பது குறைவாக இருக்கும் அவ்வளவுதான். ஏலக்காய் பரிகாரம் ஏராளமான பண வரவை நிச்சயம் தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.