3 நிமிஷத்துல இட்லி தோசைக்கு சூப்பரான காரச் சட்னி! இப்படி ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்களேன்.

kara-chutney1
- Advertisement -

காரச் சட்னி என்பது ஊருக்கு ஊர், வீட்டுக்கு வீடு ஒவ்வொருவிதமாக இருக்கும். அந்த வரிசையில் இன்றைக்கு ஒரு புதுவிதமான கார சட்னியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது கொஞ்சம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சட்னியும் கூட. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த சட்னியை வாரத்திற்கு மூன்று நாட்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக இந்த சட்னியில் தேங்காய் சேர்க்க போவது கிடையாது. டயட் கண்ட்ரோல் இருக்கும். சரி, ரெசிபிக்கு போகலாம் வாங்க.

முதலில் இந்த ரெசிபிக்கு தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். நல்லெண்ணெய் – 2 ஸ்பூன், உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், வர மிளகாய் 5 லிருந்து 7, சின்ன வெங்காயம் – 15 லிருந்து 20 தோலுரித்து, புளி – சிறிய துண்டு, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு தோலுரித்தது – 5 பல், கறிவேப்பிலை 1/2 கைப்பிடி அளவு, புதினா – 1/2 கைப்பிடி அளவு.

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் முதலில் உளுத்தம் பருப்பு, வரமிளகாய், புளி, இஞ்சி, பூண்டு, இவைகளை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் 50% சிவந்து வந்தவுடன், தோல் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து, வதக்கவேண்டும். சின்ன வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

chinna-vengayam

அதன் பின்பு இறுதியாக இறக்குவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பாக, கறிவேப்பிலையையும் புதினாவையும் சேர்த்து வதக்கி, அடுப்பை அணைத்துவிட்டு, இதை தனியாக ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸி ஜாரில் இந்த கலவையை ஒன்றாக சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, மைய அரைத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் நிறைய ஊற்ற வேண்டாம். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முந்தைய நாளே வெங்காயத்தை உரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால், மறுநாள் காலை ஐந்து நிமிடத்தில் இந்த சட்னி தயாராகி இருக்கும். இதற்கு இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து போட்டுக்கொள்ளுங்கள். அவ்வளவு தான்.

pudina

எத்தனை இட்லி தோசை சாப்பிட்டோம் என்ற கணக்கே கிடையாது. உள்ளே இறங்கிக்கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு காரசாரமான சட்னி இது. கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, சேர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கியமும் அதிகரிக்கும். ட்ரை பண்ணி பாருங்க உங்க வீட்லயும்.

இதையும் படிக்கலாமே
ஒரே நாளில் 1 பைசா செலவில்லாமல் இந்த 1 பொருளை மட்டும் வைத்தே எலி மற்றும் பெருச்சாளியை விரட்டி அடித்து விடலாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -