ஒரே நாளில் 1 பைசா செலவில்லாமல் இந்த 1 பொருளை மட்டும் வைத்தே எலி மற்றும் பெருச்சாளியை விரட்டி அடித்து விடலாமா?

rat-tablet

எலி மற்றும் பெருச்சாளியின் தொல்லை பொதுவாக தோட்டத்திலும், வீடுகளிலும் மிகப் பெரிய பிரச்சனையாகவே இருக்கும். என்ன செய்தாலும் அதிலிருந்து நம்மால் தப்பிக்கவே முடியாது. எலி மருந்து வாங்கி வைத்தாலும் அதையும் சாப்பிட்டு தெம்பாகவே நம் வீட்டில் சுற்றிக் கொண்டிருக்கும். எங்கிருந்து தான் வருகிறது என்று தெரியாது! ஆனால் அது வந்த சுவட்டை மட்டும் எங்காவது விட்டு சென்றிருக்கும். ஒரே நாளில் ஒரு பைசா செலவில்லாமல் எப்படி வீட்டில் இருக்கும் எலியை ஓட ஓட விரட்டி அடிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

rat

குட்டி எலியை விட பெருச்சாளியின் தொல்லை நமக்கு சற்று கடுப்பை ஏற்படுத்தும். எதையாவது கடித்து விட்டு அல்லது நோண்டி விட்டு சென்றிருக்கும். அது சரி செய்வதற்கு நமக்கு ஒரு வேலையாகவே போய்விடும். நாமும் என்னவெல்லாமோ முயற்சி செய்து பார்த்திருப்போம். ஆனால் ஒரு பலனும் கைகொடுத்து இருக்காது. வீட்டை விட தோட்டத்தில் அது செய்யும் அட்டகாசம் தாங்கவே முடியாது. செடிகளை எல்லாம் நாசம் செய்து விட்டிருக்கும். அதை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறீர்களா? அப்படின்னா உங்களுக்கு இந்த டிப் கண்டிப்பா பயன் தரும்.

எலியை விரட்ட எலி மருந்து வாங்கும் செலவை விட, இந்த ஒரு பொருள் அவ்வளவு விலை உள்ளது அல்ல. நாம் தலைவலி, காய்ச்சல் என்று வந்து விட்டால் உடனே ஒரு மாத்திரையை எடுத்து போட்டு விடுவோம். அது தான் பாராசிட்டமால். இந்த பாராசிட்டமால் மாத்திரையை வைத்து தான் எலி மற்றும் பெருச்சாளியை வந்த சுவடே தெரியாமல் ஓட ஓட விரட்டி அடிக்கப் போகிறோம். இது 100% பலனை நிச்சயமாக கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

paracetamol

எலிக்கு பிடித்த உணவாக இருக்கும் ஒரு சில பொருட்களை இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு அரிசிமாவு அல்லது கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் எலிக்கு பிடித்த கருவாடு, மீன் போன்ற துண்டுகளை சேர்க்கலாம். இரண்டு அல்லது மூன்று பாராசிட்டமால் மாத்திரைகளை நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதையும் இதனுடன் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எலிகள் எங்கெல்லாம் நடமாடும் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அந்த இடத்தில் எல்லாம் ஒரு உருண்டைகளை வைத்து விடுங்கள். அதனை சாப்பிடும் எலி நிச்சயமாக இறந்து போய்விடும். சாகும் முன் எலி குடிக்க தண்ணீர் தேடி அலையும். தண்ணீர் குடித்து விட்டால் அது தப்பித்துக் கொள்ளும். எனவே எங்கும் தண்ணீரை மட்டும் அது குடிக்குமாறு வைத்து விடாதீர்கள். அதை மட்டும் சற்று ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் தூங்கியபின் இதை செய்யுங்கள்.

rat0

அப்போது தான் மற்ற உயிரினங்கள் அதனை சாப்பிடாமல் இருக்கும். குறிப்பாக குழந்தைகளிடம் இருந்து எச்சரிக்கையாக வையுங்கள். தோட்டத்தில் எலி பொந்துகளில் வைத்து விட்டால் போதும். அந்த இடத்தில் எத்தனை எலிகள் இருந்தாலும் அத்தனையும் சாப்பிட்டு விட்டு எங்காவது போய் இறந்துவிடும். உங்களுக்கு பிரச்சனை முடிந்து விட்டது. வீட்டில் சமையல் அறையில் சுற்றிக் கொண்டிருக்கும் எலியும் இதனை சாப்பிட்டு விட்டு தண்ணீர் தேடி அலைந்து கிடைக்காமல் வெளியே சென்று இறந்து விடும்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு டீ ஃபில்டர் எப்பவுமே அழுக்காதா இருக்குமா? ஒருவாட்டி 5 நிமிஷம் நேரத்தை ஒதுக்கி இப்படி க்ளீன் பண்ணிதா பாருங்களேன்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.