வாழ்க்கையில் வரும் தீராத துயரங்கள், துன்பங்கள் இவைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். காரணம் இருக்கக்கூடிய கெடுதலை அளிப்பதற்காகவே அவதரித்தவள் இந்த துர்க்கை அம்பாள். அது மட்டும் அல்லாமல் வெற்றி கடவுள் துர்க்கை அம்மன். துர்க்கையை வழிபாடு செய்பவர்களுக்கு என்றைக்குமே தோல்வி கிடையாது.
எந்த வருடத்திலும் இல்லாத சிறப்பாக, இந்த வருடம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து அஷ்டமி திதியானது வந்திருக்கிறது. இந்த நாளை துர்காஷ்டமி ஆக கொண்டாடுகிறார்கள். இந்த நாளை நாம் தவர விடலாமா. துர்க்கையம்மனை வழிபாடு செய்ய செவ்வாய்க்கிழமையை விட மிகச்சிறந்த ஒரு நாள் கிடையாது.
அதிலும் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு தோல்விகள் இல்லை. இந்த சக்தி வாய்ந்த நாளில் துர்க்கை அம்மனை எப்படி வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.
செவ்வாய்க்கிழமை துர்க்காஷ்டமி வழிபாடு
செவ்வாய்க்கிழமை காலையிலேயே இந்த விரதத்தை துவங்கி விடுங்கள். துர்க்கை அம்மனை மனதார நினைத்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு விரதத்தை துவங்குங்கள். செவ்வாய்க்கிழமை ராகு கால நேரம் மதியம் 3:00 டு 4:30 மணி வரை இருக்கிறது. அந்த நேரத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று, துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.
முடியாதவர்கள் அந்த கோவிலிலேயே அமர்ந்து “ஓம் தும் துர்காயை நமஹ” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். துர்காஷ்டமி அன்று துர்க்கை மந்திரத்தை சொல்லுவதற்கு கணக்கு கிடையாது. எத்தனை முறை நீங்கள் இந்த மந்திரத்தை அதிகபட்சமாக உச்சரிக்கிறீர்களோ, அந்த அளவிற்கு துர்க்கை அன்னையின் ஆசிர்வாதம் கிடைக்கும். முடிந்தால் துர்க்கை அம்மனுக்கு நாளைய தினம் ராகுகால நேரத்தில் எலுமிச்சம் பழம் தீபம் ஏற்றலாம்.
அப்படி இல்லை என்றால் இரண்டு மண் அகல் விளக்குகளில் சாதாரண நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்றுவது சிறப்பான பலனை கொடுக்கும். உங்களால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீட்டிலேயே அம்மனுக்கு முன்பு வெற்றிலையை வைத்து குங்கும அர்ச்சனை செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.
கெட்ட சக்தியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், எதிரி தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், வியாபாரத்தில் முடங்கிப் போய் நஷ்டமானவர்கள், எல்லாம் நாளைய தினம் துர்கை அம்மன் வழிபாடு செய்யுங்கள். உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றலை துவம்சம் செய்ய அந்த துர்கா தேவி துணையாக நிற்பாள்.
இது மட்டுமா நம்முடைய மனதிற்குள் இருக்கக்கூடிய அழுக்கு, கெட்ட எண்ணம், அசுர குணம், இவைகளை எல்லாம் ஒடுக்கி அடக்கவும் துர்க்கை அம்மனால் மட்டுமே முடியும். நம்மிடம் இருக்கும் கெட்ட எண்ணம் அசுர குணத்தை விட கொடுமையானது. நமக்கு கெடுதல் செய்யக்கூடியது. அந்த கெட்ட எண்ணத்தில் இருந்து விடுபடவும் நீங்கள் துர்க்கை அம்மனை வழிபடலாம்.
இதையும் படிக்கலாமே: படிப்பில் ஆர்வம் பெருக ஆஞ்சநேயர் வழிபாடு
நம்மை விட்டு கெடுதல் விலகி விட்டால் நன்மை நம்மை தேடி தானாக வந்துவிடும். நாளை துர்காஷ்டமி தினத்தில் அனைவரும் துர்கையம்மன் வழிபாடு செய்து கெடுதலில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே என்ற கருத்தினை முன்வைத்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதினைந்து நிறைவு செய்து கொள்வோம்.