வசதியானவர்களாக இருந்தாலும் சரி வசதியற்றவர்களாக இருந்தாலும் சரி தங்களுடைய குழந்தைகள் நன்றாக படித்து ஒரு உயர்ந்த அந்தஸ்தை அடைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அதற்காக தான் குழந்தைகளின் படிப்பில் அதிக அளவு அக்கறையும் எடுத்துக் கொள்கிறோம். எவ்வளவு அக்கறை எடுத்தாலும் எவ்வளவு செலவு செய்தாலும் ஒரு சில குழந்தைகளால் தங்களுடைய படிப்பில் ஆர்வம் செலுத்த முடியாமல் கஷ்டப்படுவார்கள். அப்படி கஷ்டப்படக்கூடிய குழந்தைகள் தாங்களே விருப்பப்பட்டு படிப்பில் ஆர்வம் கொண்டு நன்றாக படிப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
படிப்பில் ஆர்வம் பெருக வழிபாடு
குழந்தைகள் படிப்பதில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் உடனே நம் நினைவுக்கு வரக்கூடியவர்கள் ஹயக்ரீவரும், சரஸ்வதி தேதியும் தான். இவர்கள் இருவருமே ஞானத்திற்கு அதிபதியாக கருதப்படுகிறார்கள். அதே சமயம் இவர்களை தவிர்த்தும் ஒரு சில தெய்வங்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் விநாயகப் பெருமானும், ஆஞ்சநேயரும். விநாயகர் பெருமானை முறையாக வழிபாடு செய்யக்கூடிய பிள்ளைகளுக்கு புத்தி கூர்மை அதிகரிக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். மேலும் விநாயகர் பெருமானை நினைத்து நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் நம்முடைய மூளை திறனை அதிகரிக்க கூடியதாக திகழ்கிறது. அதேபோல் ஆஞ்சநேயருக்கும் ஒரு சில வழிமுறைகளை நாம் பின்பற்றும் பொழுது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
இந்த வழிபாட்டை ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டும். ஆஞ்சநேயருக்கு எப்படி சனிக்கிழமை உகந்த கிழமையாக திகழ்கிறதோ அதேபோல்தான் அமாவாசை திதியும் உகந்த திதியாக திகழ்கிறது. ஒவ்வொரு அமாவாசையிலும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு ஆஞ்சநேயரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறலாம். அப்படிப்பட்ட அமாவாசை திதி அன்று வீட்டில் இருக்கக்கூடிய பிள்ளைகள் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய ஆஞ்சநேயரின் அருளால் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு திறன் அதிகரிக்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை அடைவார்கள்.
அமாவாசை திதி அன்று நாம் நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் என்று எதையுமே பார்க்க தேவையில்லை. அதனால் நம்மால் எப்பொழுது இந்த தீபத்தை ஏற்ற முடியுமோ அப்பொழுது ஏற்றினால் போதும். அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயரின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய ஆஞ்சநேயருக்கு இரண்டு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றிவிட்டு அந்த நெய்யில் இரண்டு சிட்டிகை அளவிற்கு மஞ்சள் தூளை போட வேண்டும். பிறகு ஆஞ்சநேயருக்கு துளசி மாலை வாங்கி கொடுத்து படிக்கின்ற பிள்ளைகளின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஒவ்வொரு அமாவாசையிலும் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்யக்கூடிய பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே: நவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு
எளிமையான இந்த தீப வழிபாட்டை ஆஞ்சநேயர் மீது முழு நம்பிக்கை வைத்து படிக்கின்ற பிள்ளைகள் செய்வதன் மூலம் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.