- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamil30 நாளில் முகம் வெள்ளையாக

30 நாளில் முகம் வெள்ளையாக

- Advertisement -

சருமம் சார்ந்த பிரச்சினைகளை விரட்டி அடித்து முகத்தை பளிங்கு போல பளபளப்பாக வைத்துக் கொள்ள நாம் பெரிதாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை! நம் வீட்டில் இருக்கக்கூடிய சாதாரண பொருட்களை பயன்படுத்தி எப்படி இதை செய்வது? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

சருமம் சார்ந்த பிரச்சினைகளை விரட்டி அடிப்பதற்கு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் நிறைந்துள்ள வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஏராளமான பொட்டாசியம் நிறைந்துள்ளது எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தையாவது சாப்பிடுங்கள் சருமம் பளபளக்கும்.

- Advertisement -

இப்போது இந்த வாழைப்பழத்தின் தோலில் ஒட்டி இருக்கக்கூடிய கூழ் போன்ற பகுதியை ஸ்பூன் பயன்படுத்தி லேசாக கீறி விடுங்கள். பின்பு அதன் மீது அரை ஸ்பூன் அளவிற்கு பச்சரிசி மாவை தூவி விடுங்கள். பின் அதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேனை சேர்த்து விரல்களால் நன்கு கலந்து விட்டு முகத்தில் வாழைப்பழ தோலை அப்படியே எடுத்து மென்மையாக தேய்த்து விடுங்கள்.

ஒரு ஐந்து நிமிடத்திற்கு சருமத்தில் மசாஜ் செய்வது போல மென்மையாக தேய்த்து விடுங்கள். முகம் மட்டுமல்லாமல் கழுத்து பகுதிகளிலும் தடவி விடுங்கள். பின்பு பத்து நிமிடம் நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரில் முகத்தை அலச வேண்டும். இது போல வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் 30 நாட்களில் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு நல்ல மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.

- Advertisement -

முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், மற்ற சரும தொந்தரவுகள் எதுவாகினும் இதை செய்யும் பொழுது நல்ல நிவாரணம் கிடைக்கும். முகப்பருக்களை எளிதாக இவை விரட்டி அடிக்கும். வாழைப்பழத் தோலில் விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. தேன் சருமத்தை ஹைட்ரேட் செய்யும். அரிசி மாவு முகத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.

இந்த மூன்றையும் கலந்து முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற தொந்தரவுகள் எளிதாக நீங்கி, முகத்தை கண்ணாடி போல மாற்றம் அடைய செய்யும். சிலருக்கு மூக்கில் சொரசொரப்பாக கருப்பாக இருக்கும், சிலருக்கு தாடை பகுதிகளில் சொரசொர தன்மை இருக்கும், சிலருக்கு நெற்றி பகுதிகளில் மட்டும் இப்படி இருக்கும். இந்த மாதிரியான தொந்தரவுகளுக்கும் இதனை செய்வதன் மூலம் நிவாரணம் தேடலாம்.

இதையும் படிக்கலாமே:
13-03-2025 குபேர பௌர்ணமி தீபம்

எண்ணெய் பசை உள்ள சருமம் மற்றும் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இந்த குறிப்பு ரொம்பவும் உபயோகமாக இருக்கும் ஆனால் மிருதுவான ரொம்பவும் சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் இதனை செய்யும் பொழுது முகத்தில் எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அது போன்ற சருமம் கொண்டவர்கள் வாழைப்பழத்தின் தோலை மட்டும் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்து பின்பு உலர விட்டு குளிர்ந்த நீரினால் கழுவி விடுங்கள் போதும். மற்ற இரண்டு பொருட்களை சேர்க்க வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும தன்மை இருக்கும், எனவே ஒருவருக்கு ஒத்துக்கொள்வது இன்னொருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். ஒருமுறை செய்து பார்த்த பின்பு நல்ல பலன் கிடைத்தால் அதனை தொடருங்கள்.

சற்று முன்