எவ்வளவு கருப்பாக இருப்பவர்களையும், 30 நாட்களில் வெள்ளையாக மாற்ற இந்த 1 பொருள் போதும். நீங்க ஆளே அடையாளம் தெரியாம அப்படியே தலைகீழா மாறிடுவீங்க.

face1
- Advertisement -

சில பேர் பார்ப்பதற்கு ரொம்பவும் டல்லான கலரில் இருப்பார்கள். அவர்களுக்கு ரொம்பவும் வெள்ளையாக வேண்டும் கலராக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இப்படி உடனடியாக நம்முடைய சருமத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு செயற்கையான க்ரீம்கள் நிறைய கடையில் கிடைக்கின்றது. ஆனால், அப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் முகத்தில் போட்டால் நம்முடைய முகத்தில் மேலே இருக்கும் தோல் உரிந்து, வெள்ளை ஆனது போல ரொம்பவும் செயற்கையான ஒரு தோற்றம் கிடைத்துவிடும். அப்படிப்பட்ட ஆபத்தான விஷயங்களை எல்லாம் முயற்சி செய்து பாக்காதீங்க. நீங்க வெள்ளையாக வேண்டும் என்று ஆசைப்பட்டால், பின் சொல்லக்கூடிய குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே போதும். டல்லாக இருக்கும் ஸ்கின் கூட கொஞ்சம் கொஞ்சமாக கலராக மாறத் தொடங்கி விடும்.

கருப்பாக இருப்பவர்கள் வெள்ளையாக மாறுவதற்கு சில அழகு குறிப்புகள்:
என்னதான் முகத்துக்கு மேலே பேக் போட்டாலும் நாம் இயற்கையாக வெள்ளையாக மாற வேண்டும் என்றால், சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நிறைய காய்கறிகள் சாப்பிட வேண்டும். நிறைய பழ வகைகள் சாப்பிட வேண்டும். நிறைய நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வர வேண்டும். கீரை வகைகளை தொடர்ந்து சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உங்கள் உடம்புக்கு தேவையான அளவு நீர்ச்சத்து இருந்தால் தான் சருமம் ஈரப்பதத்தோடு இருக்கும். இல்லையென்றால் தோல் டிரையாகி சுருக்கம் விழுந்து சருமம் டல் அடிக்கத்தான் செய்யும்.

- Advertisement -

மேலே போடக்கூடிய பேஸ் பேக் 30% பலன் கொடுத்தால், மீதி இருக்கும் 70% நீங்கள் சாப்பிடக்கூடிய பொருட்களில் தான் சரும அழகு பாதுகாக்கப்படும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிட்டுக்கொண்டு, பின் சொல்லக்கூடிய இந்த குறிப்பை பின்பற்றினால் சீக்கிரம் வெள்ளை ஆகிவிடலாம். 30 நாட்களில் உங்கள் நிறத்தில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

சரி இப்போ மேலே போடக்கூடிய அந்த ஃபேஸ் பேக் என்ன என்று பார்த்து விடுவோம். இந்த பேஸ் பேக்கை தயார் செய்ய நாம் பயன்படுத்த போகும் பொருள் முல்தானி மெட்டி. சுத்தமான முல்தானி மெட்டி பொடியை வாங்கிக் கொள்ளுங்கள். தேவையான அளவு ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். இதை கலக்க நாம் பயன்படுத்தப் போகும் பொருள் கேரட் சாறு, பீட்ரூட் சாறு, வெள்ளரிக்காய் சாறு, தக்காளி சாறு, உருளைக்கிழங்கு சாறு இந்த ஐந்து சாறையும் பயன்படுத்த போகின்றோம். மொத்தமாக கிடையாது ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு சாறு மாற்றி மாற்றி இதில் ஊற்றி கலக்கலாம்.

- Advertisement -

இந்த வாரம் பீட்ரூட் சாறு பயன்படுத்தினால், அடுத்த வாரம் கேரட் சாறு பயன்படுத்துங்கள். அதற்கு அடுத்த வாரம் தக்காளி சாறு என்று மாற்றி மாற்றி பயன்படுத்தி வர வேண்டும். (இப்படி எந்த காயில் இருந்தும் பழத்திலிருந்தும் சாறு எடுக்கும் போது தண்ணீர் ஊற்றி எடுக்கக் கூடாது. பீட்ரூட்டை நன்றாக துருவி அப்படியே பிழிந்தாலே உங்களுக்கு சாறு கிடைக்கும். அதே போல தான் கேரட் வெள்ளரிக்காய் இவற்றில் இருந்தும் சாறு எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது).

எடுத்து வைத்திருக்கும் முல்தானி மெட்டியில் தயாராக இருக்கும் பீட்ரூட் சாறு ஊற்றி கலந்தால் ஒரு பேக் கிடைத்திருக்கும். அதை சுத்தமாக இருக்கும் உங்கள் முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். சோப்பு போட்டு கழுவக்கூடாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த பேக்கை நீங்கள் போடலாம். இப்படியாக இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வர உங்களுடைய சரும நிறத்தில் நல்ல மாற்றம் தெரிய தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: கையோடு உதிர்ந்து விழும் உங்க முடியை இனி நீங்களே இழுத்தா கூட உதிராத அளவுக்கு ஸ்ட்ராங்கா மாற்ற இது தாங்க பெஸ்ட். நல்லா கருகருன்னு வளரவதோடு ஒரு முடி கூட உதிராது.

டல்லாக இருக்கக்கூடிய ஸ்கின் கூட அழகாக மாறிவிடும். இந்த பேக்கை நாம் முகத்திற்கு பயன்படுத்தினாலும், பேக் போட்டு கழுவிய பின்பு உங்கள் முகத்திற்கு செட்டாகும்படி ஒரு மாய்ஸ்ரைசர் க்ரீம் போட்டுக்கோங்க. மாய்சரைஸ் கிரீம் பயன்படுத்தக்கூடிய பழக்கம் உங்களுக்கு இல்லை என்றால் சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயை யாவது முகத்தில் கொஞ்சம் தடவிக் கொள்ள வேண்டும். எளிமையான இந்த அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -