கையோடு உதிர்ந்து விழும் உங்க முடியை இனி நீங்களே இழுத்தா கூட உதிராத அளவுக்கு ஸ்ட்ராங்கா மாற்ற இது தாங்க பெஸ்ட். நல்லா கருகருன்னு வளரவதோடு ஒரு முடி கூட உதிராது.

hair fall oil
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் முடி உதிர்வு என்பது எல்லோரும் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சனை தான். இதற்கு நம்முடைய சீதோசனம் மாற்றங்கள், உணவு பழக்க வழக்கம், நம்முடைய தினசரி வேலைகளில் ஏற்படும் மன அழுத்தம் போன்றவை எல்லாம் இதற்கு முக்கிய காரணம். இத்தனை பிரச்சனைகளுக்கு இடையே முடி வளர்வதே பெரிய விஷயம் என்றால் இதில் வளரும் முடி உதிர்ந்து கொண்டே இருந்தால் என்ன செய்வது என்ற கவலை எல்லோருக்குமே இருக்கிறது.

இந்த ஒரு எண்ணையை நீங்கள் தயாரித்து பயன்படுத்தி வந்தால் இந்த முடி உதிர்வு பிரச்சனையிலிருந்து நிரந்தரமாக தீர்வு கிடைக்கும். நாம் என்ன தான் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் கூட இயற்கையான பொருட்களை மூலம் கிடைக்கும் பலன் அதிகம் அத்துடன் இதனால் பக்க விளைவும் கிடையாது. இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் காலம் காலமாய் பயன்படுத்தி வந்த முடி வளர்ச்சிக்கான எண்ணெய் தயாரிப்பு முறை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

முடி உதிராமல் நீண்டு வேகமாக வளர எண்ணெய்
இந்த எண்ணெய் தயாரிக்க நமக்கு தேவையான பொருட்கள் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை, வெந்தயம் கருஞ்சீரகம். இதில் நீங்கள் கறிவேப்பிலையை எந்த அளவிற்கு எடுக்கிறீர்களோ அதை விட ஒரு மடங்கு அதிகமாக தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்தயம் கருஞ்சீரகம் தல ஒரு ஸ்பூன் மட்டும் போட்டால் போதும். நீங்கள் ஒரு லிட்டருக்கு மேலே காய்ச்சுவதாக இருந்தால் மட்டும் 50 கிராம் அளவு போட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது கருவேப்பிலை எடுத்து நன்றாக சுத்தம் செய்து அலசிய பிறகு தண்ணீர் இல்லாமல் துணியை வைத்து சுத்தமாக துடைத்து விடுங்கள். அதன் பிறகு லேசாக நிழலில் ஆற வைத்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலை காய்ந்து விடக் கூடாது. ஈரம் இல்லாமல் ஆறினால் மட்டும் போதும் இப்போது மிக்ஸி ஜாரில் நீங்கள் ஆற வைத்த கருவேப்பிலையை சேர்த்து எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய் ஊற்றி அரைக்க வேண்டும்.

- Advertisement -

இதற்கு தண்ணீர் பயன்படுத்தி அரைக்க கூடாது. தேங்காய் எண்ணெய் ஊற்றா விட்டாலும் கருவேப்பிலை மசிந்து அரையாது. கறிவேப்பிலை முழுவதையும் தேங்காய் எண்ணெயை சேர்த்து அரைத்த பிறகு அதை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து விடுங்கள். மீதம் இருக்கும் எண்ணெயும் அரைத்த இந்த கறிவேப்பிலையில் ஊற்றி கலந்து விடுங்கள். மேலும் இத்துடன் எடுத்து வைத்திருக்கும் வெந்தயம், கருஞ்சீரகம் இரண்டையும் சேர்த்த பிறகு பாத்திரத்தின் மேல் புறம் துணி வைத்து நன்றாக இறுக்க கட்டி விடுங்கள்.

இதை காலை நேர வெயிலில் கொண்டு வெளியில் வைத்த பிறகு மறுபடியும் மாலையில் வீட்டிற்குள் கொண்டு வந்திருங்கள். இதே போல் ஒரு வாரம் வரை வெயிலில் வைத்து எடுக்க வேண்டும் அப்போது இந்த எண்ணையில் உள்ள கறிவேப்பிலை வெந்தயம் கருஞ்சீரகத்தில் சாறு எல்லாம் இறங்கி எண்ணெய் கருப்பு நிறமாக மாறி வந்திருக்கும் அதன் பிறகு இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: முகப்பருவுக்கு மேல ஒரு சொட்டு இதை மட்டும் தடவுங்க. மூன்றே நாட்களில் முகப்பரு வந்த தடம் தெரியாமல் காணாமல் போகுதா இல்லையான்னு பாருங்க.

இதை தினசரி உபயோகப்படுத்தும் எண்ணையாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது தலையில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்து அதன் பிறகு அரை மணி நேரம் ஊற விட்டு எப்போதும் போல் நீங்கள் தலைக்கு குளித்து விடலாம். இது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் செய்து கொள்ளுங்கள். இந்த எண்ணெய் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி உதிர்வை தடுக்கும். பொடுகு போன்ற தொந்தரவுகள் வராததோடு இளநரை பிரச்சனையும் தீர்க்கும். இத்தனை சிறப்பம்சங்கள் மிகுந்த இந்த எண்ணெயை நீங்களும் தயாரித்து பயன்படுத்தி நல்ல அழகான முடி வளர்ச்சி பெறலாம்.

- Advertisement -