- Advertisement -

31-10-2024 சிவன் வழிபாடு

- Advertisement -

யாராவது ஒருவரை, நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டாலே போதும். அவ்வளவுதான் நூற்றில், 10 பேர் கூட நான் நன்றாக இருக்கின்றேன் என்று சொல்ல மாட்டாங்க. எங்கெங்க ஒரே பிரச்சனை. வீட்டில் நிம்மதியே இல்லை என்று குறை குறையாக கொட்ட துவங்கி விடுவார்கள். வீடு என்றால் அது நிம்மதி நிறைந்த சந்தோஷம் நிறைந்த இடமாக இருக்க வேண்டும்.

எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவும் பிரச்சனையும் சூழ்ந்து இருக்கக்கூடிய வீட்டில், சந்தோஷமும் இருக்காது. இறையருளும் இருக்காது. பணமும் தாங்காது. உங்களுடைய வீடும் இப்படி சண்டை சச்சரவோடு கஷ்டத்தோடு தான் வறுமையில் வாடி தவிக்கிறதா. வீட்டில் வாஸ்துவால் பிரச்சனையா, வீடு ராசி இல்லாமல் இருக்கிறதா, இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, வரக்கூடிய தீபாவளி அன்று சிவபெருமானை இந்த முறையில் வழிபாடு செய்து பாருங்கள். அந்த கஷ்டங்கள் எல்லாம் அன்றோடு உங்களை விட்டு நீங்கிவிடும்.

- Advertisement -

சிவன் வழிபாடு

31-10-2024 வியாழக்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய தினம் சிவன் கோவிலுக்கு சென்று உங்கள் கையால் 20 ரூபாய்க்கு வில்வ இலைகளை வாங்கி உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரைச்சொல்லி ஒரு அர்ச்சனையை செய்து கொள்ளுங்கள். குடும்பத்தோடு சிவன் கோவிலுக்கு தீபாவளி அன்று சென்று வருவது மிக மிக சிறப்பான பலனை கொடுக்கும். அந்த ஈசனின் அருளால் உங்கள் குடும்பம் சுபிட்சம் பெறும்.

கையோடு அப்படியே கடைக்கு சென்று தீபாவளி அன்றே சின்னதாக ஒரு ‘மணி’ வாங்கிக் கொள்ளுங்கள். பித்தளையில் சாமி கும்பிடுவதற்கு ஒரு மணி உங்கள் வசதிக்கு ஏற்ப பணம் கொடுத்து அதை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து தீபாவளிக்கு சாமி கும்பிடும் போது, தீபாவளிக்கு, அடுத்த நாள் கௌரி விரதம் இருப்பவர்கள் சாமி கும்பிடும்போது, அந்த மணியை நன்றாக அடித்து, அந்த மணியில் இருந்து வரும் சத்தத்தை எழுப்பி சாமி கும்பிட வேண்டும்.

- Advertisement -

இது நீங்கள் சிவபெருமானுக்காக உங்கள் வீட்டிற்குள் வாங்கி வந்த மணி. அந்த மணியின் சத்தத்தை வீட்டில் ஒலிக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் தரித்திரம் எல்லாம் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும், தீபாவளி சாமி கும்பிட்டாச்சு, கேதார கௌரி விரதம் சாமியும் கும்பிட்டு முடித்து விட்டது. பிறகு உங்களுடைய வீட்டில் லட்சுமி பூஜை குபேர பூஜை எது செய்தாலும், இந்த மணியை ஒலிக்க விட்டு சாமி கும்பிடுங்க. ஒரு வாரம் போகட்டும்.

இதையும் படிக்கலாமே: தட்சிணாமூர்த்தி வழிபாடு பலன்கள்

அதன் பிறகு உங்களுக்கு சௌகரியமான நேரத்தில், சௌகரியமான நாளில் இந்த மணியை கொண்டு போய் சிவன் கோவிலில் தானம் செய்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை துன்பங்களும் உங்களை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த மணியின் சத்தம் வீட்டில் ஒலிக்கும் போதே, உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் வெளியே விரட்டி அடிக்கப்பட்டு இருக்கும். இந்த மணியை சிவன் கோவிலுக்கு தானமாக கொடுத்த நாளில் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகி விடும். நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்