நாளை 4-10-2025 சனிக்கிழமை யோடு சேர்ந்து பிரதோஷமும் வரவிருக்கிறது. மற்ற பிரதோஷ நாட்களில் சிவபெருமானை வழிபாடு செய்தால், அந்த நாளில் சிவனை வழிபாடு செய்த பலனை மட்டும்தான் பெற முடியும். அதுவே சனி மகா பிரதோஷத்தன்று ஈசனை வழிபாடு செய்தால், ஒரு வருடம் முழுவதும் ஈசனை வழிபட்ட பலனை பெற முடியும்.
அதிசக்தி வாய்ந்த இந்த சனி மகா பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய சில சூட்சமமான வழிபாட்டு முறைகளை தான் இன்றைய ஆள்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பொன் பொருள் பெருக செய்ய வேண்டிய தானம்
உங்கள் வாழ்வில் பொன் பொருள் அபரிவிதமாகப் பெருக வேண்டும். வீட்டில் தனம் தானியத்திற்கு ஒருபோதும் பஞ்சம் வராமல் இருக்க வேண்டும் என்றால், நாளைய தினம் உங்கள் கையால் நெல்லிக்காய் சாதம் தானம் கொடுக்க வேண்டும். வெறும் முழு நெல்லிக்காய், பெரிய நெல்லிக்காய் தானம் கொடுத்தாலும் சிறப்பு.
நெல்லிக்காயை துருவி சாதம் செய்து அதை நான்கு ஏழை மக்களுக்கு உங்கள் கையால் தானமாக நாளைய தினம் கொடுத்துப் பாருங்கள். உங்கள் பண கஷ்டம் அதிவிரைவாக தீரும். கடன் சுமை குறைந்துவிடும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும்.
சிவபெருமான் நாம் என்ன கேட்டாலும் அதை இல்லை என்று சொல்லாமல் கொடுக்கக்கூடிய வல்லமை பொருந்தியவர். அவருக்கு பிடித்த மந்திரங்களை, பாடல்களைப் படித்தாலே போதும். ஆனந்தத்தில் மயங்கி சிவபெருமான் நீங்கள் கேட்ட வரங்களை வாரி கொடுத்து விடுவார், அந்த வகையில் சிவபெருமானுக்கு உரிய ஒரு சிவ ஸ்லோகத்தை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
சிவன் ஸ்லோகம்
விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
மௌலீஸ்வராய யோகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
நடேஸ்வராய நாகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா
நாளை சனி மகா பிரதோஷத்தன்று இந்த மந்திர வரிகளை உங்களது வாயால் உச்சரிக்க வேண்டும். நாளை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரம். வீட்டின் அருகில் இருக்கும் சிவன் ஆலயங்களில் அமர்ந்தும், இந்த பாடலை படிக்கலாம். வீட்டிலேயே பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, சிவபெருமானை மனதார நினைத்தும் இந்த மந்திரத்தை படிக்கலாம்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை நீக்கும் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை
இந்த மந்திரத்தை படிக்க படிக்க சிவனை நீங்கள் உணர்வீர்கள். சிவபெருமானின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கும். சிவனின் அருளை பெறுவதற்கு இந்த மந்திரம் ஒரு தூண்டுகோலாக அமையும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் விஷயங்களை பின்பற்றி பலன் பெறவும்.