ரதசப்தமி அன்று சூரிய பகவானை வழிபாடு செய்தால் சகல விதமான பாவங்களும் ஒன்றுமே இல்லாமல் சுக்கு நூறாக பொடி பொடியாக உடைந்து கண்ணுக்கே தெரியாமல் காணாமல் போகும் என்பது தான் முன்னோர்களுடைய நம்பிக்கை. சூரிய பகவானை வழிபாடு செய்ய இந்த நாள் ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்த நாளாக சொல்லப்படுகிறது. இந்த ரதசப்தமி அன்று நாமும் சூரிய பகவானை மனதார வழிபாடு செய்வோம். சூரியனுக்கு உகந்த இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லுவோம்.
வேலையில் இருக்கும் பிரச்சனைகள் தீர, வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர, செய்த பாவங்களில் இருந்து விமோசனம் பெற, இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்வோம். வாழ்வில் இன்னல்கள் இருந்து விலகி நிற்போம். சந்தோஷமாக வாழ இறைவன் நமக்கான ஒரு வழியை இந்தப் பதிவின் மூலம் காட்டியிருக்கிறான் என்று பதிவுக்குள் பயணிப்போம்.
ரதசப்தமி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
ரதசப்தமி அன்று கட்டாயமாக சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். பின் சொல்லக் கூடிய வழிபாட்டு முறைகள், பரிகாரங்கள் எதுவுமே எங்களால் செய்ய முடியாது என்றாலும் பரவாயில்லை. பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சூரியன் உதிக்கும் அல்லவா, சூரிய உதயத்தின் போது, காலை 6:00 மணிக்கு சூரிய பகவானுக்கு செம்பு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி, சூரிய வணக்கம் செய்ய வேண்டும்.
சூரிய பகவானை வணங்கி விட்டு “ஓம் ஸ்ரீ சிவ சூர்ய நாராயண சுவாமினே நமஹ!” என்ற இந்த மந்திரத்தை 27 சொல்லுங்கள். செய்த பாவங்கள் எல்லாம் தீரும். ரதசப்தமி அன்று மறக்காம இந்த மந்திரத்தை மட்டும் சொல்லிடுங்க வாழ்வில் நிச்சயம் நல்லது நடக்கும்.
ரதசப்தமி பரிகாரம்
எனக்கு வியாபாரத்தில் பிரச்சனை. செய்யும் வியாபாரம் நஷ்டத்தில் ஓடுகிறது. இந்த ஊரைவிட்டே ஓடிவிடலாம் என்ற அளவுக்கு கடன் தொல்லை இருக்கிறது. என்னால் இதற்கு மேல் வாழ்க்கையில் வாழ்வதற்கு தெம்பு இல்லை. கட்டின மனைவி பெற்றுக் கொண்ட பிள்ளைகள் எல்லாம் நடுத்தெருவில் நிற்கும் போல என்ற துன்பம் உங்களுக்கு இருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்தால் அந்த துன்பம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.
செய்யும் வேலையில் எப்போதுமே பிரச்சனை தான். கை நிறைய ஒரு நாளும் சம்பளம் வந்தது கிடையாது. ஆனால் உழைப்பது மட்டும் பத்து மணி நேரத்திற்கு மேல் இருக்கும். மேலதிகாரிகளோடு தொல்லை, தேவையற்ற பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. செய்யும் வேலையில் ஒரு மன நிம்மதி இல்லை என்பவர்களும், இந்த பரிகாரத்தை செய்யலாம்.
நீண்ட நாட்களாக அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன். எத்தனையோ தேர்வு எழுதி விட்டேன். தேர்வில் தேர்ச்சியும் பெறுவேன். ஆனால் அந்த அரசு வேலை மட்டும் எனக்கு கிடைக்காது. இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அடுத்த நாற்பத்தி எட்டு நாளில் உங்களுக்கான நல்லது உங்கள் வீடு தேடி வரும்.
ஒரு கண்ணாடி பாட்டிலில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது பிளாஸ்டிக் பாட்டில் கூட பயன்படுத்தலாம். எவர்சில்வர் மட்டும் பயன்படுத்தக் கூடாது. அந்த பாட்டிலில் இருக்கும் தண்ணீரில் 1 ஸ்பூன் பால், 2 சிட்டிகை மஞ்சள்தூள், சேர்த்து கலந்து இந்த தண்ணீரை கொண்டு போய் வெள்ளெருக்கு செடியில் ஊற்றுங்கள். சூரியபகவானை வணங்கி நான் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்துவிடு சூரிய பகவானே என்று சொல்லி மேலே சொல்லப்பட்டிருக்கும் அந்த ஒரு வரி மந்திரத்தை 27 முறை சொல்லி அந்த வெள்ளருக்கு செடியை நமஸ்காரம் செய்து கொண்டு வந்தால் நீங்கள் செய்த மொத்த பாவங்களுக்கும் விமர்சனம் கிடைக்கும்
எங்கள் வீட்டு பக்கத்தில் வெள்ளெருக்கன் செடி கிடையவே கிடையாது. எங்கும் தேடியும் கிடைக்கவில்லை நான் வெளிநாட்டில் வசிக்கிறேன் என்றால் மட்டும், இந்த பரிகாரத்திற்கு மாற்றாக இன்னொரு பரிகாரம். ஆனால் வெள்ளெருக்கு செடிக்கு இந்த தண்ணீரை ஊற்றுவதால் மட்டும்தான் முழு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு வழியே இல்லாதவர்கள் கொஞ்சமாக பச்சரிசியில் வெல்லம் கலந்து அந்த பொடியை செடி கொடிகளுக்கு கீழே தூவி விட்டு வரவும்.
இதையும் படிக்கலாமே: தானம் பெரிதா? தர்மம் பெரிதா?
எறும்புகள் இந்த வெல்லத்தை அரிசி மாவை சாப்பிட்டுவிட்டு உங்களை வாழ்த்தும்போது உங்களுக்கான பாவங்கள் தீரும் என்பதும் நம்பிக்கை. இந்த பரிகாரங்கள் எல்லாம் பொதுப்படையான பரிகாரங்களாக இருந்தாலும் இதை ரதசப்தமி அன்று செய்யும்போது விரைவாக பலனை பெறலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.