இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பொய்யே சொல்ல மாட்டார்களாம்! பொய் சொல்லாமல் அப்படி என்னப்பா ராசி அது? ஆச்சரியமா இருக்கே!

lie-astro

எந்த ஒரு மனிதனும் பொய் சொல்லாமல் வாழ்க்கையில் இருக்கவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஏதாவது ஒரு சூழ்நிலையில் கண்டிப்பாக ஏதாவது ஒரு பொய்யை சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். இதனை தவிர்க்கவும் கட்டாயம் முடியாது. ஆனால் இந்த 4 ராசிக்காரர்கள் கூடுமானவரை தங்களுடைய வாழ்க்கையில் பொய் சொல்வதை தவிர்த்து விடுவார்களாம். ஒரு சிலர் எல்லாம் தொட்டதுக்கெல்லாம் வாயில் சரளமாக பொய் சொல்லி விடுவார்கள். எவரையும் துன்பப்படுத்தாத பொய் பொய்யே அல்ல. எல்லா சமயங்களிலும் உண்மையை சொல்ல முடியாது என்பது உண்மை தான். இருப்பினும் இந்த 4 ராசிக்காரர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் அல்லவா? அப்படின்னா வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

thulam-rasi

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பொய் சொல்வதை விரும்ப மாட்டார்கள். வேறு வழியே இல்லை இந்த பொய் சொல்வதைத் தவிர மாற்று வழி இல்லை என்கிற சூழ்நிலையில் மட்டுமே இவர்கள் பொய்யை சொல்வார்களாம். சிறு சிறு காரணங்களுக்காக பொய் சொல்லி மாட்டிக் கொள்பவர்கள் கட்டாயம் துலாம் ராசிக்காரர்கள் ஆக இருக்க மாட்டார்களாம். பொய் சொல்வதை விட இருக்கும் உண்மையை மறைப்பது இவர்களின் வழக்கமாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் சரளமாக பொய்யை சொன்னாலும் இவர்களிடம் மிகுந்த நேர்மை காணப்படுமாம். பெரிய விஷயங்களுக்கு பொய் சொல்லிவிட்டு பிறகு ஆபத்தில் மாட்டிக் கொள்பவர்கள் சிம்ம ராசிக்காரர்களாக இருக்க மாட்டார்களாம். ஆபத்து வரும் காலகட்டங்களில் கூட தங்களின் சுயமரியாதையை மனதில் கொண்டு பொய் கூறாமல் நேர்மையாக நடந்து கொள்வார்கள்.

mithunam-rasi

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சாதுர்யமாகப் பேசும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு பேச கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. வாயை திறந்தாலே லொட லொட என்று பேசிக் கொண்டே இருப்பார்கள். அதிக நண்பர்களை கொண்ட மிதுன ராசிக்காரர்கள் அனாவசியமாக பொய் சொல்வதை விரும்ப மாட்டார்கள். தான் பொய் சொல்லி விட்டு அதை மற்றவர்கள் கண்டுபிடிக்கும் முன் ஒப்புக் கொள்பவர்களாக இவர்கள் இருப்பார்களாம்.

- Advertisement -

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தொழில் ரீதியான விஷயங்களில் எக்கச்சக்கமான பொய்களைச் சொல்லி இருப்பார்கள். பொய் சொல்வதே இவர்களுடைய பிழப்பாக கூட இருக்கும். அதாவது வாடிக்கையாளர்களை கவர்வதற்கு செய்யப்படும் உத்திகளில் உண்மை கலந்த பொய்யும் நியாயம் தானே! அந்த வகையில் இவர்கள் வாழ்க்கையில் ஏகப்பட்ட பொய்களைச் சொல்லி இருக்கலாம். ஆனால் குடும்பம் என்று வரும் பொழுது அதில் மற்றவர்களை ஏமாற்றுவதற்கு இவர்களுக்கு மனம் வருவதில்லை. எந்த சூழ்நிலையிலும் தன்னை நம்பியவர்களுக்கு உண்மையாக இருப்பார்கள். பொய் சொல்லி அது பின்னாளில் தெரியும் பொழுது வரும் பிரச்சனைகளை சமாளிக்கக் கூடிய தைரியம் இவர்களிடம் இருப்பதில்லை. எனவே மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளானாலும் உண்மையை கூறி விடுவார்களாம். இதனால் இவர்கள் பலருக்கும் பிடிக்காத வர்களாக கூட மாறி இருப்பார்கள்.

வாழ்க்கையில் உண்மையை சொல்லுவது நன்மையாக இருந்தாலும் எல்லா சமயங்களிலும் உண்மையைக் கூறி விட முடியாது. அப்படி கூறினால் நம்மை சுற்றி இருக்கும் நிறைய மனிதர்கள் நம்மை விட்டு சென்று விடுவார்கள். அழகான, எவருக்கும் தீங்கு இழைக்காத, குட்டி குட்டி பொய்களை சொல்லி நியாயத்தின் பக்கம் நின்று போராடினால் அனைவருக்கும் வெற்றி தான்.

இதையும் படிக்கலாமே
உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, உங்களை முன்னேற விடாமல் தடுக்கிறதா? உங்களுடைய மனது தெளிவுபெற 1 டம்ளர் இந்த தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.