உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, உங்களை முன்னேற விடாமல் தடுக்கிறதா? உங்களுடைய மனது தெளிவுபெற 1 டம்ளர் இந்த தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள்!

chandra bagavaan

பொதுவாகவே ஒருவருக்கு இருக்கக்கூடாத குணங்களில் இந்த தாழ்வு மனப்பான்மையும் ஒன்று. ஒரு மனிதனுக்குள் இருக்கும் திறமையையும், அறிவாற்றலையும் வெளிக்காட்ட விடாமல் தாழ்வு மனப்பான்மையானது, அவர்களை தடுத்து விடும். சில பேருக்கு இது இயல்பாகவே இருக்கும். என்ன தான் படித்து, என்னதான் வேலை செய்து, எவ்வளவு தான் சம்பாதித்தாலும் சில விஷயங்களில் ‘இது நம்மால் முடியாது. இதற்கெல்லாம் நாம் தகுதியற்றவர்களே அல்ல.’ என்று இவர்களாகவே கற்பனையாக நினைத்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை தாங்களாகவே தடை படுத்திக் கொள்வார்கள்.

man

இப்படி இருப்பவர்கள் வெளியிடங்களுக்கு வந்து நாலு பேரை பார்த்து, சிரித்து பேசி பழக கூட மாட்டார்கள். பெரிய வியாதி இருந்தால் கூட, குணப்படுத்தி விடலாம். இந்த Inferiority Complex என்று சொல்லப்படும் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம். சரி, இதற்கு ஆன்மீக ரீதியாக ஏதேனும் பரிகாரம் உண்டா? நிச்சயம் உண்டு. அதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால், அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இதோடு அவர்களால் சகஜமாக சக மனிதர்களுடன், பழக முடியாது. உங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சனை இருந்தால், மாதம்தோறும் வரக்கூடிய பிறை தரிசனத்தை நீங்கள் காணவேண்டும். அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மூன்றாம் நாள் தரிசனத்தை பார்த்து, சந்திர பகவானை வேண்டி வழிபாடு செய்தால் நிச்சயமாக உங்களுக்குள் இருக்கும் இந்த மனப்பான்மை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

Moondram pirai

இதோடு ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை நிரப்பி, ஒரு வெள்ளை துணியை போட்டு மூடி, மொட்டை மாடியிலோ அல்லது சந்திரனின் வெளிச்சம் படும் இடத்திலோ வைத்து விடுங்கள். இரண்டு மூன்று மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை எடுத்து பருகினாலும், நிச்சயமாக உங்களுக்கு இருக்கக்கூடிய தாழ்வு மனப்பான்மையானது, கொஞ்சம் கொஞ்சமாக மாறி மனம் தெளிவு பெறும்.

- Advertisement -

சில பேருக்கு இந்த தாழ்வு மனப்பான்மையினால் இரவு படுத்தாலும் தூங்க முடியாது. தூங்கினாலும் கெட்ட கனவுகள் வந்து அச்சுறுத்தும். யாரோ, யாரிடமோ, எதையோ சொல்லி இருப்பார்கள். ஆனால், தன்னைத்தான் சொல்லி விட்டார்களோ என்று, இவர்களாகவே ஏதாவது ஒன்றை யோசித்துக்கொண்டு, கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள்.

மேல் சொன்ன எந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தாலும் சரி, இரண்டாவதாக சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தையும் முயற்சி செய்து பார்க்கலாம். சந்திர பகவானுக்கு உரியதாக சொல்லப்படும், சுத்தமான இரண்டு வெண்மை நிற முத்துக்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

moon

வெள்ளி டம்ளர் உங்களுடைய வீட்டில் இருந்தால், அதில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, இந்த முத்துக்களை போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் பருகலாம். வெள்ளி டம்ளர் இல்லாதவர்கள், இதை கண்ணாடி டம்ளரில் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

tumbler

முத்தை எடுத்துவிட்டு தண்ணீரை மட்டும் பருகுங்கள். இப்படி செய்து வந்தாலும் நிச்சயமாக உங்களுடைய தாழ்வுமனப்பான்மை குறைவதை உங்களால் உணரமுடியும். இதை எத்தனை நாட்கள் வரை செய்வது? தொடர்ந்து 48 நாட்கள் செய்து பாருங்கள். நிச்சயமாக முன்னேற்றம் தெரியும். வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபட, தாழ்வு மனப்பான்மை தான் காரணம் என்றால் அதை இனி அடியோடு நீக்க, இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.