உங்கள் வீட்டை சுபிக்ஷ்மாக்கும் யாகம். சித்தர்கள் கூறிய இந்த 4 பொருள் மட்டும் போதும்.

போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில், நம் வாழ்க்கையை வாழ்வது என்பதே கடினமாகி விட்டது. இன்றைய சூழ்நிலையில் பரம்பரை பரம்பரையாக கோடீஸ்வரராக இருப்பவர்களும், குறுக்குப் பாதையில் செல்பவர்களும் தான் வசதி படைத்தவர்களாக வாழ முடிகிறது. சாதாரண சூழ்நிலையில் இருக்கும் ஒருவர் நியாயமான முறையில் பணம் சம்பாதித்து முன்னேற வேண்டும் என்றால், அது நடக்காத காரியம் என்று தான் கூற முடியும். காலத்தின் சூழ்நிலை அப்படி இருக்க, சாதாரண மனிதர்கள் என்னதான் செய்வது? அப்படியே நடுத்தர சூழ்நிலையில் இருக்கும் ஒருவர் விரைவாக முன்னேற்றம் அடைந்தார் என்றால், அடுத்தவர்களின் பொறாமையும், வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் ஒரு பக்கம் இருக்க, இதற்கு ஒருபடி மேல் சிலர், அடுத்தவர்களை முன்னேற விடாமல் தடுக்க கெட்ட வழிமுறைகளை கூட நாடுகின்றனர், என்பதை நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். இல்லை என்று எவராலும் சொல்லிவிட முடியாது. இன்றைய சூழ்நிலையில் சாதாரணமாக நடப்பது தான் இது. யார் முதலில் முன்னேற வேண்டும்? என்ற போட்டி, பொறாமை கொண்டவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் செல்வார்கள். இப்படிப்பட்டவர்களிடம் இருந்து நம்மையும், நம் வீட்டையும், நம் வீட்டில் உள்ளவர்களையும்  பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமை நம் கையில்தான் உள்ளது.

white-hibiscus

இப்படிப்பட்ட எல்லாவகையான பிரச்சனைகளையும் கொண்ட இந்த உலகத்தில் பாதுகாப்பாக நாம் வாழ்ந்து கொள்ள வேண்டுமென்றால் சில பரிகாரங்களை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தான் நாம் இருக்கின்றோம். ஒருவருக்கு தொடர் தோல்வி இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் கெட்ட சக்தி தானா! என்பதை அறிந்து கொள்ள நம் முன்னோர்கள் கூறிய ஒரு வழிதான் வெள்ளை செம்பருத்தி செடி. வெள்ளை செம்பருத்தி செடியை எடுத்து வந்து நம் வீட்டு வாசலில் வைக்க வேண்டும். அது செழிப்பாக வளர்ந்தால், உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது தான் அர்த்தம். அதுவே இரண்டு மூன்று நாட்களில் பட்டு போய்விட்டால், உங்களுக்கு, கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் மூலம் நிச்சயமாக ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்பதை குறிக்கும். நன்றாக தண்ணீர் ஊற்றி, நன்றாக பராமரித்து வந்தாலும் நிச்சயமாக கெட்ட சக்தி நிறைந்த, காற்றினால் இந்தச்செடி நிச்சயமாக உயிர் வாழாது.

நீங்கள் இந்த செடியை வாங்கி வைத்து உங்களது வீட்டில் கெட்ட சக்தி உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால், அதன் பின்பு என்ன செய்யவேண்டும் என்ற பரிகாரத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்கள் வீட்டின் நடுக் கூடத்தில், தரையில் சிறிதளவு மண்ணை கொட்டி, அதன் மேல் மண் சட்டியை வைத்து, அதனுள் கற்பூரம், நவக்கிரக குச்சி, நாயுருவி, இவைகளை போட்டு எரித்து விடவேண்டும். எரிகின்ற யாகத்தில் குன்றின் மணியை(சிகப்பு) போட்டு விட வேண்டும். இவ்வளவுதான். இந்த புகையானது உங்கள் வீடு முழுவதும் பரவி உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை நிச்சயமாக வெளியேற்றிவிடும். சித்தர்களால் அரசர்களுக்கு கூறப்பட்ட ரகசியமான யாகமுறை தான் இது. இதை செய்வதன் மூலம் எந்த ஒரு பிரச்சினையும் நமக்கு இல்லை என்பதை புரிந்து கொண்டால் போதும்.

homam

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் செய்வது மிகச் சிறப்பு. காலை அல்லது மாலை வேளைகளில் செய்யலாம். மதியம் செய்யக்கூடாது. நள்ளிரவு 12 மணி அளவிலும் செய்யக்கூடாது. மாதத்திற்கு ஒரு முறை இந்த யாகத்தை நடத்துவது நல்ல பலனைத் தரும். இந்த யாகத்தை நடத்திய பின்பு, நம்மை விட்டு ஏதோ ஒன்று விலகியது, என்பதை நம்மால் நிச்சயமாக உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
பணத்தை ஈர்க்கும் இந்தச் செடிகளை உங்கள் வீட்டில் இப்படி வைக்கக்கூடாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Theeya sakthiyai viratta. Theeya sakthi neenga Tamil. Theeya sakthi vilaga Tamil. Yagam seivathu eppadi. Veetil ketta sakthi.