வீட்டில் கட்டாயம் இருக்கக் கூடாத 4 பொருட்கள்! இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் நடக்கும் விபரீதத்தை யாரும் தடுக்க முடியாது.

clock-iron-god

மனிதன் தங்குவதற்கு அமைக்கப்பட்ட வீடு சரியாக இருந்தால் தான் அந்த வீட்டில் வசிக்கும் நபர்களுக்கு அது நேர்மறை எண்ணங்களை கொடுக்கும். இதைத் தான் வாஸ்து சாஸ்திரம் பல கோணங்களில் நமக்கு எடுத்துரைக்கிறது. அதே போல தான் வீடு மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் பொருட்களுக்கும் நம் எண்ணங்களை தூண்டி விடக்கூடிய ஆற்றல்கள் உண்டு. நாம் பெரிய பெரிய கட்டிடங்களில் வாசலில் ஒன்றுக்கும் உதவாத அழகிய செடி வகைகளை வைத்து இருப்பதை பார்த்திருப்போம்.

crotans

அந்தச் செடி வகைகள் ஒன்றுக்கும் உதவவில்லை என்றாலும் பார்ப்பதற்கு கண்களை கவரும். அதனுடைய பசுமை தன்மையும், அழகியலும் நம் மனதில் ஒருவிதமான அதிர்வலைகளை உண்டு பண்ணும். இது உங்களுக்கும் நடந்திருக்கும் அல்லவா? அதே வகையில் தான் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களுக்கும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கக்கூடிய மற்றும் எதிர்மறை ஆற்றல்களை தூண்டி விடக்கூடிய தன்மை உண்டு. அவ்வரிசையில் இந்த 4 பொருட்கள் வீட்டில் இருப்பது தேவையில்லாத பிரச்சினைகளை உண்டு பண்ணும். அது என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலாவதாக வீட்டில் ஓடாத கடிகாரம் வைத்திருக்கக் கூடாது. நன்கு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கடிகாரம் திடீரென நின்று விட்டால் அதனை அப்புறப்படுத்திவிட்டு புதிய கடிகாரத்தை வாங்கி மாட்டி வைப்போம். அதோடு விட்டுவிடாமல் பழைய கடிகாரத்தை சரி செய்ய முடிந்தால் சரி செய்து வைத்துக் கொள்ளலாம். அப்படி செய்ய முடியாத பட்சத்தில் அதனை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவது மிகவும் நல்லது. ஓடாத கடிகாரம் வீட்டில் இருந்தால் அது எதிர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும். இதனால் நிறைய கடன் பிரச்சினைகளும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.

wall clock 1-compressed

இரண்டாவதாக நம் வீட்டில் இருக்கக்கூடாத பொருள் கண்ணாடி. கண்ணாடி எந்த வகையில் உடைந்து வீட்டில் இருந்தாலும் அதனை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். அதாவது முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்தால் அது வீட்டிற்கு நல்லதல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதே போல் சமையலுக்கு பயன்படுத்தும் கண்ணாடி பொருட்கள், பூஜை அறையில் இருக்கும் கண்ணாடி பொருத்திய பொருட்கள், மற்றும் வீட்டின் ஜன்னல் கதவுகள் என்று எந்த இடத்தில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இருந்தாலும் அதில் விரிசல் அல்லது உடைந்து போய் இருந்தால் உடனே அதனை அப்புறப்படுத்திவிட வேண்டும்.

- Advertisement -

அதற்கு பதிலாக புதியதாக மாற்றிவிட வேண்டும். அதை அப்படியே வைத்திருந்தால் நிச்சயம் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகும். வருமானத்தில் தடையும், சிக்கல்களும் வந்து கொண்டே இருக்கும். உடைந்த கண்ணாடி வளையல்கள் கூட பெண்கள் கையில் அணிந்து இருக்கக் கூடாது. வளையலில் விரிசல் விழுந்து விட்டால் உடனே அந்த வளையலை குப்பையில் தூக்கி போட்டு விட வேண்டும். அல்லது உடைந்த வளையலை கொண்டு உபயோகப்படும் வகையிலான வேறு ஒரு பொருளாக மாற்றி வைத்துக் கொள்ளலாம். சிலர் உடைந்த வளையல்களை கொண்டு நிறைய வீட்டிற்கு தேவையான அழகிய கைவண்ண பொருட்களை செய்வார்கள். அப்படி செய்து வைத்தால் அதில் தவறில்லை.

broken-glass

மூன்றாவதாக வீட்டில் இருக்கக்கூடாத பொருளாக இருப்பது துருப்பிடித்த இரும்பு பொருட்கள். உங்களிடம் இருக்கும் இரும்பு பொருட்கள் துருப்பிடித்து இருந்தால் அதை உடனடியாக சரி செய்துவிட வேண்டும். இல்லை என்றால் அதை தூக்கியாவது போட்டு விட வேண்டும். இரும்பு பொருட்கள் துருப்பிடிக்காமல் இருக்க அதில் கரித்துண்டு, சாக்பீஸ் போட்டு வைக்கலாம். துரு பிடித்த பொருட்களை எமரி பேப்பர் கொண்டு தேய்த்து எடுத்தால் எளிதாக நீங்கிவிடும். அவற்றை அப்படியே மூலையிலும், பரண் மேலும் போட்டு வைப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கும்.

iron-nail-aani

அது போல் நான்காவதாக வீட்டில் காய்ந்த செடிகள் இருந்தாலும், அது வீட்டை சுற்றிலும் எதிர்மறை வைப்ரேஷன்களை உருவாக்கும். நீங்கள் ஆசையாக வாங்கி வைக்கும் செடி துளிர்விடாமல் காய்ந்து போய் விட்டால் அதனை அப்படியே வைத்திருக்காமல் அப்புறப்படுத்திவிட்டு புதியதாக ஒரு செடியை வாங்கி வைக்கலாம். பட்டுப்போன செடிகளை வீட்டில் வைப்பது வறுமையை உண்டாகும். இந்த 4 பொருட்கள் உங்களிடம் இருந்தால் தூக்கி எரியுங்கள். நல்லதே நடக்கும்.

இதையும் படிக்கலாமே
முன்கோபத்தால் மட்டும் தான் உங்களுடைய முன்னேற்றம் தடைபடுகிறதா? முன் கோபத்தை குறைக்க, நீங்க இத மட்டும் செய்தாலே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.