முன்கோபத்தால் மட்டும் தான் உங்களுடைய முன்னேற்றம் தடைபடுகிறதா? முன் கோபத்தை குறைக்க, நீங்க இத மட்டும் செய்தாலே போதும்.

boomadevi
- Advertisement -

சில பேருக்கு எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், தங்களுடைய வாழ்க்கையில் வாய்ப்புகள் என்பது வரவே வராது. முயற்சி செய்து முயற்சி செய்து, வாழ்க்கையின் முடிவுக்கே சென்றிருப்பார்கள். இதை விதி என்று தான் சொல்ல வேண்டும். சில பேருக்கு முயற்சி செய்யாமலேயே வாய்ப்புகள் வீட்டின் வாசல் கதவை தட்டும். ஆனால், அவர்களுக்கு நிதானம் இருக்காது. பொறுமையாக யோசிக்கும் திறன் இருக்காது. முன் கோபம் இருக்கும். வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தும் அளவிற்கு பொறுமை இருக்காது. உங்களுக்கும் முன்கோபம் அதிகமாக வருமா? வாழ்க்கையில் வரக்கூடிய பெரிய பெரிய வாய்ப்புகளும், உங்களுடைய முன்கோபத்தால், உங்களுடைய தேவையற்ற வார்த்தைகளால் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறதா? முழுமையாக உங்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஆன்மீக ரீதியான ஒரு பரிகாரம் தான் இது.

angry

போன போக்கில் இந்த பரிகாரத்தை செய்து விட்டு, எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை என்று சொல்லக்கூடாது. இதை செய்து விட்டால், முன்கோபம் குறைந்து விடுமா! என்ற விதாண்டாவாத கேள்வியும் எழக்கூடாது. ஆத்மார்த்தமாக பரிகாரத்தை செய்து விட்டோம். இனி நமக்கு முன் கோபம் வராது என்று முதலில் நீங்கள் முழுமனதோடு நம்ப வேண்டும். அதன் பின்பு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பொறுமைக்கு இலக்கணமாக இருப்பது ‘பூமா தேவி’ தாய். பூமா தேவியை விட பொறுமையாக இந்த பூலோகத்தில் வேறு யாராலும் இருக்க முடியாது அல்லவா? இது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்து, அதன் பின்பு பூமாதேவியை வணங்க வேண்டும். பூமாதேவியின் பொறுமையை நம்முடைய மனதில் நினைத்துக் கொண்டு, உங்களுடைய வலது கை மோதிர விரலால் தரையைத் தொட்டு, இரண்டு கண்களிலும், நெற்றியிலும் வைத்துக்கொள்ள வேண்டும்.

boomadevi1

கோவிலில் நமஸ்காரம் செய்வது போல பூமாதேவியை, தினம் தோறும் மூன்று முறை தொட்டு வணங்கினாலும் தவறு கிடையாது. கிழக்கு பார்த்த முகமாக அமர்ந்து கொண்டு, தினந்தோறும் இந்த முறையை நீங்கள் பின்பற்றலாம். அதன் பின்பு பூஜை அறையில் அமர்ந்து மனதார பூமா தேவியை நினைத்து, ‘பூமாதேவி தாயே உனக்கு இருக்கும் பொறுமையில், எனக்கும் சிறிதளவாவது வர வேண்டும். முன் கோபத்தை குறைக்க வேண்டும்.’ என்று வேண்டுதல் வைக்க வேண்டும். 5 நிமிடங்கள் கண்களை மூடி, பொறுமையாக பூமா தேவி தாயை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள்.

- Advertisement -

இந்த வேண்டுதலை தரையில் அமர்ந்துதான் வேண்ட வேண்டும். பூமா தேவியை நினைத்து தினம்தோறும் வழிபாடு செய்து வருபவர்கள், முன் கோபம் வரும்போது பூமா தேவியை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். பின்பு உங்களுக்குள்ளேயே ஒரு சிறிய மாற்றம் கொஞ்ச நாட்களிலேயே தெரிய ஆரம்பிக்கும்.

pray

கோபம் குறைந்து, பொறுமையின் ஸ்வரூபமாக மாறிவிடுவார்கள் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. விடாமல் தினம்தோறும் இந்த பழக்கத்தை கொண்டு வந்து பாருங்கள்! நிச்சயம் உங்களது வாழ்க்கையில் மாற்றம் தெரியும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, குழந்தைகளாக இருந்தாலும் சரி இந்த பழக்கத்தை கொண்டு வருபவர்கள் வாழ்க்கையில் பொறுமை இழந்து, எந்த ஒரு முடிவையும் அவ்வளவு சுலபமாக, தவறான முறையில் எடுக்கவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இதை கோவிலில் நீங்கள் பெற்றால் உங்கள் எப்பேர்ப்பட்ட தலையெழுத்தும் தழைகீழாக மாறிவிடும் தெரியுமா? பீடை நீங்கி ராசியாக மாற அடிக்கடி இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -