- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval48 நாளில் கடன் அடைய பரிகாரம்

48 நாளில் கடன் அடைய பரிகாரம்

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை பண பிரச்சனை. தேவைக்கு அதிகமாக செலவு செய்து விட்டு, வருமானத்திற்கு மீறிய செலவை செய்துவிட்டு, கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றோம். தேவையற்ற பொருட்களை, அதிக பணம் செலவு செய்து வாங்கும்போது, அடுத்தடுத்து வரும் நாட்களில் அத்தியாவசிய தேவைக்கு பணத்தை கடனாக வாங்க வேண்டிய சூழ்நிலை.

தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வரக்கூடிய வருமானத்திற்கு ஏற்ப குடும்பத்தை நடத்துங்கள். கடன் உங்களை விட்டு சீக்கிரம் விலகிவிடும். இது ஒரு பக்கம் இருக்க, கடனை வாங்கிவிட்டு திரும்பவும் அடைக்க முடியாமல் தவித்து வருபவர்களுக்கு, இன்று ஒரு எளிமையான பரிகாரம். இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் உங்களுக்காக.

- Advertisement -

கடன் தீர்க்கும் சிவன் கோவில் பரிகாரம்

வாரத்தில் ஒரு நாள், எந்தக் கிழமையாக இருந்தாலும் சரி அது உங்கள் சௌகரியம். கல் உப்பு 1/2 கிலோ பாக்கெட் வாங்கிக்கொண்டு போய் அந்த கல்லுப்பை சிவன் கோவிலில் இருக்கும் மடப்பள்ளிக்கு தானமாக கொடுத்து வர, உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறையும்.

வாரத்திற்கு ஒரு நாள் கணக்கு வைக்காதீங்க, எத்தனை வாரங்கள் உங்களால் வாங்கித் தர முடியுமோ, அத்தனை வாரங்கள் கல்லுப்பு தானத்தை சிவன் கோவிலுக்கு விடாமல் செய்து வர கடன் சுமை படிப்படியாக குறையும். மேலும் மேலும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையை உங்களுக்கு இந்த பிரபஞ்சம் ஏற்படுத்தித் தராது. வருமானமும் பெருகும். இது முதல் பரிகாரம்.

- Advertisement -

இது தவிர பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு விளக்கு பரிகாரமும் இருக்கிறது. தொடர்ந்து 48 நாள் இந்த வழிபாட்டை நீங்கள் செய்தீர்கள் என்றால், உங்கள் கடன் சுமை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். படிப்படியாக, படிப்படியாக வாங்கிய ஒவ்வொரு கடனையும் அடைக்கத் துவங்கி விடுவீர்கள். பிரம்ம முகூர்த்தம் என்றால் அதிகாலை 3:00-5:00 மணி வரை இருக்கிறது. அதிகாலை 3:30 இந்த விளக்கை ஏற்றினால் ரொம்ப நல்லது.

முடியாதவர்கள் வேலைக்கு செல்பவர்கள், கண் விழிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள், குறைந்தபட்சம் 4:30-5:00 மணிக்கு உள்ளாவது இந்த விளக்கை பூஜை அறையில் ஏற்று விட வேண்டும். பூஜை அறையில் ஏற்ற முடியாது என்பவர்கள் முகம் கை கால்களை கழுவி விட்டு, வரவேற்பறையில் ஒரு மண் அகல் விளக்க ஏற்றி வைத்துவிட்டு, கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, அபிராமி அந்தாதியின் இந்த பாடலை 3 முறை படியுங்கள். 15 லிருந்து 20 நிமிடம் தியான நிலையில், கண்களை மூடி அமர்ந்து கடன் சுமை குறைய பிரம்ம முகூர்த்த வேலையில் பிரார்த்தனை வைக்க வேண்டும்.

- Advertisement -

அபிராமி அந்தாதியின் 54 ஆவது பாடல்

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

இதையும் படிக்கலாமே: வீட்டில் கெட்ட சக்திகள் விலக முருகர் பரிகாரம்

அபிராமி அந்தாதியின் 54ஆவது பாடல் இது. பெரும்பாலானவர்களுக்கு இந்த பாடல் தெரிந்திருக்கும். இருந்தாலும் தெரியாதவர்களுக்காக இந்த பதிவு. இப்போது கடன் சமையல் கஷ்டப்படுபவர்கள், இந்த ஒரு எளிமையான வழிபாட்டை நம்பிக்கையோடு 48 நாட்கள் செய்து பாருங்கள். தொடர்ந்து சிவன் கோவிலுக்கு சென்று கல்லுப்பு தானம் செய்து, சிவபெருமானை வலம் வந்து வேண்டுதல் வையுங்கள். நிச்சயம் கடன் சுமை உங்களை விட்டு காணாமல் போய்விடும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்