ஐந்து முக ருத்ராட்சம் பலன்கள்

5-faced-rutratcham

ஞானம் எனும் உயரிய அனுபவத்தை பெற கடுந்தவம் புரிபவர்கள் யோகிகள், துறவிகள் ஆவர். இவர்கள் அனைவரும் வழிபடும் இறைவனாக சிவபெருமான் இருக்கிறார். அந்த சிவபெருமானின் கடாட்சம் நிறைந்ததாக கருதப்படுவதும், சிவனடியார்களால் அணியப்படும் ஒரு ஆன்மீக அணிகலனாக ருத்ராட்சம் இருக்கிறது. ருத்ராட்சத்தில் பல வகைகள் உள்ளன. இதில் “பஞ்ச முகம்” அல்லது “ஐந்து முக ருத்ராட்சம்” அனைவரும் அணிவதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை காண்போம்.

ஐந்து முக ருத்ராட்சம் பலன்கள்

ரத்த அழுத்தம்
நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் ருத்ராட்சங்களை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இவற்றில் ருத்ராட்சத்தில் இருக்கும் வகைகளுக்கு ஏற்றவாறு பலன்கள் கூறப்பட்டுள்ளன. அதில் மிகுந்த ரத்த அழுத்தம் மற்றும் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் 5 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் ரத்தம் சம்பந்தமான அத்தனை நோய்களும் கட்டுப்படும் என கூறப்பட்டுள்ளது.

மன அமைதி

மனிதனுக்கு உடல் நலம் எந்தளவிற்கு நன்றாக இருக்க வேண்டுமோ, அதே அளவிற்கு மன நலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். 5 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.

rudharaksha maalai

- Advertisement -

அதீத உடல் எடை

ஒரு சிலருக்கு உடலில் வளர்ச்சிதை மாற்ற திறன் அதிகம் இருப்பதால், அவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளும் சீக்கிரத்தில் ஜீரணித்து, பசி அதிகரிக்க தொடர்ந்து சாப்பிட்டு கொண்டே இருக்கின்றனர். இதனால் கூடிய விரைவில் அவர்களின் உடல் எடை கூடி விடுகிறது. 5 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவர்களுக்கு அதீத பசி உணர்வு கட்டுக்குள் வந்து, அளவாக உட்கொள்ளும் உணர்வை உண்டாக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

திடீர் மரணம்

இன்றைய உலகில் எப்போதும் எதிலும் வேகம் மற்றும் அவசரம் நிறைந்திருக்கிறது. நாம் எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலும் எந்த நேரத்தில், எத்தகைய ஆபத்துகள் நமக்கு ஏற்படும் என்று தெரியாது. சிவனின் சக்தி நிறைந்த 5 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் விபத்து, அகால மரணம் போன்றவைகள் ஏற்படாமல் நம்மை காக்கும் ஒரு சிறந்த தெய்வீக காப்பாக இருக்கிறது.

குரு பகவான்

நவ கிரகங்களில் குரு பகவான் மட்டுமே முழு சுப கிரகமாக இருக்கிறார். சுப கிரகமாக இருந்தாலும் ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் ஒரு சில பாதகமான கட்டங்களில் இருந்தால், அந்த ஜாதகர்களுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. குரு பகவானின் நல்லருளை பெறவும், அவரின் கிரகாச்சார காலத்தில் கெடுதலான பலன்கள் ஏற்படாமல் இருக்கவும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது நல்லது.

ஆன்மீக பலன்கள்

ஆன்மீகத்தில் உயர்வு பெறுவதற்கு உதவும் கலைகள் தான் யோகம், பிராணாயாமம் மற்றும் தியானம். சிவனை தங்களின் முழு நாயகனாக ஏற்றுக்கொண்டு இக்கலைகளை பயின்று ஆன்மீகத்தில் இறையனுபவம் பெற முயற்சிப்பவர்களுக்கு 5 முக ருத்ராட்சம் பல வகைகளில் உதவுகிறது. ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களும், துறவறம் மேற்கொள்ள விரும்புபவர்களும் 5 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது நல்லது. உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் இறைவன் பால் திருப்பும் சக்தி கொண்டது ஐந்து அல்லது பஞ்ச முக ருத்ராட்சம்.

இதய நோய்கள்

சிலருக்கு பதட்டம் ஏற்படும் போது இதயத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது இயல்பானது. ஆனால் இதயம் சம்பந்தமான நோய்கள் கொண்டவர்கள், பிறவியிலேயே பலவீனமான இதயம் கொண்டவர்கள் எதற்கு பதட்டப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். இத்தகையவர்கள் ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் இதய படபடப்பு ஏற்படுவது குறைந்து இதயம் நலம் காக்கப்படுகிறது.

கல்லீரல்

உணவுகளை நன்கு செரிமானம் செய்ய உதவும் கல்லீரல் அனைவருக்கும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு இந்த கல்லீரலில் அழற்சி ஏற்பட்டு அதன் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவர்கள் நான்கு முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் கல்லீரல் உறுப்புகளில் இருக்கும் நச்சுகள் நீங்கி அதன் செயல்பாடுகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
நான்கு முக ருத்ராட்சம் நன்மைகள்

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 5 faced rudraksha benefits in Tamil. it is also called Ruthratcham 5 face benefits in Tamil or Panchmukhi rudraksha in Tamil or 5 muga ruthratcham in Tamil or Aindhu muga ruthratcham in Tamil.