- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஐந்தே நிமிடத்தில் முகப்பொலிவு பெற

ஐந்தே நிமிடத்தில் முகப்பொலிவு பெற

- Advertisement -

அன்றாட வாழ்க்கையில் பலரும் தங்களுடைய அழகை பராமரிக்காமல் விட்டு விடுகிறார்கள். தங்களுடைய அழகில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்ட பிறகு தான் ஐயோ இதை செய்ய தவறிவிட்டோமே இப்படி இருந்து விட்டோமே என்று வருத்தப்படுகிறார்கள். பிறகு மறுபடியும் இழந்த அழகை திரும்ப பெறுவதற்காக கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இப்படி செய்வதற்கு பதிலாக இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து நாம் ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் இழந்த அழகை திரும்ப பெற முடியும், கலை இழந்த முகத்தையும் புதுப்பொலிவுடன் மாற்ற முடியும். அதுவும் வெறும் ஐந்தே நிமிடத்தில். அந்த ஃபேஸ் பேக்கை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

ஐந்தே நிமிடத்தில் முகப்பொலிவு பெற

ஆயிரம் பிரச்சினைகளுக்கு நடுவே ஆயிரம் வேலைகளுக்கு நடுவே தங்களுடைய அழகைப்பற்றி சிந்திக்கும் அளவு மனப்பக்குவம் இல்லாத நபர்கள் இருக்கிறது. அதே சமயம் இயற்கையான அழகை பராமரிக்க முடியாமல் செயற்கையான அழகை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பியூட்டி பார்லர் செல்வது, மேக்கப் போடுவது, பவுண்டேஷன் போடுவது என்று பலவிதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி அதற்கு அடிமையாகி இருக்கக்கூடிய நபர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தையும் தவிர்த்து விட்டு தினமும் 5 நிமிடம் மட்டும் செலவு செய்தாலே போதும். நம்முடைய முகப்பொலிவை அதிகரித்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

பொதுவாக இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்கள் பல இருக்கின்றனஇருக்கின்றன. அந்த பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய முக அழகு என்பது நன்றாக இருக்கும். பொலிவாக இருக்கும். எப்பேர்ப்பட்ட கருமையாக இருந்தாலும் கருந்திட்டாக இருந்தாலும் இந்த ஃபேஸ் பேக்கை நாம் பயன்படுத்துவதன் மூலம் அவை உடனடியாக நீக்குவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும். தினமும் செய்யாமல், ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ என்ற வீதம் தொடர்ச்சியாக நாம் செய்து வருவதன் மூலம் நிரந்தரமான முகப்பொலிவை நம்மால் பெற முடியும்.

இதற்கு நமக்கு தேவைப்படக்கூடியது காபித்தூள் தான்தான். இது நம்முடைய சருமத்திற்கு நன்மை பயக்கக் கூடிய ஒன்றாக திகழ்ந்து. தங்களுடைய முகத்திற்கு ஏற்ற அளவு காபித்தூளை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது அரிசி மாவு இவை மூன்றில் ஏதாவது ஒன்றை ஒரு ஸ்பூன் அளவிற்கு கலந்து கொள்ளுங்கள். அடுத்ததாக இதில் கால் ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். இது கஸ்தூரி மஞ்சளாக இருந்தாலும் பயன்படுத்தலாம் அல்லது நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தக்கூடிய விரலி மஞ்சளாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

அடுத்ததாக இதில் எலுமிச்சை பழச் சாறு அல்லது பன்னீரை சேர்த்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பேஸ்ட் தயாராகிவிட்டது. இதை அப்படியே நம்முடைய முகத்தில் தடவி மெதுவாக, மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு நம்முடைய முகத்தை சாதாரண குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். அவ்வளவுதான் ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதற்கு முன்பாக முகத்தில் இருந்த கருமைகள் குறைவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும். இதில் சேர்க்கக்கூடிய பொருட்கள் அனைத்துமே நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பதால் நம்முடைய முகத்தில் நல்ல பொலிவு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:முடி உதிரும் பிரச்சனைக்கு தீர்வு

வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி சிறிது நேரம் மட்டும் நம்முடைய அழகிற்காக நாம் செலவு செய்தோம் என்றால் நிரந்தரமான முகப்பொலிவை நம்மால் பெற முடியும். விருப்பம் இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்