வெறும் 5 நிமிடத்தில் அட்டகாசமான வேர்க்கடலை சட்னி ரெசிபி. தேங்காய் கூட சேர்க்க தேவை இல்லை!

- Advertisement -

இட்லி தோசைக்கு விதவிதமாக எத்தனை வகையான சட்னியை அரைத்து சுவைத்தாலும் நம்முடைய ஆசை தீர்ந்து போகாது. மீண்டும் மீண்டும் புதுவிதமான சட்னிகளை சுவைத்தான் நம் நாக்கும் விரும்பும். சரி ஆரோக்கியமான ஒரு வேர்க்கடலை சட்னி ஒரு தக்காளி சட்னி சுலபமான முறையில் மிக மிக எளிமையாக எப்படி அரைப்பது என்று தான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இட்லி தோசை சப்பாத்தி போண்டா பஜ்ஜி இவைகளுக்கு சூப்பரான சைட் டிஷ் இது.

verkadalai

முதலில் வேர்க்கடலை சட்னி ரெசிபி. ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி காய விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் – 1/2 ஸ்பூன், வறுத்த வேர்க்கடலை – 1/2 கப் அதாவது 150 கிராம், வர மிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், பூண்டு பல் – 5, கருவேப்பிலை – 1 கொத்து, மல்லித்தழை – 1/2 கைப்பிடி அளவு, பொடியாக வெட்டிய வெங்காயம் – 1 டேபிள்ஸ்பூன், சிறிய நெல்லிக்காய் அளவு புளி, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து 2 லிருந்து 3 நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு அதை நன்றாக ஆற வைத்து விட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுது போல் அரைத்து எடுத்து தனியாக ஒரு பௌலில் மாற்றி அப்படியே பரிமாறலாம். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இதில் சிறிய தாளிப்பு சேர்த்துக் கொள்ளலாம். 2 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம், வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொட்டி கலந்து கமகம வாசத்தோடு பரிமாறினாலும் அட்டகாசமாக இருக்கும். தேவைப்பட்டால் இதில் 2 பல் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம் அது உங்களுடைய இஷ்டம்தான்.

verkadalai-chutney

இரண்டாவதாக தக்காளியை வைத்து சுலபமாக ஒரு சட்னியை எப்படி செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்வோமா. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 5 லிருந்து 6 தக்காளி பழங்களை நான்காக வெட்டி போட்டுக்கொள்ள வேண்டும். இந்த தக்காளி பழங்களோடு பூண்டு பல் – 10, கறிவேப்பிலை – 2 கொத்து, வர மிளகாய் – 3 இந்த பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

- Advertisement -

ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு, பெருங்காயம், மட்டும் தாளித்து அரைத்து வைத்திருக்கும் விழுதை இந்த கடாயில் ஊற்றி கொள்ளுங்கள். இந்த தக்காளி சட்னிக்கு தேவையான அளவு உப்பு, வர மல்லி தூள் – 2 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு தண்ணீர் சுண்டும் வரை நன்றாக கொதிக்கவிட வேண்டும். அப்பப்போ இடையிடையே மூடியை திறந்து கரண்டியை வைத்து கலந்து கொள்ளுங்கள். கொதிக்கும்போது மேலே எல்லாம் தெறிக்கும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

road-side-tomato-chutney

கட்டாயம் அடுப்பை சிம்மில் இருக்க வேண்டும். 15 லிருந்து 20 நிமிடங்கள் இந்த தக்காளி தொக்கு கொதித்து தண்ணீர் அனைத்தும் சுண்டி எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். தக்காளி சட்னி தயார். இதை நன்றாக ஆறவைத்து அப்படியே ஒரு பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -