- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 18 ஆகஸ்ட் 2026

இன்றைய ராசிபலன் – 18 ஆகஸ்ட் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது மனிதர்களின் அறிமுகம், புது விஷயங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத வரவு இருக்கும். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். மன நிம்மதி இருக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் அதிகரிக்கும். தேவைக்கு அதிகமாக பணம் கையில் இருக்கும். சேமிப்பை உயர்த்தலாம். எதிர்கால முன்னேற்றத்திற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். புதிய முதலீடுகள் செய்யலாம். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு நல்ல வழி பிறக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். காரியத்தடை விலகும். ஆன்மீக ரீதியான நம்பிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு மனரீதியாக இருந்து வந்த கவலைகள் குறையும். மனது லேசாகும். தேவையில்லாத பிரச்சனைகள் உங்களை விட்டு தானாக விலகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் விரைய செலவுகள் குறையும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் வெற்றிவாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வருமானம் தேவைக்கு ஏற்ப இருக்கும். கடன் சுமை குறையும். தேவையில்லாத சிந்தனையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் இருக்கிறது. கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவான நாளாக இருக்கப் போகிறது. குடும்ப தகராறுகள் ஒரு முடிவுக்கு வரும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் வரும். புது முடிவுகள் எடுக்கும் போது, தடுமாற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நிதானமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான நல்ல பெயர் கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறுவீர்கள். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் நீங்கும். சந்தேகங்கள் விலகும். பிள்ளைகளுடைய எதிர்கால முன்னேற்றத்திற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். வேலையிலும் வியாபாரத்திலும் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். முன்னேற்றம் நிறைந்த இந்த நாளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நல்லதொரு வெற்றியை கொடுக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாமல் வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுக்கலாம். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். சொத்து பிரச்சனைகள் சரியாகும். கட்டுமான தொழில், கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்ற உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய கடமைகளை செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். கடன் பிரச்சனையை தீர்க்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். வங்கி கடன் முயற்சிக்கலாம். அதிக வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடன் இருப்பவர்களாலேயே பிரச்சனைகள் வரலாம். தெரியாத புது முகங்களை பார்க்கும் போது, கவனமாக பேசி பழக வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் இருக்கக் கூடாது.

சற்று முன்