சொடக்கு போடக்கூடிய நேரத்தில் சூப்பரான மினி போண்டா தயார். ஃப்ரிட்ஜில் இட்லி மாவு தோசை மாவு இருக்கா. உடனடியா இன்னைக்கே இதை செஞ்சிடுங்க.

bonda3_tamil
- Advertisement -

குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த பிறகு அவர்களுக்கு பிடித்த மாதிரி ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது மிக மிக கஷ்டம். அதிலும் நாம் வேலையை முடித்து அப்போதுதான் அசந்து போய் இருப்போம். என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்றே தெரியாது. வீட்டில் சில பொருட்களும் இருக்காது. பிரிட்ஜில் இருக்கும் இட்லி தோசை மாவை வைத்து இந்த மினி போண்டாவை செய்துவிடலாம். அதுவும் ஸ்பெஷல்லா. ரொம்பவும் புளித்த இட்லி தோசை மாவு இதற்கு பயன்படுத்த வேண்டாம். போண்டாவில் புளிப்பு சுவை தெரியும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் 1 கப் அளவு மட்டும் இட்லி மாவு அல்லது தோசை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் ரவை, உப்பு இரண்டு சிட்டிகை போட்டு, நன்றாக கலந்து ஐந்து நிமிடங்கள் அதை ஊற வையுங்கள். இதற்குள் மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோலுரித்த பூண்டு பல் – 4, வர மிளகாய் 1 அல்லது 2, உங்கள் காரத்திற்கு ஏற்ப போட்டு இதை அரைத்துக் கொள்ள வேண்டும். இது ஸ்பெஷலான போண்டா வாசத்திற்கு.

- Advertisement -

ஏற்கனவே இட்லி மாவில் ரவையை போட்டு ஊற வைத்திருக்கிறோம் அல்லவா. அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், துருவிய கேரட் – 3 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி தழை – சிறிதளவு, சீரகம் – 1/2 ஸ்பூன், மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பூண்டு வர மிளகாய் விழுதை போட்டு, நன்றாக கலந்தால் ஓரளவுக்கு திக்கான போண்டா மாவு நமக்கு கிடைத்திருக்கும். தேவைப்பட்டால் இதில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்துக் கொள்ளலாம். அது ஆப்ஷனல் தான்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இதை பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, நன்றாக சூடு செய்து, இந்த மாவை குட்டி குட்டி போண்டாக்களாக அதில் விட்டு மிதமான தீவியில் பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான ஸ்பெஷல் போண்டா தயார். (தயார் செய்த போண்டா மாவு ரொம்பவும் தண்ணீராக இருந்தால் கூடுதலாக அரிசி மாவு, ரவை, கோதுமை மாவு, என்று எந்த மாவை வேண்டுமென்றாலும் நீங்கள் சேர்க்கலாம்.) வழக்கத்தைவிட இந்த போண்டா கூடுதல் சுவைகளை கொடுக்கும் காரணம். பூண்டு மிளகாய் அரைத்துப் போட்டு இருக்கின்றோம். கேரட் எல்லாம் சேர்த்திருக்கின்றோம்.

- Advertisement -

சுட சுட இந்த போண்டாவை குழந்தைகளுக்கு கொடுத்தால் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். பெரியவர்களுக்கு சுடச்சுட டீ அல்லது காபி போட்டு, சாயங்காலம் குளிர்கின்ற சமயத்தில் இப்படி பரிமாறினால் யார் தான் உங்களை பாராட்ட மாறிட்டார்கள். பெரியவர்களுக்கு தேவை என்றால் இதற்கு தொட்டுக் கொள்ள ஒரு தேங்காய் சட்னி வைத்துக் கூட பரிமாறலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. புளிக்காத இப்போது அரைத்த இட்லி மாவில் கூட இதை முயற்சி செய்யலாம். நீங்கள் எடுத்திருக்கும் இட்லி மாவின் அளவுக்கு ஏற்ப மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை எல்லாம் கூட குறைய சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -