இன்று மாலை இதை 2 நிமிடம் செய்தால் போதும். உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் மாறுதல் ஏற்படும்.

vinagar
- Advertisement -

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியையே நாம் அனைவரும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். விநாயகர் பிறந்த நாளாக கூறப்படும் இந்த நன்னாள் அன்று நாம் சில மிக எளிய விடையங்களை செய்வதன் மூலம் விநாயகரின் பரிபூரணமான அருளை பெற முடியும். அந்த வகையில் இன்று மாலை நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

Amman Pillayar

பொதுவாக அனைத்து நன்னாட்களிலும் நாம் செய்யக்கூடிய சுத்திகருப்பி வேலைகளான, வீட்டை பெருக்கி துடைத்து சுத்தம் செய்து, வாசலில் சாணம் தெளித்து கோலமிடும் வேலைகளை செய்யவேண்டும். அதன் பிறகு நமது வீட்டில் தெய்வம் குடிகொண்டிருக்கும் பூஜை அறையை நன்றாக துடைத்து சுத்தம் செய்யவேண்டும்.

- Advertisement -

அப்படி சுத்தம் செய்யும்போது நீரில் கல் உப்பு, பச்சை கற்பூரம், மஞ்சள் ஆகியவற்றை கலந்து சுத்தம் செய்வது நல்லது. வீடு முழுக்க இதை கொண்டு சுத்தம் செய்ய முடியாவிட்டாலும், பூஜை அறையை மட்டுமாவது இப்படி சுத்தம் செய்வது நல்லது. மற்ற இடிங்களில் இந்த நீரை தீர்த்தம் போல தெளிக்கலாம்.

pillayar

இந்த மங்களகரமான சுத்திகரிப்பு வேலையே செய்து முடித்த பின்னர், அனைத்து தெய்வங்களையும் அலங்கரிக்க வேண்டும். குறிப்பாக உங்கள் வசதிக்கு ஏற்ப பிள்ளையாரை சற்று விசேஷமாக அலங்கரியுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு மாலை வேலையில் 5 மணிக்கு மேல், ஒரு தட்டில் பச்சரிசி வைத்து அதில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வையுங்கள். மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைக்கும் சமயத்தில், “ஓம் கணபதியே போற்றி” என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே பிடிக்க வேண்டும். மந்திரத்தில் எண்ணிக்கை எல்லாம் அவசியம் இல்லை. பிள்ளையாரை பிடிக்க எவ்வளவு நேரம் ஆகிறது அவ்வளவு நேரமும் சொல்லிக்கொண்டு இருந்தாலே போதும்.

parvathamalai pillayar

அதன் பிறகு நாம் பிடித்துவைத்துள்ள பிள்ளையாருக்கு கார்பூர ஆரத்தி காட்டிவிட்டு நம்மால் முடிந்த அளவு தோப்புக்கரணம் போட்டுவிட்டு, நாம் எது கைகூட வேண்டும் என்று எண்ணிக்கிறோமோ அதை நினைத்து பிள்ளையாரை மனமுருகி வேண்டிக்கொள்ள வேண்டும்.

நாமே மந்திரம் சொல்லி முறையாக பிடித்து வைத்த பிள்ளையிராரிடம் இன்று மனமுருகி வேண்டுவதின் மூலம் சிறப்பான பல பலன்களை பெற முடியும் என்பது சான்றோர் வாக்கு.

- Advertisement -