நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் இந்த 5 தோஷங்கள் இருந்தால் தரித்திரம் உண்டாகும் தெரியுமா? இப்படி மட்டும் சாப்பிடாதீர்கள்!

food-unavu

உணவு என்பது கூட இறைவனுடைய ஒரு ஸ்வரூபம் தான். உணவின்றி எந்த ஒரு உயிரினமும் உயிர் வாழ முடியாது. உயிர் வாழத் தேவையான அடிப்படை விஷயங்களில் உணவும் ஒன்று. எனில் உணவு என்பதற்கு எவ்வளவு மரியாதை செலுத்த வேண்டும்? என்பதை நினைத்துப் பாருங்கள். அன்னபூரணியின் அருள் கிடைக்காவிட்டால் வறுமையிலும், பசி பஞ்சத்தாலும் வாடி மனிதன் இறக்க வேண்டியது தான்.

food

இத்தகைய அன்னத்தில் தோஷங்கள் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அன்னம் யார் சமைக்கிறார்கள்? அதை எப்படி சமைக்கிறார்கள்? எந்த இடத்தில் வைத்து சமைக்கிறார்கள்? சமைக்கும் பொழுது எந்த எண்ணத்தில் சமைக்கிறார்கள்? அதனை பரிமாறுபவர் யார்? இவை ஒவ்வொன்றும் மிகவும் முக்கியம் தான். இதில் ஏற்படும் தோஷங்கள் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை யாவை? அதனால் வரும் தரித்திரங்கள் என்ன? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

உணவில் இருக்கும் தோஷங்கள்:
அர்த்த தோஷம்
நிமித்த தோஷம்
ஸ்தான தோஷம்
ஜாதி தோஷம்
சம்ஸ்கார தோஷம்

hungry-plate-food

அர்த்த தோஷம்:
அர்த்தம் என்பது இதில் ‘பொருள்’ என்பதை குறிக்கிறது. பொருளால் ஏற்படும் தோஷத்தை அர்த்த தோஷம் என்று கூறப்படுகிறது. அதாவது நீங்கள் சாப்பிடும் உணவானது எந்த பணத்தை வைத்து உருவானது என்பது மிகவும் முக்கியம். நீங்கள் உண்ணும் உணவு தீய வழியில் சம்பாதித்த பணத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாக இருந்தால் அந்த உணவு தோஷம் அடைகிறது. இதனால் அதை சாப்பிடும் உங்களுக்கு தரித்திரம் ஏற்படுகிறது.

- Advertisement -

நிமித்த தோஷம்:
சமையல் செய்பவர்களின் மனநிலை மற்றும் எண்ண ஓட்டங்கள் மிகவும் முக்கியம். சண்டை போட்டுக் கொண்டு கெட்ட எண்ணத்தோடு, தீய சொற்களை பேசிக்கொண்டு சமைக்கும் உணவானது நிமித்த தோஷம் பெறுகிறது. பல்லி, எறும்பு, காகம், நாய் போன்ற உயிரினங்கள் தீண்டிய உணவானது இதே தோஷத்தை பெறுகின்றன. சமைக்கும் பொழுது இன்முகத்துடன் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் நலனிலும் அக்கறை கொண்டு சமைக்க வேண்டும். அதற்கு சமைப்பவரின் மனநிலையை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.

crow feeding

ஸ்தான தோஷம்:
ஸ்தான தோஷம் என்பது எந்த இடத்தில் எந்த மாதிரியான சூழ்நிலையில் சமைக்கிறார்கள்? என்பது முக்கியமாகும். சமைக்கின்ற நபர்களின் குணநலன்கள் அதைப் பரிமாறுபவர்களின் குணநலன்கள் நல்லவையாக அமைந்திருப்பது அவசியமாகும். ஒருவர் பசியாற வேண்டும் என்கிற முழுமனதோடு ஒரு சிறு பழம் கொடுத்தால் கூட அது அமிர்தம் போன்றது ஆகும். அறுசுவை உணவு படைத்தாலும் அதில் கெட்ட அதிர்வலைகள் இருக்கும் பொழுது தோஷம் ஏற்படுகிறது. மருத்துவமனை, நீதிமன்றம், போர்க்களம், கழிப்பறை போன்ற இடங்களின் அருகில் சமைப்பதும், சாப்பிடுவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

karugiya-food

ஜாதி தோஷம்:
எந்த பொருட்களை கொண்டு சமைக்கிறோம்? என்பது மிகவும் முக்கியம். அரிசி, பருப்பு, நெய், பால், மாவு போன்ற உணவு பொருட்கள் சாத்வீக குணம் உள்ளவை. இதனை சாப்பிடுபவர்களுக்கு இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். உப்பு, புளிப்பு, காரம் ஆகிய ருசி அதிகமாக இருக்கும் உணவு ஆனது ராஜசீக குணமுள்ளவை ஆகும். இதனை சாப்பிடுபவர்களுக்கு சுயநல உணர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மாமிச உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு பேய் குணம் இருக்குமாம். அதிகமாக தாமசிக உணவான மாமிச உணவை எடுத்துக் கொண்டால் நல்ல புத்தி நீங்கி, கெட்ட புத்தி ஏற்படும். இதனால் தரித்திரம் உண்டாகும். வெங்காயம், பூண்டு கூட இவ்வகையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதால் இதனை குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.

eating-food

சம்ஸ்கார தோஷம்:
உணவானது சரிசமமான அளவில், சரி சமமான பதத்தில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும். உணவு பொருட்கள் அதிகமாக வறுபடுவது, அதிகமாக வெந்து விடுவது, தீய்ந்து போய் விடுவது போன்ற விஷயங்கள் நடைபெறும் பொழுது அங்கு தரித்திரம் உண்டாகிறது. உணவு எப்பொழுதும் புதிதாக இருக்கபட வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடும் பொழுது உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புகள் உண்டாகி தரித்திரம் ஏற்படுகிறது. ஆகவே இந்த ஐந்து தோஷங்கள் ஏற்படாதவாறு உணவை சாப்பிடுபவர்களுக்கு ஆயுள் கெட்டி.