இந்த 5 ராசிகள் எத்தகைய மன அழுத்தம் இருந்தாலும், ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று தட்டி விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்களாம்!

stress-astro

நம் மனம் எப்பொழுதெல்லாம் அழுத்தத்திற்கு ஆளாகிறதோ! அப்பொழுது எல்லாம் நமக்கு புத்தி என்பது சரியாக வேலை செய்யாமல் போய்விடும். மனதிற்கும், புத்திக்கும் சம்பந்தம் உண்டு. ஒன்றோடொன்று தொடர்புடைய காரணத்தினால் மனம் பாதிக்கப்படும் பொழுது புத்தி தடுமாறுகிறது. இதனால் தான் பல இடங்களில் மன அழுத்தம் காரணமாக பல தவறுகளை நம்மை அறியாமல் செய்து விடுகிறோம். ஆனால் இந்த 5 ராசிக்காரர்கள் எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் இதெல்லாம் பிரச்சினையே இல்லை என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவார்களாம்! அந்த 5 ராசிக்காரர்கள் யார்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள மேலும் தொடருங்கள் இப்பதிவை!

sad

ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பொழுது பதற்றம் ஏற்படும். சின்ன விஷயத்தை கூட பெரிதாக நினைப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு என்ன செய்வது? எதை எப்படி கையாள்வது? என்பதை அமைதியாக சிந்திக்க முடியாது. எல்லாமே பெரிதான தோற்றம் போல மிகைப்படுத்தி கொள்வார்கள். மன அழுத்த நேரத்தில் தியானம், யோகா போன்றவற்றை செய்யும் பொழுது நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் இந்த 5 ராசிக்காரர்கள் நிதானமாகவும் எதையும் அமைதியாகவும், தந்திரமாகவும் கையாளுவார்கள். எனவே மன அழுத்தம் என்பது இவர்களுக்கு பெரிய பிரச்சனையாக எப்போதுமே இருப்பது இல்லை.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் அமைதியாக இருக்கக்கூடியவர்கள். எத்தகைய கோபத்தின் உச்சியில் இருந்தாலும் இவர்களை அவர்களால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். எந்த ஒரு முட்டாள் தனமான விஷயத்தையும் அவசரப்பட்டு செய்ய மாட்டார்கள். இக்கட்டான சூழ்நிலையை கூட எப்படி சமாளிப்பது? என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். எனவே இவர்கள் மன அழுத்தத்தில் தள்ள பட்டாலும் அதிலிருந்து சுலபமாக வெளியே வந்துவிடுவார்கள்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை கையாளுவதில் தலைமை பண்பை கொண்டிருப்பார்கள். எனவே இவர்களால் எத்தகைய பிரச்சினைகளையும் தலைமையேற்று சிறப்பாக நடத்தக் கூடிய திறமை உண்டு. இதனால் மன அழுத்தம் என்பது இவர்களுக்கு பெரிய பிரச்சனை அல்ல. மன அழுத்தத்தில் இருக்கும் மற்றவர்களை கூட இவர்களால் அமைதிப்படுத்த முயற்சி செய்ய முடியும். மற்றவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்க முடியும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்கள் மன அழுத்தத்தை எளிமையாக கையாண்டு விடுவார்கள். இவர்களை சுற்றி இடியாப்பச் சிக்கல் போல எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் ஒன்று ஒன்றாக எடுத்து விடுவித்து விடுவார்கள். அந்த அளவிற்கு பொறுமை இவர்களிடம் முதலில் இருக்கும். மன அழுத்தத்தோடு போராடும் பொழுது சமநிலை பெற நிறையவே மெனக்கெடுவார்கள். முதலில் அவர்களை சுற்றி என்ன நடக்கிறது? என்பதை உணர்ந்து கொள்ள முயற்சி செய்வார்கள். அதன் பிறகு அதிலிருந்து எப்படி வெளிவருவது? என்று யோசனை புரிவார்கள். எனவே இவர்களால் மன அழுத்தத்திலிருந்து சுலபமாக வெளியேற முடியும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலித்தனத்துடன் இருப்பவர்கள். இவர்களை சுற்றி ஒரு பிரச்சினை நடக்கும் பொழுது அதை இன்னும் பெரிதாக்க முயற்சிக்க மாட்டார்கள். அதை எப்படி அமைதி பெற செய்வது? என்பதில் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். மற்ற ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலும் மகர ராசிக்காரர்களிடம் ஆலோசனை கேட்டால் சரியான தீர்வு கொடுப்பார்கள். அந்த அளவிற்கு மன அழுத்தத்தை சிறப்பாக கையாளக்கூடிய ராசிகளில் மகர ராசியும் ஒன்றாகும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்கள் அறிவில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். எந்த ஒரு விஷயத்தையும் எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாகக் கூறாமல் பிரச்சனைக்கு உரியவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசித் தீர்ப்பார்கள். உணர்வு ரீதியாக இவர்களுக்கு வரும் பிரச்சனைகளை கூட மிகுந்த நிதானத்துடன் கையாளுவார்கள். சட்டென உணர்ச்சி வசப்பட்டாலும் அடுத்த நிமிடத்தில் சமயோசிதமாக செயல்படுவார்கள். அமைதியான மன நிலைக்கு வரும் வரை பொறுமையை கடைபிடிப்பார்கள். எனவே இவர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிப்பது சுலபமான விஷயம் தான் என்கிறது ஜோதிடம்.