- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை 6-10-2025 நிறைந்த பௌர்ணமி நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்

நாளை 6-10-2025 நிறைந்த பௌர்ணமி நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

நிலையில்லாத இந்த வாழ்க்கையில், நிலையான மனது இருந்தால் மட்டுமே வாழ்க்கை வெற்றியை நோக்கி பயணிக்கும். குழப்பமான பிரச்சனைகள் வந்தால் கூட, தெளிவான மனநிலையில் இருந்தால், குழப்பங்களுக்கு உண்டான தீர்வை சுலபமாக நம்மால் எடுக்க முடியும்.

மனக்குழப்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால், சந்திர பகவானின் ஆசிர்வாதம் நமக்கு வலுவாக கிடைக்க வேண்டும். சந்திர பகவானின் அனுகிரகம் கிடைக்க வேண்டும் என்றால், பௌர்ணமி வழிபாடு சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும். நாளைய தினம் சந்திரனுக்கு உரிய திங்கட்கிழமையோடு சேர்ந்து பௌர்ணமி திதி வரவிருக்கிறது.

- Advertisement -

இந்த நாளில் மனக்குழப்பத்திலிருந்து வெளிவர நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரம், உச்சரிக்க வேண்டிய ஒரு எளிமையான மந்திரத்தை பற்றி ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

மனம் தெளிவு பெற பௌர்ணமி பரிகாரம்

பௌர்ணமி அன்று மாலை 6:30 மணிக்கு மேல் நிலவு உதயமாகும் சமயத்தில், நிலவு வெளிச்சம் உங்கள் மீது விழக்கூடிய இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி டம்ளர் நிரம்ப சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நிலவு வெளிச்சத்தில் வைக்க வேண்டும். தண்ணீருக்கு முன்பாக நீங்கள் சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். உங்களுடைய மன குழப்பம் என்ன. அந்த குழப்பம் சரியாக வேண்டும் என்று, சந்திர பகவானிடம் சொல்லி, மனம் உருக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கொஞ்ச நேரம் அந்த நிலவு வெளிச்சத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும். உங்கள் முன்பு இருக்கும் தண்ணீரிலும் நிலவின் நேர்மறை ஆற்றல் முழுவதும் இறங்கிவிடும். சந்திர பகவானை மனதார நேர்மறையோடு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 1/2 மணி நேரம், 1 மணி நேரம், 2 மணி நேரம் கூட இந்த பிரார்த்தனையில் நீங்கள் ஈடுபடலாம்.

எவ்வளவு நேரம் சந்திர பகவான் ஒளியில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்களோ, அவ்வளவு  நேர்மறை ஆற்றல் உங்களுடைய உடம்புக்குள் புகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரார்த்தனையை செய்துவிட்டு, அந்த ஒரு டம்ளர் தண்ணீரை, அந்த இடத்தில் இருந்தே குடித்து விடுங்கள். பிறகு அந்த பௌர்ணமி நிலவைப் பார்த்து உங்கள் வாழ்நாளில் வெற்றி பெற இந்த ஒரு வரி மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள்.

- Advertisement -

வெற்றி தரும் மந்திரம்

சகல காரிய ஜெயப்பிரதே ஜெய ஜெய !
Sagala karya jayapradhe jaya jaya !

மந்திரம் இவ்வளவுதான். இந்த மந்திரத்தை சாதாரண நாட்களில் சொல்லும் போதே, உங்களுக்கான வெற்றி உங்களை தேடி வரும். பௌர்ணமி நிலவு முன்பு இந்த மந்திரத்தை சொன்னால், கேட்கவே வேண்டாம். வெற்றி வாகையை சூட உங்களுக்கு நீங்களே தயாராகிக் கொள்ளலாம். அதிசக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை அந்த அம்பாளை நினைத்துக் கொண்டு சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: ப்ரோமோஷன் கிடைக்க முருக வழிபாடு

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், பௌர்ணமி நிலவு ஒலியில் அம்மன் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொன்னாலும், இரட்டிப்பு மடங்கு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்