- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval06-06-2024 அன்று செய்ய வேண்டிய அமாவாசை பரிகாரம்

06-06-2024 அன்று செய்ய வேண்டிய அமாவாசை பரிகாரம்

- Advertisement -

06-06-2024 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வைகாசி மாதத்தின் அமாவாசை திதியானது வரவிருக்கின்றது. இந்த அமாவாசை திதி அன்று குரு, சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், இந்த 5 கிரகங்களும் ஒன்றாக சேர்ந்து ரிஷப ராசியில் அமர போவதால், இந்த அம்மாவாசை ஒரு அறிய அமாவாசையாக ஜோதிடர்களால் சொல்லப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் ரோகிணி நட்சத்திரம் அன்று, இந்த அமாவாசை வருவது மேலும் ஒரு சிறப்புக்குறிய விஷயமாகும். இந்த அமாவாசை திதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் முன்னோர்கள் சாபம் விலகும். கர்மா குறையும். முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். இதனால் நம்முடைய குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

குறிப்பாக இந்த வைகாசி மாதம் வரும் அமாவாசை, மஹாளய அமாவாசைக்கு இணையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அமாவாசையில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளைப் பற்றியும், செய்ய வேண்டிய தானத்தை பற்றியும் சில தகவல்களை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

06-06-2024 அமாவாசை பரிகாரம்

இந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பண காரியங்களை தவறாமல் செய்து விடுங்கள். நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு எந்த வழிபாடுமே செய்ய முடியவில்லை, தடைப்பட்டு கொண்டே வருகிறது, குடும்பத்தில் எந்த ஒரு நல்ல காரியம் கூட நடக்க வழி இல்லாமல் இருப்பவர்கள், இந்த அமாவாசை திதியில் முன்னோர்களின் நினைத்து வழிபாடு செய்தால் உங்கள் குடும்பத்தில் அடுத்தடுத்த நல்லது நடக்கும்.

- Advertisement -

என்னுடைய மகன் வாழ்க்கை சரியாக அமையவில்லை, என்னுடைய மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை, என்னுடைய வாரிசுகள் எல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறது என்பவர்களும், இந்த அமாவாசை தேதியில் முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள். உங்கள் குடும்பம் சீர்படும்.

வரக்கூடிய அமாவாசை நாள் அன்று அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் சமைத்து விட வேண்டும். பூஜை அறையில் முன்னோர்களின் படத்திற்கு முன்பு படையல் போட்டு, வழிபாடு செய்து விட்டு, காக்கைக்கு சாதம் வைத்துவிட்டு பின்பு, தான் சாப்பிட வேண்டும்.

- Advertisement -

இந்த அமாவாசையில் உங்களது முன்னோர்களை நினைத்து 1 வேட்டி, 1 துண்டு, 1 புடவை, 1 ரவிக்கை துணி வாங்கி, அமாவாசை வழிபாட்டில் படையலோடு வைத்து வழிபாடு செய்யுங்கள். வழிபாட்டை முடித்துவிட்டு இந்த துணிமணிகளோடு வெற்றிலை, பாக்கு, பூ, பழம் உங்களால் முடிந்த ஒரு காணிக்கையை வைத்து இதை அப்படியே ஒரு ஏழைக்கு தானமாக கொடுத்து விடுங்கள்.

உங்கள் வீட்டு குப்பையை எடுத்துச் செல்லும் துப்புரவு தொழிலாளி, உங்கள் வீட்டு சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளி, உங்கள் வீதியில் கீரை விற்கும் பாட்டி தாத்தா யாருக்காவது இந்த துணியை தானம் கொடுத்து விடுங்கள். ரொம்ப ரொம்ப நல்லது. முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

இது மட்டும் அல்லாமல் உங்களால் முடிந்த உணவு பொருளை அன்றைய தினம் வயதானவர்களுக்கு வாங்கி தானம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும். நம் குடும்பத்திற்கு நல்லதை மட்டுமே நினைப்பது நம்முடைய முன்னோர்கள் தான். நம்முடைய தாத்தா பாட்டி தான், நமக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்று வந்தால் நமக்கு முன்பாக, நம் குல தெய்வத்திடம் சென்று முறையிடக்கூடிய சக்தியும் இவர்களுக்கு தான் இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: தீராத பிரச்சினைகள் தீர செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய வழிபாடு

உங்கள் குடும்பம் கஷ்டத்தில் இருந்தால், வரக்கூடிய அமாவாசை தினத்தில் தவறாமல் முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்கள் குடும்பம் கஷ்டத்தில் இருந்து வெளிவரும். செய்த கர்மாவிலிருந்து வெளிவரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்