உங்கள் தொழிலில் இருக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டுமா? 6நாள் முருகன் வழிபாடு போதும்.

murugan

தொழிலில் உள்ள தடைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்றால் அந்த முருகனை மனதார வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும். புதிய தொழில் செய்பவர்களாக இருந்தால் அந்த திருச்செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு தொடங்கும் பழக்கத்தை நம்மில் சிலர் வைத்துள்ளோம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். நாம் செய்யும் தொழிலானது பெரிய அளவில் இருந்தாலும் சரி, சிறிய அளவில் இருந்தாலும் சரி, அதில் பல தடைகளும், பிரச்சனைகளும் ஏற்படுவது இயற்கைதான். நம் தொழிலில் இப்படிப்பட்ட தடைகள் வந்தாலும், அதனை எதிர் கொண்டு, சுலபமாக அந்த தடையில் இருந்து விடுபட்டு, நல்ல முன்னேற்றம் அடைந்து, நல்ல லாபத்தினை விரைவாக பெற முருகப் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இந்தப் பதிவில் காண்போமா.

murugan

சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம் (தத்புருஷ முகம்), ஈசானம், அதோமுகம் என்ற ஆறு முகங்களை உடையவன் அந்த ஆறுமுகப் பெருமான். அந்த முருகப்பெருமானின் ஆறு முகங்களைக் கொண்ட திருவுருவப் படத்தின் முன்பு, ஆறு வகையான பழ வகைகள், ஆறுவகையான பூக்கள், வெற்றிலை பாக்கு வாழைப்பழம் கொண்ட தாம்பூலம் ஆறு இவைகளை வைத்து விடவேண்டும்.

அந்த ஆறுமுகனை மனதார வேண்டிக்கொண்டு முதல் முகமான ‘சத்யோஜாதம்’ என்ற பெயரினை உச்சரித்து, மல்லிகைப்பூவினால் ‘ஓம் முருகா’ என்ற மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். ஆறு முகத்தின் பெயரைக் கூறி பின்வருமாறு அர்ச்சனை செய்யும் 6 முறையும் ‘ஓம் முருகா’ என்ற இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

om

இரண்டாவதாக துளசியினால் ‘வாமதேவம்’ என்ற பெயரை உச்சரித்து விட்டு ‘ஓம் முருகா’ என்ற மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். வாமதேவம் என்பது விஷ்ணு அம்சம் என்பதால் துளசிக்கு முக்கிய பங்கு உண்டு.

- Advertisement -

மூன்றாவதாக ‘அகோரம்’ என்ற பெயரை உச்சரித்து விட்டு அரளிப் பூக்களால் ‘ஓம் முருகா’ என்ற மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அசுரர்களைக் கொன்ற அசுரன் முகம் அகோர முகம்.

Murugan_ Swamimalai

நான்காவதாக ‘தத்புருஷ’ முகம் என்ற பெயரை உச்சரித்து விட்டு வாசனையுள்ள ஒரு மலரால் ‘ஓம் முருகா’ என்ற மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்யவேண்டும். இந்த முகம் சாந்த ஸ்வரூப முகமாக கூறப்படுகிறது.

ஐந்தாவதாக ‘ஈசானம்’ என்ற பெயரை கூறி, வில்வத்தால் ‘ஓம் முருகா’ என்ற மந்திரத்தை உச்சரித்து அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த முகம் சிவபெருமானின் முகமாக கூறப்படுகிறது.

Murugan_ Swamimalai

ஆறாவதாக கூறப்படும் அதோமுகம் என்ற பெயரை உச்சரித்துக் கொண்டு எல்லா புஷ்பங்களையும் ஒரு சேர எடுத்து ‘ஓம் முருகா சரணம்’ என்ற மந்திரத்தை கூறி மனதார அர்ச்சனை செய்து அந்த முருகனை வழிபட வேண்டும். தீப தூப ஆராதனைகள் காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

இப்படியாக உங்கள் ஆழ்மனதில் அந்த முருகப்பெருமானே நினைத்துக் கொண்டு ஆறு நாட்கள் தொடர்ந்து இந்த பூஜையை நீங்கள் செய்து வந்தால் உங்களில் தொழிலில் இருக்கும் தடைகளானது சுலபமாக நீக்கப்பட்டு, நல்ல லாபமும், நல்ல முன்னேற்றமும், அடைவதற்கு தேவைப்படும் வழிகளை அந்த ஆறுமுகன் நிச்சயம் காட்டுவார் என்பது உண்மை. உங்களின் இந்தப் பூஜையுடன் சேர்த்து விடாமுயற்சியும் தொடரப்பட வேண்டும்.

இதையும் படிக்கலாமே
வீண் விரயங்களை தவிர்த்து பணத்தை எப்படி சேர்ப்பது?

English Overview:
Here we have Thozhil valarchi pariharam in Tamil. Thozhilil munnera vazhipadu in Tamil. Thozhil prachanai theera in Tamil. Thozil thadai vilaga in Tamil.