வீண் விரயங்களை தவிர்த்து பணத்தை எப்படி சேர்ப்பது?

pursewithcash

சிலருக்கு வருமானமானது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் பணம் நம் வீட்டில் தங்காது. வீண் செலவுகள் ஏற்பட்டு உடனடியாக செலவாகிவிடும். பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு கஷ்டம் என்றால் அதை வீண்செலவாகாமல் சேமித்து வைப்பது அதைவிட மிகவும் கஷ்டம். லட்ச ரூபாய் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட சிலரால் சேமிக்க முடியாது. இதற்கு என்ன காரணம்? நம் வீட்டிற்கு வரும் பணத்தை நாம் எப்படி எந்த இடத்தில் வைக்கின்றோம் என்பதைப் பொருத்து தான் அந்தப் பணமானது நம் வீட்டில் நிரந்தரமாக இருக்குமா என்பதையும் நிர்ணயிக்கும்.

money

பொதுவாக நாம் அனைவரும் பணத்தை இரும்பு பெட்டியில் தான் வைப்போம். ஆனால் அப்படி வைப்பது தவறு. இரும்புப் பெட்டியில் பணம் வைப்பவர்களாக இருந்தால் அதை ஒரு துணிப்பையில் சுற்றித் தான் வைக்க வேண்டும். அந்தப் துணிப்பை மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ இருந்தால் இன்னும் சிறந்தது. அந்த காலத்தில் நமது தாத்தாக்கள் எல்லாம் மஞ்சள் பையில் தான் பணத்தை வைத்திருப்பார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. நீங்கள் பணம் வைத்திருக்கும் அந்த இடத்தில் பணத்தை தவிர மற்ற பொருட்களை வைக்கக்கூடாது. அதாவது முக்கியமான ரசீதுகள் இருந்தால் சிலர் அதை பணம் வைக்கும் இடத்தில் வைப்பவர்களாக இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது.

நம் பையிலிருந்து செலவிற்காக எடுக்கப்படும் பணத்தை மொத்தமாக எடுத்து விடக்கூடாது. அதாவது பையில் பணத்தொகை எப்பொழுதும் மிச்சம் இருக்க வேண்டும். சுத்தமாக துடைத்து எடுத்து விடக் கூடாது. எந்தப் பொருள் ஒரு இடத்தில் இருக்கின்றதோ அந்தப் பொருளானது அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் வந்து சேரும். வெற்று இடமாக இருந்தால் அந்த இடத்தில் எதுவும் வந்து சேராது.

money

நீங்கள் பணம் வைத்துள்ள இடத்தில் சிறிய கண்ணாடி, சந்தன கட்டை, உப்பு, பச்சை கற்பூரம், குங்குமம் இது போன்ற பொருட்களை வைப்பது நேர்மறை ஆற்றலை உண்டாக்கி பணத்தை தக்கவைத்துக் கொள்ளும். முடித்தால் ஒரு தேக்கு மரகட்டையும் வைத்துக் கொள்ளலாம். தேக்குக் கட்டயானது பணத்தை தேக்கி வைக்கும் என்று கூறுவார்கள்.

- Advertisement -

தேக்கு மரக்கட்டையாலான சிறிய அளவு உண்டியலாக இருந்தால் கூட அதை வாங்கி வைத்து அதில் பணத்தை சேமிக்கலாம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று வாசனையுள்ள மலர்களை பணம் வைக்கும் இடத்தில் வைத்து, தூபம் காட்டுவது பணவரவை அதிகரித்து வீண் விரயம் ஆகாமல் சேமிக்கவும் இது நல்ல பலனை தரும்.

Money

பணம் விரையமாகக் கூடாது என்பதற்காக பணத்தை எந்த செலவும் செய்யாமல் கஞ்சத்தனமாக எடுத்தும் வைக்கவும் கூடாது. தேவைப்படும் அவசியமான செலவிற்கு பணத்தை செலவிடத் தான் வேண்டும். பணத்தை நாம் எடுத்து சிறிது சிறிதாக செலவு செய்தால் தான் அது மீண்டும் மீண்டும் நம்மிடம் வந்து கொண்டே இருக்கும் என்பதும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள உண்மை. இறைக்கும் கிணறுதான் சுரக்கும் என்ற பழமொழியை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் அல்லவா? உங்களால் முடிந்தவரை அனாவசியமான ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணமானது உங்களிடம் இருந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே
கொடு என்றால் இறைவன் கொடுப்பதும் இல்லை.. வேண்டாம் என்றால் விடுவதுமில்லை.

English Overview:
Here we have Panam sera tips Tamil. Panam sera pariharam Tamil. Selvam sera enna seiya vendum. Selvam sera valigal Tamil.