சில பேர் வாழ்க்கை நரகத்தில் வாழ்வது போல ரொம்பவும் கொடுமையாக இருக்கும். பணகஷ்டம் மன கஷ்டம், எதிரி தொல்லை, கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் என்று, உங்களுடைய வாழ்க்கை எதில் சிக்கி இருந்தாலும் சரி, நாளைய தினம் நரசிம்மரை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்து பாருங்கள். நரகத்திலிருந்து விடுபடக்கூடிய வாய்ப்பை அந்த நரசிம்மமூர்த்தி உங்களுக்கு கொடுப்பார். நாளைய தினம் அப்படி என்ன சிறப்பு, ஆன்மீகம் சார்ந்த சில தகவல்கள் மற்றும் எளிமையான வழிபாடு இந்த பதிவில் உங்களுக்காக.
7-6-2025 சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
சரி, இந்த நாளுக்கு முதலில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம். சனிக்கிழமை காலை 6:45 மணி வரை ஏகாதசிதி இருக்கிறது. இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்தால் தங்க விமானத்தில் வைகுண்டம் செல்லும் பாக்கியம் நமக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாளில் சித்திரை நட்சத்திரமும், சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது. சித்திரை, செவ்வாய்க்கு உரிய நட்சத்திரம். ஸ்வாதி ராகுக்கு உரிய நட்சத்திரம். இவர்கள் இரண்டு கிரகங்களும் நமக்கு சரிவர வேலை செய்தாலே போதும். நரக வாழ்க்கை இருக்காது. இவர்களை சரி செய்யக்கூடிய வேலையை நரசிம்மமூர்த்தி பார்த்துக் கொள்வார்.
சனிக்கிழமை நரசிம்மர் வழிபாடு
சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மரை யார் வழிபாடு செய்தாலும் சரி, அவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் சொர்க்கமாக தான் இருக்கும். நரசிம்மரை வழிபட்டால், உங்களுடைய தீராத துன்பங்கள் துயரங்கள் எதுவாக இருந்தாலும், பணக்கஷ்டமாக இருந்தாலும் கடன் சுமையாக இருந்தாலும் அது அந்த நொடி பொழுதிலேயே உங்களை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.
உங்கள் வீட்டு பக்கத்தில் நரசிம்மர் கோவில் இருந்தால், நாளை தவறாமல் அந்த கோவிலுக்கு சென்று, 11 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பானகம் நரசிம்மருக்கு நெய்வேத்தியம் செய்து, அந்த பானகத்தை 11 பேருக்கு உங்கள் காய்களால் தானம் கொடுத்தால் போதும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் அந்த நிமிடமே உங்களை விட்டு விலகி விடும். எவ்வளவு பெரிய எதிரி தொல்லையை கடன் தொல்லை கண் திருஷ்டியாக இருந்தாலும் அது உங்களை விட்டு சுலபமாக விலகிவிடும்.
நரசிம்மர் கோவிலுக்கு செல்ல முடியவில்லை, நரசிம்மர் கோவில் வீட்டு பக்கத்தில் இல்லை என்றால் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக பானகம் நெய்வேதியும் செய்துவிட்டு, ஒரு விளக்கு ஏற்றி மனதார பிரார்த்தனை செய்தாலும், உங்களுடைய கஷ்டங்கள் தீரும். நரசிம்மரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள் “ஓம் நரசிம்மமூர்த்தியே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள்.
இதையும் படிக்கலாமே: 666 பிரபஞ்ச வசிய நாளில் மகாலட்சுமி விளக்கு பரிகாரம்
நெய்வேத்தியம் செய்த பாகத்தை வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கு தானமாக கொடுப்பதும் சிறப்பு வாய்ந்த பலனைத் தரும். நாளை சுவாதி நட்சத்திரம் சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளை யாரும் தவற விடாதீங்க. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு நாள்பட்ட துன்பத்திலிருந்து விடுதலையை கொடுக்கும் என்று இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.