எந்த கிழமையில் எந்த பொருளை வாங்கினால் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா? இந்த பொருட்களை வாங்கினால் கட்டாயம் தரித்திரம் உண்டாகுமா?

rice-date-calendar

ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுமை இருக்கும். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு உரிய கல் உப்பு வாங்குவது எப்படி செல்வத்தை அதிகரிக்க செய்யுமோ! அதே போல ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு பொருட்கள் வாங்கும் பொழுது நமக்கு அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும். அந்த நாளில் அந்த பொருட்களை வாங்கினால் நீண்ட நாள் உழைக்கும். அந்த வரிசையில் 7 நாட்களுக்கும் நாம் வாங்க வேண்டிய பொருட்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

திங்கட்கிழமை:
basmati-rice
திங்கட் கிழமையில் சந்திர பகவான் மற்றும் சிவபெருமானுக்கு உகந்த கிழமை ஆகும். இந்நாட்களில் சந்திரனை வழிபடுவதும், சிவபெருமானை வழிபடுவதும் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும். மேலும் சந்திரனுக்கு உரிய வெள்ளை நிறத்தில் இருக்கும் பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை கூட்டும். அந்த வகையில் திங்கட்கிழமையில் அரிசி வாங்குவது, இனிப்பு பொருட்கள் வாங்குவது, பால் பொருட்கள், தானியங்கள், மின்சாதன பொருட்கள், எழுதுபொருள் ஆகியவற்றை வாங்கும் பொழுது அதிர்ஷ்டம் உண்டாகும்.

செவ்வாய்க்கிழமை:
home
செவ்வாய்க் கிழமையில் சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களை செய்வது நல்லது. பால் சார்ந்த பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. செவ்வாயில் ஆஞ்சநேயரை வழிபடலாம். மரம் சார்ந்த பொருட்களை வாங்குவது அதிஷ்டம் தரும். தோல் பொருட்கள், உலோகங்கள் வாங்குவதற்கு நல்ல நாள் அல்ல.

புதன்கிழமை:
veggitables
புதன் கிழமையில் புதபகவான், சித்தி, புத்தி ஆகியோரை வழிபட ஏராளமான நன்மைகள் நடைபெறும். அன்று எழுது பொருள் வாங்குவது, பச்சை காய்கறிகள் வாங்குவது, கல்விக்கு தேவையான பொருட்கள், விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை வாங்குவது யோகம் தரும். வீட்டு அலங்கார பொருட்களை வாங்குவதற்கும் சிறந்த நாளாக இருக்கும். அரிசி வாங்குவது, மருந்து வாங்குவது, வீடு, மனை வாங்குவது, பாத்திரம் வாங்குவது போன்ற பொருட்களை தவிர்ப்பது உத்தமம்.

வியாழன்கிழமை:
mobile-searching
வியாழன் கிழமைகளில் குரு பகவானையும், பிரகஸ்பதியையும் வணங்கி வர நன்மைகள் நடைபெறும். மின்னணு சாதனங்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு சிறந்த கிழமை. அசையும் சொத்துக்கள் வாங்க சிறந்த நாள் வியாழக்கிழமை ஆகும். மேலும் உடையும் கண்ணாடி, கண்ணாடி சார்ந்த பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பூஜை பொருட்கள், கூர்மையான பொருட்கள் ஆகியவற்றை கட்டாயம் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம்.

வெள்ளிக்கிழமை:
ellu 1-compressed
வெள்ளிக் கிழமையில் கல் உப்பு, கருப்பு எள், சமையல் எண்ணெய், விளக்கு ஏற்றும் எண்ணெய், உலோகங்கள், மரம் சார்ந்த பொருட்கள், வீட்டை கூட்டும் துடைப்பம் ஆகியவற்றை வாங்குவது நல்ல பலன்களைக் கொடுத்து அதிகம் செல்வத்தைச் சேர்க்கும். மேலும் மசாலா பொருட்கள், கத்தி, கத்தரிக்கோல், இரும்பு சார்ந்த பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது உத்தமம். வெள்ளிக் கிழமையில் மசாலா அரைக்க கூடாது தரித்திரம் உண்டாகும்.

சனிக்கிழமை:
gardening1
சனிக் கிழமையில் கடுமையான எந்த பொருட்களையும் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம். அதிக எடையுள்ள பொருட்கள், வீடு, மனை போன்றவற்றை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. சனிக்கிழமையில் இந்த பொருட்களை வாங்கும் பொழுது கடன், வறுமை, நோய் ஆகிய பிரச்சனைகள் வந்து சேரும். தோட்டம் சார்ந்த பொருட்கள், ஆடைகள் வாங்க சிறந்த நாளாக அமையும்.

ஞாயிற்றுக்கிழமை:
wall mirror
ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானை வழிபடுவது கண் பார்வை குறைபாடுகளை நீக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். கண்ணாடி சார்ந்த பொருட்களை வாங்குவது விசேஷமான பலன்களைக் கொடுக்கும். சிவப்பு நிறத்தில் இருக்கும் பொருட்கள், கோதுமை தானியம், வண்டி, வாகனம் ஆகியவற்றை வாங்க சிறந்த நாளாக ஞாயிற்றுக்கிழமை அமையும்.